MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • மகாநதி சீரியலில் எதிர்பாராத ட்விஸ்ட்.! காவேரி இறந்துவிட்டாளா? ஏமாற்றத்தில் ரசிகர்கள்.!

மகாநதி சீரியலில் எதிர்பாராத ட்விஸ்ட்.! காவேரி இறந்துவிட்டாளா? ஏமாற்றத்தில் ரசிகர்கள்.!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி சீரியல் தற்போது முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வாரத்திற்கான ப்ரோமோ ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. அது குறித்து இங்கு பார்க்கலாம்.

2 Min read
Author : Ramprasath S
Published : Feb 08 2026, 02:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Mahanadhi Serial Today Episode
Image Credit : Jio Hotstar

Mahanadhi Serial Today Episode

விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது மகாநதி சீரியல். தற்போது இந்த சீரியல் உணர்ச்சிகரமான மற்றும் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. விஜய் மற்றும் காவேரி தம்பதியினரின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. பசுபதி காவேரி குடும்பத்தை பழிவாங்க சந்தானத்திற்கு இன்னொரு குடும்பம் இருக்கிறது என நம்ப வைத்துள்ளார். அந்த உண்மையை கண்டுபிடித்த விஜய் ராகவை அடித்து துவைக்கிறார். அந்த கோபத்தில் ராகவ் விஜய் மற்றும் காவேரியை லாரி ஏற்றி கொலை செய்ய முயச்சிக்கிறார்.

25
விஜயின் பாட்டி செய்த சதி
Image Credit : Jio Hotstar

விஜயின் பாட்டி செய்த சதி

இந்த விபத்தில் படுகாயமடைந்த காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பெண் குழந்தையும் பிறந்துள்ளது. ஆனால் காவிரிக்கு பலத்த அடிபட்டதன் காரணமாக அவர் பழைய நினைவுகளை இழந்து விட்டார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் விஜயின் பாட்டி விஜயையும் காவேரியையும் பிரித்து விட வேண்டும் என்று முடிவெடுக்கிறார். பாட்டியின் திட்டத்திற்கு தாத்தாவும் சம்மதம் தெரிவிப்பது போல இருக்கிறார்.

Related Articles

Related image1
எதிர்நீச்சல் மெகா ட்விஸ்ட்.! விசாலாட்சியின் சொத்து பத்திரமா? ஜனனியின் உயிரா? குணசேகரனின் அடுத்த மூவ்!
Related image2
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த ட்விஸ்ட்.! பணம் கொடுத்தாலும் பலிக்கவில்லை! ரோகிணிக்கு எதிராகத் திரும்பிய சாட்சிகள்.!
35
விஜய் காவேரி பிரிவு
Image Credit : Jio Hotstar

விஜய் காவேரி பிரிவு

இந்த நிலையில் இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் காவேரியின் தாயாரிடம் விஜயின் பாட்டி பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது காவேரி மறந்தது அனைத்தும் மறந்ததாகவே இருக்கட்டும். அவளை நீங்கள் ஊருக்கே அழைத்துக் கொண்டு சென்று விடுங்கள் என்றும், ஆனால் தனது பேத்தியை மட்டும் தங்களிடம் கொடுத்து விடுமாறு கூறுகிறார். இதற்கிடையில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி வரும் விஜய் தனது தாத்தா மற்றும் பாட்டியிடம் காவிரி எங்கே என்று கேட்கிறார். அதற்கு பதில் சொல்ல முடியாமல் விஜயின் பாட்டி கதறி அழுகிறார்.

45
காவேரி இறந்துவிட்டதாக கூறும் விஜய் குடும்பம்
Image Credit : Jio Hotstar

காவேரி இறந்துவிட்டதாக கூறும் விஜய் குடும்பம்

அப்போது விஜயின் குடும்பத்தில் இருப்பவர்கள் காவேரி இறந்து விட்டதாக பொய் கூறுகின்றனர். இதைக் கேட்டவுடன் விஜய் கதறி அழுகிறார். அப்போது பாட்டி, அவரின் குழந்தையை கொண்டு வந்து விஜயின் கைகளில் கொடுக்கிறார். அதை பார்த்த விஜய் காவேரியை நினைத்து உடைந்து அழுகிறார். அப்போது பாட்டி உனக்காக இல்லை என்றாலும் உன் குழந்தைக்காகவாது நீ நன்றாக வாழ வேண்டும் என்று கூறுகிறார். அத்துடன் இந்த ப்ரோமோ நிறைவடைகிறது.

55
தாத்தாவை திட்டித்தீர்க்கும் ரசிகர்கள்
Image Credit : Jio Hotstar

தாத்தாவை திட்டித்தீர்க்கும் ரசிகர்கள்

இந்த ப்ரோமோவை பார்த்த பலரும் விஜயின் தாத்தா இப்படி மாறுவார் என்று எதிர்பார்க்கவில்லை என கமெண்ட் செய்து வருகின்றனர். ஆரம்பம் முதலே விஜய் காவேரிக்கு ஆதரவாக இருந்து வந்தவர் விஜயின் தாத்தா தான். ஆனால் அவரே இப்பொழுது மாறிவிட்டது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தொலைக்காட்சி
விஜய் தொலைக்காட்சி
விஜய் தொலைக்காட்சி தொடர்கள்
Latest Videos
Recommended Stories
Recommended image1
கேள்விக்குறியான மகளின் வாழ்க்கை: இன்னொருத்தியுடன் பழக்கமா? மாப்பிள்ளையிடம் கேட்ட மாணிக்கத்துக்கு விழுந்த அடி!
Recommended image2
ஜனனியை ஒழிக்கத் துடிக்கும் தேவசகாயம்! நடுரோட்டில் நடக்கப்போகும் விபரீதம்? திடுக்கிடும் திருப்பத்தில் எதிர்நீச்சல் தொடர்கிறது!"
Recommended image3
இடம் வாங்கி பிரம்மாண்டமான வீடு கட்டிய கார்த்திக் – ஆடம்பரமான வீட்டை ரேவதிக்கு திருமண நாள் பரிசாக கொடுக்கும் கார்த்திக்!
Related Stories
Recommended image1
எதிர்நீச்சல் மெகா ட்விஸ்ட்.! விசாலாட்சியின் சொத்து பத்திரமா? ஜனனியின் உயிரா? குணசேகரனின் அடுத்த மூவ்!
Recommended image2
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த ட்விஸ்ட்.! பணம் கொடுத்தாலும் பலிக்கவில்லை! ரோகிணிக்கு எதிராகத் திரும்பிய சாட்சிகள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved