- Home
- Cinema
- தொலைக்காட்சி
- கேன்சல் ஆன ஆர்டர்... நடுத்தெருவுக்கு வரும் மனோஜ்; பறிபோகும் சொத்து - பரபரப்பான திருப்பங்களுடன் சிறகடிக்க ஆசை
கேன்சல் ஆன ஆர்டர்... நடுத்தெருவுக்கு வரும் மனோஜ்; பறிபோகும் சொத்து - பரபரப்பான திருப்பங்களுடன் சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் வாங்கி இருந்த பெரிய ஆர்டர் திடீரென கேன்சல் ஆனதால், கடனாளியாக மாறி இருக்கிறார் மனோஜ். இதையடுத்து என்ன ஆனது என்பதை விரிவாக பார்க்கலாம்.

Siragadikka Aasai Serial Today Episode
சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜுக்கு ரோகிணி மூலம் பெரிய ஆர்டர் கிடைக்கிறது. அந்த ஆர்டர் கொடுத்த பெண்மணி, தாங்கள் புதிதாக கட்டி வரும் அபார்ட்மெண்டுக்கு தேவையான வீட்டு உபயோக பொருட்களை எல்லாம் உங்கள் ஷோரூமில் இருந்தே வாங்கிக் கொள்கிறோம் என்று கூறினார். மொத்தம் 250க்கும் மேற்பட்ட வீடுகளுக்கான பொருட்களை வழங்க வேண்டும் எனக் கூறி இருந்தார். மிகப்பெரிய ஆர்டர் என்பதால் கோடிக்கணக்கில் லாபம் கிடைக்கும் என்கிற மெதப்பில் இருந்தார் மனோஜ். அந்த ஆர்டருக்காக ஏற்கனவே 10 லட்சம் அட்வான்ஸ் பணமும் வாங்கி இருந்தார் மனோஜ்.
மனோஜுக்கு காத்திருந்த அதிர்ச்சி
அந்த ஆர்டர் கிடைத்த கையோடு, தன்னுடைய பிசினஸை டெவலப் பண்ணுவதற்காக 30 லட்சம் கடன் வாங்கி புது ஆபிஸெல்லாம் ஓபன் பண்ணி அலப்பறை செய்துவந்தார் மனோஜ். இந்த நிலையில், மனோஜின் ஆபிஸ் நஷ்டத்தில் ஓடி வருவதை அவரது மேனேஜர் ஜீவா சொன்ன நிலையில், தனக்கு ஆர்டர் கொடுத்த பில்டர் லேடியிடம் இருந்து மேலும் கொஞ்சம் அட்வான்ஸ் வாங்க முடிவெடுக்கிறார் மனோஜ். இதையடுத்து அந்த பெண்மணியின் ஆபிஸுக்கு செல்கிறார்கள். அங்கு சென்று அந்த லேடியை பார்க்க வேண்டும் என மனோஜ் சொன்னபோது தான் அங்குள்ள ஊழியர் ஒரு அதிர்ச்சி தகவலை சொல்கிறார்.
கேன்சல் ஆன ஆர்டர்
அந்த பெண்மணிக்கு தீவிரமாக காய்ச்சல் வந்து அவர் கோமா ஸ்டேஜுக்கு சென்றுவிட்டதாகவும் தற்போது மேனேஜர் தான் எல்லாவற்றையும் பார்த்து வருவதாக சொல்கிறார். அந்த மேனேஜர் யார் என்று பார்க்கும் போது, ஏற்கனவே மனோஜ் அவரிடம் வம்பிழுத்திருக்கிறார். இதனால் இவர்களுக்கு கொடுத்த ஆர்டரை கேன்சல் செய்துவிட்டு, அந்த பொருட்கள் தயாரிக்கும் இடத்திலேயே எல்லா ஆர்டரையும் கொடுத்துவிட்டதாக சொல்கிறார். வேண்டுமென்றால் நீங்கள் வாங்கிய 10 லட்சத்திற்கான பொருளை டெலிவரி செய்யுமாறு சொல்கிறார். இதனால் மனோஜ் மற்றும் ரோகிணி அதிர்ச்சி அடைகின்றனர்.
வீட்டை எழுதி வாங்கும் நபர்
மறுபுறம் மனோஜுக்கு இந்த ஆர்டர் கேன்சல் ஆன விஷயம் அவருக்கு கடன் கொடுத்த நபருக்கு தெரியவர, அவர் மனோஜின் வீட்டுக்கு செல்கிறார். அங்கு சென்று அனைவரிடம் மனோஜ் கடன் வாங்கிய விஷயத்தை சொல்லும் அவர், இந்த வீட்டை அசுரன்ஸுக்கு எழுதி தருமாறு அண்ணாமலையிடம் கையெழுத்து கேட்கிறார். தனக்கு பணம் தராவிட்டால் வீட்டில் உள்ள யாராவது ஒருவரை தூக்குவேன் என்றும் மிரட்டுகிறார். இதனால் டென்ஷன் ஆன முத்து அந்த நபருடன் வாக்குவாதம் செய்கிறார். இதையடுத்து என்ன ஆனது? அண்ணாமலை கையெழுத்து போட்டாரா? இல்லையா? என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.

