- Home
- Cinema
- தொலைக்காட்சி
- அருணின் வேலைக்கு வேட்டு வைத்த முத்து... திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டது ஏன்? சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
அருணின் வேலைக்கு வேட்டு வைத்த முத்து... திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டது ஏன்? சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
சிறகடிக்க ஆசை சீரியலில் அருண் திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். அதன் பின்னணி என்ன? அவர் எதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்பதை பற்றி பார்க்கலாம்.

Siragadikka Aasai Serial Today Episode
சிறகடிக்க ஆசை சீரியலில் டிராபிக் போலீஸ் ஆக இருக்கும் அருண், அண்ணா நகர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்த நிலையில், அந்த வழியாக வந்த ஒரு இளைஞர் போலீசுக்கு பயந்து அவர்களிடம் சிக்காமல் தப்பிக்க, பைக்கில் வேகமாக சென்றிருக்கிறார். அப்போது அந்த வழியாக சென்ற பெண் மீது மோதிவிட்டு அங்கிருந்து தப்பிச் செல்கிறார். அப்போது அங்கு பணியில் இருந்த அருண், அடிபட்ட பெண்ணை கண்டுகொள்ளாமல், பைக்கில் வேகமாக சென்ற இளைஞரை துரத்திச் செல்கிறார். அப்போது அங்கு இருந்த முத்து, அடிபட்ட பெண்ணை காப்பாற்றி தன்னுடைய காரில் ஏற்றிக் கொண்டு, மருத்துவமனையில் சேர்க்கிறார்.
டிரெண்டான முத்து
முத்து அடிபட்ட பெண்ணை காப்பாற்றியதை அங்கிருந்த பொதுமக்களில் ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட, அது மிகவும் வைரலாகிறது. அனைவரும் முத்துவின் மனிதாபிமானத்தை பாராட்டுகிறார்கள். நியூஸ் சேனல்களிலும் அந்த வீடியோ ஒளிபரப்பாகிறது. அப்போது அது தொடர்பாக அங்கிருந்தவர்களிடம் கருத்து கேட்கையில், அவர்கள் முத்துவை பாராட்டி பேசியதோடு, அந்த பெண் அடிபட்டதை கண்டுகொள்ளாமல் சென்ற அந்த போலீஸ்காரரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என சொல்கிறார்கள். இந்த மேட்டரால் அருணுக்கு கெட்ட பெயரும் வருகிறது.
சஸ்பெண்ட் செய்யப்படும் அருண்
வீடியோ வைரலாகி, உயர் அதிகாரி வரை சென்றதால், அருண் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். இதையடுத்து வீட்டுக்கு வரும் அருண், தன்னை சஸ்பெண்ட் செய்த விஷயத்தை சொல்கிறார். இதைக்கேட்டு சீதா அதிர்ச்சி அடைகிறார். 3 நாளைக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக அருண் கூற, 3 நாள் தான என சொன்ன சீதாவிடம், மூன்று நாளோ, முப்பது நாளோ, அது ஒரு பிளாக் மார்க் ஆகிவிடும். அதனால் என்னுடைய புரமோஷனும் பாதிக்கும். கடைசி வரை அடுத்த பதவிக்கு போகவிடாமலே செய்துவிடுவார்கள் என ஃபீல் பண்ணி பேசுகிறார். அவரை சீதாவும் சமாதானப்படுத்துகிறார்.
முத்து மீது கோபத்தில் அருண்
சஸ்பெண்ட் செய்யப்பட்டதைவிட முத்து மீது தான் கோபத்தில் இருக்கிறார் அருண். ஏனெனில் முத்து பேசியது சோசியல் மீடியாவில் வைரலாகிவிட்டது. அதுவும் நான் தப்பு செய்தது போல் சாமர்த்தியமாக பேசி இருக்கிறான். இப்பவும் அவனால் தான் நான் சஸ்பெண்ட் ஆகி இருக்கேன். எல்லாரும் என்னை தப்பா நினைக்க வேண்டும் என்பதற்காக தான் அவர் அப்படி செஞ்சிருக்கான். என்னை பழிவாங்கிவிட்டான். என்னுடைய உண்மையைவிட அவனுடைய தந்திரம் ஜெயிச்சிடுச்சு. நான் என்னுடைய வேலையை தான் செஞ்சேன் என கோபமாக பேசுகிறார். இதையடுத்து என்ன ஆனது என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.