- Home
- Cinema
- தொலைக்காட்சி
- குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட்ட மாதம்பட்டி ரங்கராஜ்? ஜாய் கிரிசில்டா தான் காரணமா?
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட்ட மாதம்பட்டி ரங்கராஜ்? ஜாய் கிரிசில்டா தான் காரணமா?
Madhampatty Rangaraj : குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6-வது சீசனில் நடுவராக இருந்து வந்த மாதம்பட்டி ரங்கராஜ், இந்த வார நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை.

Madhampatty Rangaraj Quit Cook With Comali?
விஜய் டிவியில் சக்கைப்போடு போடும் ரியாலிட்டி ஷோக்களில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியும் ஒன்று. இந்நிகழ்ச்சி கடந்த 2019-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சி இதுவரை வெற்றிகரமாக ஐந்து சீசன்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், ஆறாவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது. இதில் ராஜு, பிரியா ராமன், ஷபானா, நந்தகுமார் மற்றும் லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோர் டாப் 5 போட்டியாளர்களாக தேர்வாகி இருக்கிறார்கள். விரைவில் இந்நிகழ்ச்சியின் பைனலும் நடைபெற இருக்கிறதாம்.
குக் வித் கோமாளியில் இந்த வாரம்
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இந்த வாரம் வித்தியாசமான ரவுண்டு ஒன்று நடைபெற்றுள்ளது. அதன்படி இதற்கு முந்தைய சீசன்களில் கலக்கிய போட்டியாளர்களுக்கும் இந்த சீசனில் உள்ள டாப் 5 போட்டியாளர்களுக்கும் இடையே போட்டி நடைபெற்று இருக்கிறது. இதற்காக இதற்கு முந்தைய சீசன்களில் இருந்து உமா ரியாஸ்கான், கனி, விஜே விஷால், மதுரை முத்து மற்றும் தர்ஷா குப்தா ஆகிய ஐந்து பேர் கலந்துகொண்டுள்ளனர். அவர்கள் தற்போதுள்ள போட்டியாளர்களுடன் போட்டி போட்டு சமைக்கும் புரோமோ வெளியாகி வைரலாகி வருகிறது. ஆனால் இந்த புரோமோவில் மற்றுமொரு விஷயம் இருக்கிறது.
நீக்கப்பட்டாரா மாதம்பட்டி ரங்கராஜ்?
அது என்னவென்றால். இந்த வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மொத்தமே இரண்டு நடுவர்கள் தான் இருக்கிறார்கள். மூன்றாவது நடுவரான மாதம்பட்டி ரங்கராஜை காணவில்லை. இதனால் அவர் இந்நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட்டிருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த மாதம் தான் மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிசில்டா புகார் அளித்திருந்தார். அதன்பின்னர் எடுக்கப்பட்ட எபிசோடு இது என்பதால் இதில் மாதம்பட்டி ரங்கராஜ் இடம்பெறவில்லை. அவர் வில்லங்கத்தில் சிக்கியதால் விஜய் டிவி அவரை நீக்கி இருக்கக்கூடும் என சிலர் கூறுகிறார்கள். ஒருசிலரோ அவரே இந்நிகழ்ச்சியை விட்டு விலகி இருக்கலாம் என சொல்கிறார்கள். எது உண்மை என்பதை அவரே சொன்னால் தான் தெரியவரும்.
ஜாய் கிரிசில்டா புகார்
மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை காதலித்து திருமணம் செய்து, கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக ஜாய் கிரிசில்டா அவர் மீது புகார் அளித்திருந்தார். மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில், அவர் ஜாய் கிரிசில்டாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிசில்டா அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்தார். அந்த புகாரின் காரணமாக மாதம்பட்டி ரங்கராஜ், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட்டதாக சமூக வலைதளவாசிகள் கூறி வருகின்றனர்.

