- Home
- Cinema
- தொலைக்காட்சி
- அப்பா பாண்டியனிடமிருந்து கிடைத்த விடுதலை; குடி போதையில் செந்தில் – கடும் கோபத்தில் மீனா!
அப்பா பாண்டியனிடமிருந்து கிடைத்த விடுதலை; குடி போதையில் செந்தில் – கடும் கோபத்தில் மீனா!
Meena Getting Angry With Senthil in Pandian Stores 2 : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் மீனாவின் கோபத்திற்கு ஆளான செந்தில் அதனால் என்ன நடந்தது என்பது பற்றி பார்க்கலாம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 610ஆவது எபிசோடில் தனிக்குடித்தனம் சென்ற நிலையில் மீனாவை மட்டும் வேலைக்கு செல்ல வேண்டாம் என்று செந்தில் வீட்டிலேயே இருக்க சொல்லிவிட்டார். கணவர் பேச்சைக் கேட்டு மீனா வீட்டிலேயே இருந்துவிட்டார். தனது கணவர் வெளியில் ஆபிஸிற்கு சென்றிருப்பதாக மீனா நினைத்துக் கொண்டிருந்தார்.
காந்திமதியின் 75ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இந்த வாரம் என்ன நடக்கும்?
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இன்றைய எபிசோடு
ஆனால், ஆபிஸிற்கு சென்றுவிட்டு அப்படியே வீட்டிற்கு தேவையான ஃபர்னிச்சர் எல்லாவற்றையும் ஆர்டர் செய்துள்ளார். மேலும், நண்பர்களுடன் இணைந்து குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அவர் வரும் போது மணி நைட் 12 மணி இருக்கும். கூட்டுக் குடும்பமாக இருக்கும் போது செந்தில் ஒரு நாளும் குடித்துவிட்டு வரவில்லை. ஆனால், இப்போது தனிக்குடித்தனம் சென்று முழுவதுமாக 24 மணி நேரம் கூட ஆகவில்லை.
ஓஜி 17 நாட்கள் வசூல்: அந்த இடத்தில் தோல்வி, இது என்ன ட்விஸ்ட்?
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரோமோ
அதற்குள்ளாக மனைவியை தனியாக இருக்க சொல்லிவிட்டு ஆபிஸிற்கு சென்றுள்ளார். மேலும், முதலில் பால் காய்ச்சுவதற்கு ரூ.2500 கூட இல்லாமல் மீனாவிடம் கடனாக ரூ.2500 கேட்ட செந்தில் இப்போது சரக்கு அடிக்கவும், பர்னிச்சர் வாங்கவும் கட்டு கட்டாக காசை தண்ணீர் மாதிரி செலவு செய்கிறார். இதெற்கெல்லாம் காசு ஏது என்று கேட்ட போது உனக்கு உன்னுடைய மாமனார் கொடுத்த மாதிரி எனக்கு என்னுடைய மாமனார் கொடுத்தார் என்றார். ஆனால், எவ்வளவு என்பது குறித்து கூறவில்லை.
செந்தில் மற்றும் மீனா வாக்குவாதம்
என்றும் இல்லாத திருநாளாக செந்தில் இன்று குடித்துவிட்டு வந்தது மீனாவிற்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இதனால் இருவருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மீனா அழ ஆரம்பித்துவிட்டார். தனது நண்பர்களுடன் இணைந்து சரக்கு அடித்ததாகவும், இத்தனை வருடம் ஜெயில் வாழ்க்கை வாழ்ந்ததாகவஅப்பா பாண்டியனின் கொடுமையிலிருந்து விடுதலை கிடைத்ததாகவும் கூறிய செந்திலுக்கு இனிமேல் தான் ஒவ்வொரு விஷயமும் புரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்
இதில் சிக்கிக் கொண்டது மீனா தான். செந்தில் பற்றி மீனாவின் குடும்பத்திற்கு இனிமேல் தான் தெரியவரும். இப்போது தான் செந்தில் குடிக்க ஆரம்பித்திருக்கிறார். அதுமட்டுமின்றி கையில் காசு பணமும் நடமாட ஆரம்பித்துவிட்டது. ஆகையால் இனிமேல் செந்திலின் ஆட்டம் ஆரம்பமாகும். தடபுடலாக செலவு செய்ய ஆரம்பித்துவிட்டார். காசு கொடுத்து வேலை வாங்கிய செந்திலுக்கு இனிமேல் அந்த வேலை பறிபோகும் சூழல் உண்டாகும். அதன் பிறகு அப்பா சொன்னது நினைவிற்கு வரும். அதுவரையில் அவரது ஆட்டத்தை மட்டும் வேடிக்கை பார்க்க வேண்டிய சூழல் மீனாவிற்கும், அவருக்கு ஆறுதலாக இருக்கும் மீனாவின் அப்பா, அம்மாவிற்கும் வரும்.