மனம் மாறிய குமரவேல் – மீண்டும் அரசியை காதலித்து திருமணம் செய்வாரா?
Kumaravel Emotional Feelings in Pandian Stores 2 Serial : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் சிறைக்கு சென்று ஜாமீனில் வந்த குமரவேல் கொஞ்ச நாட்களாக அமைதியாக இருக்கிறார்.

மனம் மாறிய குமரவேல்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கடந்த வாரம் சில சுவாரஸ்யமான காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதில், தங்கமயில் கர்ப்பம் இல்லை என்பது தெரிய வர சரவணன் அதிர்ச்சி அடைந்து தங்கமயிலை வெறுக்க ஆரம்பித்தார். இதே போன்று ராஜீ தனது கணவர் கதிருக்காக பைனான்ஸ் கம்பெனியில் நிதி உதவிக்கு ஏற்பாடு செய்து வருகிறார்.
மேலும், முக்கிய காட்சியாக பழனிவேல் மற்றும் சுகன்யா இருவரும் தங்களது உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்று வரும் வழியில் சுகன்யா தனது முன்னாள் கணவரை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். அவர் கொடுமைப்படுத்தியதை நினைத்து பயந்து நடுங்குகிறார். எப்போதும் அவரைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தார். இது பற்றி பழனிவேலுவிடம் தெரிவிக்க அவர் சுகன்யாவை சமாதானப்படுத்தினார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2, அரசி, பாண்டியன்
இதையெல்லாம் தாண்டி சிறைக்கு சென்று வந்த குமரவேலு கடந்த சில நாட்களாக தூக்கமின்மையால் தவித்து வந்துள்ளார். அவர் சரியாக சாப்பிடுவதும் இல்லை. எப்போதும் அரசியைப் பற்றிய நினைவுகள் அவர் கண் முன்னே வந்து வந்து சென்றது. மேலும், ராஜீயும், குமரவேலுவை சந்தித்து பேசினார். தனது அண்ணனைப் பற்றி கவலைப்படுவதாக கூறினார்.
தனக்காக பழி வாங்க நினைக்க வேண்டாம். தான் கதிருடன் சந்தோஷமாக இருப்பதாக கூறினார். மேலும், இனிமேல் நீ உன்னுடைய வாழ்க்கையை மட்டும் கவனித்துக் கொள் என்றும் அட்வைஸ் செய்தார். அப்போது குமரவேல் கண்களில் கண்ணீர் வந்தது. இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது தனது வாழ்க்கைய்யை நினைத்து குமரவேல் கவலைப்பட தொடங்கினார் என்று கூறப்படுகிறது.
குமரவேல் மற்றும் அரசி காதல் கதை
முன்பு இருந்தது போன்று இல்லாமல் இப்போது அவர் கொஞ்சம் மாறிவிட்டார் என்றும் சொல்லப்படுகிறது. இதைத் தொடர்ந்து இனி வரும் எபிசோடுகள் அவர் மீண்டும் அரசியுடன் சேர்ந்து வாழ்வதற்கான வாய்ப்புகள் உருவாகும் என்று தெரிகிறது. அதுவரை நாம் பொறுத்திருந்து பார்க்கலாம்.