- Home
- Cinema
- தொலைக்காட்சி
- பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் மெகா ட்விஸ்ட்! தங்கமயில் கர்ப்பமாக இருக்கும் ரகசியத்தை உடைத்த மீனா - கதிகலங்கிய குடும்பம்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் மெகா ட்விஸ்ட்! தங்கமயில் கர்ப்பமாக இருக்கும் ரகசியத்தை உடைத்த மீனா - கதிகலங்கிய குடும்பம்!
Meena Unveils Thangamayil Pregnancy Secret:: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் தங்கமயில் கர்ப்பமாக இருக்கும் உண்மையை மீனா உடைக்கிறார். இதைக் கேட்டு பாண்டியன் மற்றும் கோமதி ஏன் அதிர்ச்சியடைந்தார்கள்? விறுவிறுப்பான எபிசோட் அப்டேட் இதோ.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 இன்றைய எபிசோட்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் தங்கமயில் கர்ப்பமாக இருப்பது முதல் அவர் தற்கொலை செய்ய முயன்றவது வரை மீனா எல்லா உண்மைகளையும் தனது வீட்டில் வெளிப்படுத்தியுள்ளார். ஆம், பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 767ஆவது எபிசோடில் செந்தில் தனது வீட்டில் மீனா மற்றும் தங்கமயில் இருவரும் ரகசியமாக பேசிக் கொள்வதை சொல்லிவிட்டார். இதனால் கடும் கோபம் அடைந்த கோமதி மீனாவிற்கு போன் செய்து அவரை உடனடியாக தனது வீட்டிற்கு வரும்படி கூறினார்.
அவரும் உடனே வீட்டிற்கு வர கோமதி, பாண்டியன் என்று அனைவரும் கேள்வி மேல் கேள்வி எழுப்பினர். வரதட்சணை கொடுமை புகார், போலீஸ் ஸ்டேஷன், கோர்ட், ஜெயில், ஹாஸ்பிடல் என்று எல்லா கொடுமைகளையும் அனுபவித்தோம். இதையெல்லாம் நீ மறந்துவிட்டாயா என்று பாண்டியன் கேட்டார். கடைசியில் தங்கமயிலிடம் ஏன் பேசினேன் என்ற காரணத்தை மீனா வெளிப்படுத்தினார்.
தங்கமயில் கர்ப்பம் உண்மை
ஆரம்பத்தில் நானும் அவருடன் பேசவே இல்லை. எனக்கும் அவர் மீது பயங்கர கோபம் இருந்தது. அதன் பிறகு அவரிடம் பேச வேண்டிய சூழல் ஏற்பட்டது. அவர் தற்கொலைக்கு செல்ல முயற்சித்தார். அதிலிருந்து நான் தான் அவரை காப்பாற்றி கூட்டிக் கொண்டு வந்தேன். அவரது வீட்டிலும் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை. வீட்டு சூழல் என்னிடம் வேலை கேட்டார். அதனால், நானும் ஒரு இடத்தில் அவரை வேலைக்கு சேர்த்துவிட்டேன். வயதானவரை பார்த்துக் கொள்ள வேண்டும். அதோடு சமையல் வேலைகளையும் செய்கிறார் என்றார்.
மீனா அதிரடி முடிவு
அப்போது தான் முக்கியமான விஷயமாக அவர் இப்போது கர்ப்பமாக இருக்கிறார் என்ற அதிர்ச்சியான விஷயத்தை வெளிப்படுத்தினார். இதைக் கேட்டு கோமதி மற்றும் பாண்டியனும் அதிர்ச்சி அடைந்தனர். முதலில் அவர்கள் நம்பவில்லை. பின்னர், டாக்டரிடம் சென்று மருத்துவ பரிசோதனை செய்து கொண்டது பற்றி கூறினார். தங்கமயிலை முழுமையாக பரிசோதனை செய்துவிட்டு டாக்டர் தான் அவர் கர்ப்பமாக இருப்பதாக கூறினார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் அப்டேட்
இது நடந்து கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேல் இருக்கும். இதைப் பற்றி முதலில் சரவணன் மாமாவிடம் தான் சொன்னார். ஆனால், அவர் நம்பவில்லை. அதுமட்டுமின்றி இது யாருடைய குழந்தை என்று கூட கேட்டார். சத்தியமாக அவர் அப்படித்தான் கேட்டார் என்றார். உங்களிடம் பேசுவதற்கு கூட உங்களை கோயிலுக்கு வரவழைத்தேன். தங்கமயில் அக்காவையும் வரவழைத்தேன். அதற்குள்ளாக அவரது அம்மா வந்து சண்டை போட்டுட்டாங்க.
Pandian Stores 2 Thangamayil pregnancy revealed
வீட்டிற்கு கூட வந்தாங்க. ஆனால், அவர்கள் கர்ப்பமாக இருப்பதை பற்றி சொல்லவில்லை என்று எல்லா உண்மைகளையும் வெளிப்படுத்தினார். இதைக் கேட்டு குடும்பத்தில் உள்ள அனைவரும் அதிர்ச்சி அடைந்ததோடு கடையில் வேலை செய்யும் சரவணனை அழைத்து வர பாண்டியன் கட்டளையிட்டார். அதாவது கடையை அடைக்க வேண்டாம், நீ கடையில் இருந்து கொண்டு சரவணனை வீட்டிற்கு வர சொல் என்று பாண்டியன் கூறினார். மேலும், அவனிடம் இதைப் பற்றி எதுவும் சொல்ல வேண்டாம் என்றார். இப்படியான சூழலில் அடுத்து பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.