- Home
- Cinema
- தொலைக்காட்சி
- தவளை போல் தன் வாயால் கெட்ட மனோஜ்... ராணியிடம் சிக்கிய ஆதாரம் - சிறகடிக்க ஆசை சீரியலில் செம ட்விஸ்ட்
தவளை போல் தன் வாயால் கெட்ட மனோஜ்... ராணியிடம் சிக்கிய ஆதாரம் - சிறகடிக்க ஆசை சீரியலில் செம ட்விஸ்ட்
சிறகடிக்க ஆசை சீரியலில் ராணியிடம் வழிந்து பேசி மாட்டிக் கொண்டுள்ளார் மனோஜ், அவருக்கு எதிராக வீடியோ ஆதாரம் சிக்கியதால் அவர் என்ன செய்யப்போகிறார் என்பதை பார்க்கலாம்.

Siragadikka Aasai Serial Today Episode
சிறகடிக்க ஆசை சீரியலில் கிரீஷுக்கு டெஸ்ட் வைக்க அஜய்யின் தந்தை வக்கீல் உடன் ஸ்கூலுக்கு வருகிறார். அப்போது எதற்காக அஜய்யை தாக்கினாய் என கிரீஷிடம் அந்த வக்கீல் கேட்க, அதற்கு கிரீஷ், உங்க அம்மாவுக்கு உன் மேல பாசம் இல்லை, அதனால தான் உங்க அம்மா உன்னை பார்க்க வருவதில்லை என சொன்னதால் தான் நான் அவனை அடித்தேன் என கூறுகிறார். பின்னர் கிரீஷ் முன் ஒரு ஆப்பிளையும், பணத்தையும் வைத்து உனக்கு என்ன வேண்டுமோ அதை எடுத்துக் கொள் என சொல்கிறார். கிரீஷ் ஆப்பிளை எடுக்கிறான். இதன்மூலம் அவன் தெரியாமல் தான் தவறு செய்திருக்கிறான் என்பது உறுதியாகிறது.
பாஸ் ஆன கிரீஷ்
பின்னர் முத்துவிடம் பேசும் அஜய்யின் தந்தை, உண்மையாகவே கிரீஷ் தெரியாமல் தான் செய்திருக்கிறான் என்பது நல்ல புரியுது. அவன் ஆப்பிளை எடுக்க வேண்டும் என்று நானே மனதார நினைத்துக் கொண்டிருந்தேன் என சொல்கிறார். பின்னர் அஜய்யிடம் மன்னிப்பு கேட்கிறான் கிரீஷ், இனிமேல் உன்னை அடிக்க மாட்டேன் என சொல்கிறார். அஜய் நீ அவனை கிண்டல் செய்ததும் தப்பு அவனிடம் மன்னிப்பு கேள் என அவனுடைய தந்தை சொல்ல, அதன்பின் அஜய்யும் கிரீஷிடம் மன்னிப்பு கேட்கிறான். இதையடுத்து அஜய்யின் தந்தையிடம் நன்றி சொல்லும் முத்து, கிரீஷுக்கு நீங்க கொடுத்தது வாய்ப்பு இல்ல வாழ்க்கை என நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.
சிக்கலில் மனோஜ்
மறுபுறம் மனோஜை மிரட்டிய ராணி மற்றும் ராஜா இருவரும் மனோஜின் ஷோ ரூமுக்கு வருகிறார்கள். ராணியை எப்படியாவது மாட்டிவிட வேண்டும் என மனோஜ் பிளான் போட்டிருக்க, அவரிடம் பேச வரும் ராணி, உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கா பிடிக்கலையா என கேட்கிறார். அதற்கு மனோஜ், நீ மட்டும் என் பக்கம் வந்துட்டேனா உன்னை நிஜமாவே ராணி மாதிரி பார்த்துக் கொள்வேன் என சொல்கிறார். அப்போது உள்ளே எண்ட்ரி ஆகும் ராஜா, நீ ராணியிடம் தப்பா பேசியதற்கு எங்களிடம் எந்த ஆதாரமும் இல்லாமல் இருந்தது, ஆனால் தற்போது அதற்கான வீடியோ ஆதாரமே எங்களுக்கு கிடைச்சிருக்கு. நீ பேசுன எல்லாமே இதில் ரெக்கார்டு ஆகியிருக்கு என சொல்லி ஷாக் கொடுக்கிறார். இதனால் மனோஜ் மீண்டும் வம்பில் சிக்கி இருக்கிறார்.
மீனாவிடம் சிக்கும் விஜயா
மறுபுறம் டாக்டர் பட்டம் பெறும் கனவுடன் இருக்கும் விஜயா, யோகா கிளாஸுக்கு சென்று, தான் நல்லது செய்தது போல் காட்டிக்கொள்ள அங்கு ஒரு ஸ்பீச் கொடுக்கிறார். அது வீடியோவும் எடுக்கப்படுகிறது. அதில், எங்க வீட்டில் கிரீஷ்னு ஒரு சின்ன பையன் இருந்தான். அவன் ஸ்கூலில் தெரியாம ஒரு சின்ன தப்பு செஞ்சிட்டான். அதற்காக அவனை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கனும்னு சொன்னாங்க. என்னுடைய ரெண்டாவது பையன் முத்துவுடன் அந்த ஸ்கூலில் போய் நான் பேசுனேன். அவனை சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பனும்னு சொன்னவர்கிட்ட நான் கெஞ்சி பேசுனேன்.
அவர் மனசை மாத்தி அந்த சின்ன பையன சீர்திருத்த பள்ளிக்கு அனுப்ப விடாம நான் பண்ணிட்டேன் என விஜயா ஒரு பொய்யான கதையை சொல்லி முடித்ததும், அதை வெளியே நின்று கேட்டுக் கொண்டிருந்த மீனா, சபாஷ் என கைதட்டியபடி உள்ளே எண்ட்ரி கொடுக்கிறார். மீனாவை பார்த்ததும் விஜயா வெடவெடத்துப் போகிறார். அதன்பின் என்ன ஆனது என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.