ஃபிராடு போட்டின்னு தெரிந்து கொண்ட கதிர் – ராஜிக்காக என்ன செய்ய போகிறார்?
Kathir Knows About the Dance Competition : ராஜீ சிக்கலில் இருப்பதை அறிந்து கொண்ட கதிர், அவரை காப்பாற்ற சென்னை புறப்பட்டு செல்வாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 578ஆவது எபிசோடில் டான்ஸ் போட்டியில் பங்கேற்க சென்னை வந்த ராஜீ வசமாக டிராப்பில் சிக்கியுள்ளார். அது என்ன என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். டான்ஸ் போட்டிக்கு குடும்பத்தினரின் பேச்சையும் மீறி கணவருக்கு உதவி செய்கிறேன் என்ற பெயரில் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றார். ஆனால், அங்கு முதல் நாளில் அவருக்கு வசமான கவனிப்பு இருந்தது.
முதலில் நேர்காணலில் பங்கேற்ற ராஜேஸ்வரி, அதன் பிறகு தனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு சென்றார். பின்னர் நன்கு ஓய்வு எடுத்துவிட்டு சாப்பிட சென்றார். அங்கு கொத்த சரக்கை அவர் கூல்டிரிங்ஸ் என்று எடுத்தார். ஆனால், அது சரக்கு என்று தெரிந்து குடிக்காமல் வைத்துவிட்டார். இதைத் தொடர்ந்து பார்ட்டியில் பங்கேற்றார். அவரை அந்த போட்டியை நடத்துபவர்கள் கட்டாயப்படுத்தி டான்ஸ் ஆட வற்புறுத்தினர்.
ஆனால், அவர் மறுத்துவிட்டார். பின்னர் அப்படி இப்படி சென்று நேரம் செல்ல முதல் சுற்றுக்கான போட்டி ஆரம்பமானது. இதில் தனி அறைக்குள் முதல் சுற்று போட்டி நடைபெற்றது. அதில், ராஜீயை கிளாசிக்கல் டான்ஸ் ஆட செய்தனர். அவரும் நன்றாக கிளாசிக்கல் டான்ஸ் ஆடி அசத்தினார். இதைத் தொடர்ந்து ஃபோல்க் டான்ஸ் ஆடச் சொல்ல அவரும் ஆடி அசத்தினார். ஆனால், டான்ஸ் மாஸ்டர் உள்பட நடுவர்கள் அனைவரும் குத்துப் பாட்டுக்கு இறங்கி குத்த வேண்டாமா? டான்ஸ் பத்தவில்லை என்று கூறினர்.
கடைசியாக மாஸ்டர் வந்து அவருக்கு கற்றுக் கொள்ள வந்தார். அப்போது அவர் ராஜீ மீது கையை போட்டு பேசினார். அதோடு இன்றைய எபிசோடு முடிந்தது. இதற்கிடையில் ராஜீ போனில் பேசியதை வைத்து அவர் ஏதோ சிக்கலில் இருப்பதை உணர்ந்து கொண்ட கதிர், பேப்பரில் வந்த விளம்பரத்தை வைத்து தனது நண்பர்கள் மூலமாக உண்மையாக போட்டி நடக்கிறதா இல்லையா என்பதை தெரிந்து கொண்டார்.
நெட்டில் தேடிப் பார்த்த போதும் கூட அப்படியொரு டான்ஸ் போட்டி நடப்பதாக் தெரியவில்லை.இந்த சூழலில் கடைசியாக ராஜீயை தொட்டு டான்ஸ் ஆட மாஸ்டர் முயற்சிக்கும் சூழலில் அவருக்காக கதிர் சென்னைக்கு புறப்பட்டு வருவாரா அவரை காப்பாற்றுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ககலாம்.