- Home
- Cinema
- தொலைக்காட்சி
- முத்துவிடம் திமிர்காட்டிய சீதாவை லெஃப்ட் ஹேண்டில் டீல் பண்ணிய மீனா - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
முத்துவிடம் திமிர்காட்டிய சீதாவை லெஃப்ட் ஹேண்டில் டீல் பண்ணிய மீனா - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
சிறகடிக்க ஆசை சீரியலில், மீனாவிடம் சண்டைபோட்டு இனி உன்கூட பேசவே மாட்டேன் என கூறிச் சென்ற சீதாவுக்கு முத்து அட்வைஸ் பண்ணி இருக்கிறார். அதைப்பற்றி பார்க்கலாம்.

Siragadikka Aasai Serial Today Episode
விஜய் டிவி சிறகடிக்க ஆசை சீரியலில் முத்துவால் தான் அருண் சஸ்பெண்ட் ஆனதாக கூறி மீனாவிடம் சண்டைபோட்ட சீதா, முத்துவை அருணிடம் மன்னிப்பு கேட்க சொல்ல, அதற்கு முடியவே முடியாது என மீனா மறுத்துவிட்டார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி, இறுதியாக, இனி உன் கூட பேசவே மாட்டேன் என சொல்லிவிட்டு சென்றார் சீதா. இதையடுத்து இன்றைய எபிசோடில், தன் மகள்கள் இருவரும் சண்டையிட்டு பிரிந்ததால், மன உளைச்சலில் இருக்கும் சந்திரா, சரியாக சாப்பிடாமல் இருந்ததால் மயக்கம் போட்டு விழுகிறார். இதையடுத்து அவரை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கிறார் சத்யா.
மயங்கி விழுந்த சந்திரா
பின்னர் மீனா மற்றும் சீதாவுக்கு போன் போட்டு அம்மா மயக்கம் போட்டு விழுந்த விஷயத்தை சொல்கிறார் சத்யா. இதையடுத்து இருவருமே பதறியடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு செல்கின்றனர். முதலில் சீதா ஆஸ்பத்திரிக்கு வந்துவிட, அதன்பின்னர் பதற்றத்துடன் உள்ளே வரும் மீனா, அம்மா எங்க சீதாவிடம் கேட்க, அவர் வாயைத்திறக்காமல் நிற்கிறார். இதனால் கோபமடைந்த முத்து, இந்த நேரத்தில் கூட இப்படி பிடிவாதமாக இருந்தால் எப்படி சீதா, உன் கோபத்தை காட்ட இது நேரமில்லை என சொல்கிறார். ஆனால் அதற்கும் வாய் திறக்காமல் திமிராக நிற்கிறார் சீதா.
முரண்டு பிடிக்கும் சீதா
இதையடுத்து அங்கு வந்த சத்யாவிடம் என்ன ஆச்சு என முத்து கேட்க, மீனாவுக்கும் சீதாவுக்கு சண்டை வந்ததில் இருந்தே அம்மாவுக்கு மனசு சரியில்ல. அவங்க சரியா சாப்பிடாம இருந்தாங்க. அதனால தான் மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க என கூறுகிறார். இதையடுத்து பேசும் முத்து, குடும்பத்தில் இருக்குறது 4 பேர், ஒருத்தருக்கொருத்தர் ஆதரவா தான் இருக்கணும். அதைவிட்டுட்டு சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் சண்டை போட்டுகிட்டு இருக்கக் கூடாது. நான் மறுபடியும் சொல்றேன் இந்த மாதிரி பேசாம இருக்குறதெல்லாம் விட்று என சீதாவிடம் முத்து சொல்ல, அதை கண்டுகொள்ளாமல் இருக்கிறார் சீதா.
பதிலடி கொடுத்த மீனா
முத்து இவ்வளவு பேசியும் மனம் இறங்காத சீதாவை பார்த்து கடுப்பான மீனா, அவ தான் பேசமாட்டேங்குறால்ல, நீங்க ஏன் திரும்ப திரும்ப போய் அவகிட்ட பேசிகிட்டு இருக்கீங்க. அவ பேசாம இருந்தாலும் பரவாயில்ல விடுங்க. அம்மாவுக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது. இப்போ அது தான் முக்கியம் என சொல்கிறார் மீனா. பின்னர் வரும் டாக்டரிடம் அம்மாவுக்கு எப்படி இருக்கு என சீதா விசாரிக்கிறார். பயப்படும் படி எதுவும் இல்லை என கூறும் டாக்டர், சந்திராவுக்கு BP இருப்பதாகவும், ஒரு வாரம் ரெஸ்ட் எடுத்தால் எல்லாம் சரியாகிவிடும் என கூறுகிறார். இதையடுத்து என்ன ஆனது என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.