- Home
- Cinema
- தொலைக்காட்சி
- அந்த வீட்டுக்கு நான் போகல; ஆள விடுங்கடா சாமி; தெரிந்து ஓடிய விஜய் டிவி சீரியல் நடிகை!
அந்த வீட்டுக்கு நான் போகல; ஆள விடுங்கடா சாமி; தெரிந்து ஓடிய விஜய் டிவி சீரியல் நடிகை!
Lakshmi Priya Not Going Bigg Boss Tamil Season 9 : பிக் பாஸ் தமிழ் சீசன் 9 ரியாலிட்டி ஷோ வரும் அக்டோபர் மாதம் தொடங்க உள்ள நிலையில் இந்த ஷோவில் நான் கலந்து கொள்ளவில்லை என்று சீரியல் நடிகை லட்சுமி பிரியா விளக்கம் கொடுத்துள்ளார்.

Lakshmi Priya Not Going Bigg Boss Tamil Season 9 : விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும் ரியாலிட்டி ஷோவில் ஒன்று தான் பிக் பாஸ் தமிழ் சீசன் 9. ஒவ்வொரு ஆண்டும் பிக் பாஸ் தமிழ் ரியாலிட்டி ஷோ ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. முதல் முறையாக கடந்த 2017 ஆம் ஆண்டு ரியாலிட்டி ஷோ ஒளிபரப்பு செய்யப்பட்டது. பிக் பாஸ் தமிழ் சீசன் 7 வரை இந்த ரியாலிட்டி ஷோவை கமல் ஹாசன் தான் தொகுத்து வழங்கினார். இதைத் தொடர்ந்து 8ஆவது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். ஆரம்பத்தில் அவர் மீது விமர்சனங்கள் எழுந்தாலும் ரியாலிட்டி ஷோவை வெற்றிகரமாக தொகுத்து வழங்கினார்.
இதைத் தொடர்ந்தும் வரும் அக்டோபர் முதல் வாரத்தில் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 ரியாலிட்டி ஷோவும் தொடங்க இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் இந்த நிகழ்ச்சி தொடர்பான புரோமோ வீடியோவை விஜய் டிவி இன்று வெளியிட்டது. இதில் விஜய் சேதுபதி மட்டும் இடம் பெற்றிருந்தார். விரைவில் டீசரும் வெளியாக இருக்கிறது என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தான் இன்னும் தொடங்கப்படாத இந்த நிகழ்ச்சியின் யார் யார் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்ற பட்டியல் ஏற்கனவே வெளியானது. அதில் சீரியல் நடிகை லட்சுமி பிரியாவும் ஒருவர் என்று சொல்லப்பட்டது. இந்த நிலையில் தான் இது குறித்து தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது: நான் பிக்பாஸுக்கு செல்ல இருப்பதாக பலரும் தவறான செய்தியை பரப்பி வருகிறார்கள்.
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்பாக இதுவரையில் நான் எந்த அதிகாரப்பூர்வ ஆடிஷனிலும் கலந்து கொள்ளவில்லை. நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்று ஜகா வாங்கிவிட்டார். இதற்கு நெட்டிசன்கள் பலரும் பலவிதமான கருத்துக்களை கமெண்டுகளாக பதிவிட்டு வருகின்றனர். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி சீரியலில் நடித்து வருகிறார். மேலும், ரோடு, பத்து தல, டிரிப், பன்னிக்குட்டி ஆகிய படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.