- Home
- Cinema
- தொலைக்காட்சி
- மீனாவுக்கு தெரியவரும் விஜயாவின் தில்லாலங்கடி வேலை; சண்டைபோடும் கிரீஷ் பாட்டி - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
மீனாவுக்கு தெரியவரும் விஜயாவின் தில்லாலங்கடி வேலை; சண்டைபோடும் கிரீஷ் பாட்டி - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
சிறகடிக்க ஆசை சீரியலில் முத்துவின் மாமியார் வீட்டில் கிரீஷ் இருக்கும் விஷயம் அறிந்து அங்கு வந்த அவனின் பாட்டி, அனைவருடனும் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு நிலவியது.

Siragadikka Aasai Serial Today Episode
விஜய் டிவி சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜின் கடைக்கு சென்று அவரை வீடியோ எடுத்து பிளாக்மெயில் செய்யும் ராஜா மற்றும் ராணி, தங்களிடம் இவ்வளவு நாள் ஆதாரம் இல்லாமல் இருந்ததாகவும், தற்போது வசமாக சிக்கி இருப்பதாகவும் கூறுவதோடு, அங்கிருந்து உனக்கு என்ன வேண்டும் என்று ராஜா கேட்க, அதற்கு ராணி, தனக்கு துணி துவைத்து முதுகு வலி ஏற்படுவதால், புது வாஷிங் மிஷின் வேண்டும் என சொல்கிறார். உடனே மனோஜிடம் தங்களுக்கு லேட்டஸ்ட் மாடல் வாஷிங் மிஷின் தரவில்லை என்றால் உன்னுடைய வீடியோவை எல்லாருக்கும் அனுப்பிவிடுவேன் என மிரட்டுகிறார். மனோஜும் இதற்கு பயந்து வாஷிங் மிஷினை கொடுத்துவிடுகிறார்.
மீனாவிடம் சிக்கிய விஜயா
மறுபுறம் புதிதாக யோகா பயிற்சி பள்ளி ஆரம்பிக்கும் விஜயா, தன்னிடம் யோகா கற்றுக் கொள்ள வந்தவர்களிடம் கிரீஷ் என்கிற சிறுவனை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்க இருந்ததை தான் தடுத்து நிறுத்தி அவனின் வாழ்க்கையை காப்பாற்றியதாக சொல்கிறார். உண்மையில் முத்து காபாற்றிய விஷயத்தை தான் செய்தது போல் சொல்கிறார். அப்போது அங்கு பூ கொடுக்க வரும் மீனா, அனைத்தையும் கேட்டுவிட்டு, கைதட்டிக் கொண்டே மாஸ் எண்ட்ரி கொடுக்கிறார்.
மீனாவைப் பார்த்ததும் விஜயா டர்ராகிறார். அனைவர் முன்னிலையிலும் தன் மாமியாரின் மானத்தை வாங்கிவிடக் கூடாது என்பதற்காக அவரை பாராட்டுவது போல் பேசினாலும் மறுபுறம் அவர் முத்துவை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்துவிட்டதை சூசகமாக குத்திக் காட்டுகிறார்.
முத்து - மீனாவுக்கு வந்த டவுட்
இதையடுத்து வீட்டிற்கு வரும் மீனா, யோகா பயிற்சி வகுப்பில் விஜயா செய்ததை முத்துவிடம் சொல்கிறார். இதைக்கேட்ட முத்துவுக்கு ஏன் அம்மா இப்படியெல்லாம் பண்றாங்க என டவுட் வருகிறது. அதுமட்டுமின்றி அவர் பேசுவதை அவருடைய தோழி வீடியோ எடுத்த விஷயத்தையும் சொல்கிறார் மீனா. இதனால் இருவருக்கும் விஜயா மீது சந்தேகம் எழுகிறது. இந்த நிலையில், மீனாவுக்கு அவரது அம்மா சந்திரா போன் போடுகிறார். கிரீஷின் பாட்டி லட்சுமி இங்கு வந்து தண்ணிடம் சண்டை போடுவதாகவும் தயவு செஞ்சு சீக்கிரம் வா என மீனாவை அழைக்கிறார் சந்திரா.
பிரச்சனை செய்யும் கிரீஷ் பாட்டி
இதையடுத்து மீனாவும், முத்துவும் பதறியடித்து வருகின்றனர். அப்போது கிரீஷை தன்னுடன் அனுப்பி வைத்துவிடுமாறு கூறும் லட்சுமி, அவனின் அம்மா தன்னை திட்டுவதாக கூறுகிறார். அதுமட்டுமின்றி கிரீஷை உங்களுடனே வைத்துக் கொள்ளலாம் என முடிவெடுத்திருக்கிறீர்களா என கறாராக பேசுகிறார். இவ்வளவு அக்கறையா பேசுற நீங்க அன்னைக்கு ஏன் கிரீஷை விட்டுட்டு ஆஸ்பத்திரியில் இருந்து ஓடிப் போனீங்க என கேட்கிறார். சந்தர்ப்ப சூழ்நிலையால் அப்படி செய்ததாக லட்சுமி சொல்கிறார். இதையடுத்து என்ன நடக்கபோகிறது? கிரீஷை அவரது பாட்டி அழைத்துச் செல்லப் போகிறாரா? என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.