- Home
- Cinema
- Joy Crizildaa : ஹேய்.. பொண்டாட்டி..!! மாதம்பட்டி ரங்கராஜின் அலப்பறை வீடியோ.. பழிவாங்கும் கிரிசில்டா
Joy Crizildaa : ஹேய்.. பொண்டாட்டி..!! மாதம்பட்டி ரங்கராஜின் அலப்பறை வீடியோ.. பழிவாங்கும் கிரிசில்டா
Madhampatty Rangaraj Alaparaigal Video :தன்னுடைய கணவர் மாதம்பட்டி ரங்கராஜின் அலப்பறை வீடியோக்களை ஒவ்வொன்றாக ஜாய் கிரிசில்டா பதிவிட்டு வருகிறார்.

மாதம்பட்டி ரங்கராஜ் அலப்பறைகள் வீடியோ:
நாளுக்கு நாள் மாதம்பட்டி ரங்கராஜ் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாவதோடு அதிர்ச்சி அளிக்கும் வகையிலும் இருக்கிறது. தற்போது தன்னிடம் வீடியோவில் பேசும் மாதம்பட்ட்டி ரங்கராஜின் அலப்பறை வீடியோவை ஜாய் கிரிசில்டா தனது இன்ஸ்ட பக்கத்தில் பதிவிட்டு அவருக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். ஆனால், அந்த காட்சி இருவரும் காதலிக்கும் போது எடுத்ததாக இருக்கும் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து இதைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மாதம்பட்டி ரங்கராஜிற்கு எதிராக நெட்டிசன்கள் கொதித்தெழுவதற்கு முக்கிய காரணமே அவரது 2ஆவது மனைவி ஜாய் கிரிசில்டா தான். கடந்த ஜூலை மாதம் மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஜாய் கிரிசில்டா இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. மிகவும் எளிமையான முறையில் நடந்த திருமணத்தின் போது ஜாய் கிரிசில்டா 6 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார். இதைத் தொடர்ந்து ஜாய் கிரிசில்டா திருமணத்திற்கு பிறகு எடுத்த புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கமான https://x.com/joy_stylist என்ற பக்கத்தில் பதிவிட்டு வந்தார்.
கர்ப்பமாக்கி ஏமாற்றிய மாதம்பட்டி ரங்கராஜ்
கடந்த ஜூலை 26ஆம் தேதி மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஜாய் கிரிசில்டா இருவரும் மிகவும் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டனர். அதற்கு முன்னதாக இருவரும் கிட்டத்தட்ட 2 வருடங்களாக ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இடைத் தொடர்ந்து ஜாய் கிரிசில்டா கர்ப்பமானார். 6 மாதம் கர்ப்பமான நிலையில் தான் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால், அதன் பிறகு ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகவில்லை. மேலும், திருமணம் தொடர்பான புகைப்படங்களை மாதம்பட்டி ரங்கராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிடவில்லை. அதோடு இதை பற்றி பொது வெளியில் ஒரு போதும் மாதம்பட்டி ரங்கராஜ் பேசவில்லை.
இந்த நிலையில் தான் தற்போது ஜாய் கிரிசில்டா 7 மாதம் கர்ப்பமாக இருக்கும் நிலையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது: ரங்கராஜ் தான் எனது கணவர். எம்.ஆர்.சி. நகர் பகுதிநில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கடந்த இரண்டு ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்து வந்ததாக தெரிவித்தார். ஆனால் திடீரென கடந்த இரண்டு மாதங்களாக அவர் என்னை விட்டு விலகி விட்டார். என்னிடம் தொடர்பை முற்றிலும் துண்டித்துள்ளதாக கூறினார்.
வயிற்றில் வளரும் குழந்தைக்கு அவர் தான் அப்பா
இப்போது என் வயிற்றில் வளரும் குழந்தைக்கு ரங்கராஜ்தான் தந்தை, தற்போது 7 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும். மாதம்பட்டி ரங்கராஜை நேரில் சந்திக்க முயன்றபோது, இரண்டு முறையும் என்னை அடித்து விரட்டியதாக தெரிவித்தார். மேலும் கருவை கலைக்கும் படி வற்பறுத்தி அடித்ததாகவும் தெரிவித்தார். இதனையடுத்து அவருடன் பேச முயன்றும், அவருடைய நண்பர்கள் என்னை சந்திக்க விடாமல் தடுப்பதாக குற்றம்சாட்டினார். இப்போது என் வயிற்றில் வளரும் குழந்தைக்கு ரங்கராஜ்தான் தந்தை. எனக்கும் என் குழந்தைக்கும் நேர்ந்த இந்த ஏமாற்றத்திற்கு அவர் பொறுப்பேற்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
அவர் என்னுடன் சேர்ந்து வாழ போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்திள்ளார். தன்னை திருமணம் செய்து கொள்ளும் போது தனது மனைவியை விட்டு பிரிந்து இருப்பதாக தெரிவித்ததால் தான் திருமணம் செய்து கொண்டதாக கூறினார்.
மாதம்பட்டி ரங்கராஜ் வீடியோவை பகிர்ந்த ஜாய் கிரிசில்டா
இந்த நிலையில் தான் மாதம்பட்டி ரங்கராஜ் ஜாய் கிரிசில்டாவை பொண்டாட்டி, ஐ லவ் யூ என்று கொஞ்சி மகிழும் வீடியோவை ஜாய் கிரிசில்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் வீட்டிற்கு சென்று குளித்து முடித்துவிட்டு டிரஸ் மாத்திட்டு வந்துட்டேன். இண்டர்வியூ முடிந்துவிட்டது. 4 மணிக்கு மீட்டிங் இருக்கு. 3.30 மணிக்கு கிளம்பி போகணும் ஐ லவ் யூ பொண்டாட்டி என்று அந்த வீடியோவில் பேசுகிறார். நேற்று முன் தினம் புகார் கொடுத்திருந்த நிலையில் இன்று அவரது லீலைகள் கொண்ட வீடியோவை ஒவ்வொன்றாக பதிவிட்டு வருகிறார்.