- Home
- Cinema
- தொலைக்காட்சி
- கார்த்திக் எப்படி உண்மையை நிரூபிக்கப் போகிறார்? என்னென்ன வழிகள் இருக்கு? கார்த்திகை தீபம் 2 சீரியலில் என்ன நடக்கும்?
கார்த்திக் எப்படி உண்மையை நிரூபிக்கப் போகிறார்? என்னென்ன வழிகள் இருக்கு? கார்த்திகை தீபம் 2 சீரியலில் என்ன நடக்கும்?
கார்த்திக் தனது மாமியார் சாமுண்டீஸ்வரியை ஏமாற்றி வீட்டை எழுதி வாங்கியிருக்கிறார்கள் என்பதை எப்படி நிரூபிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு சீரியல் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

கார்த்திகை தீபம் சீரியலின் முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இப்போது 2ஆவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் இந்த சீரியலில் சாமுண்டீஸ்வரியின் 4 மகள்களில் மூவருக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. இதில், மூத்த மகள் ரோகிணி கர்ப்பமாக இருக்கிறார். 3ஆவது மகள் துர்கா அம்மாவிற்கு தெரியாமல் ரகசிய திருமணம் செய்த நிலையில் அவரது பாட்டி பரமேஸ்வரி கோயிலில் வைத்து முறைப்படி திருமணம் செய்து வைத்தார். இந்த திருமண நிகழ்ச்சியில் கார்த்திக், ரேவதி, ரோகிணி, மயில்வாகன், ராஜ ராஜன் என்று பலரும் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து துர்கா மற்றும் நவீனுக்கு முதல் இரவிற்கு ஏற்பாடு செய்த ரேவதி, தனது முதலிரவிற்கும் ஏற்பாடு செய்துள்ளார். திருமணம் தான் தனது விருப்பப்படி நடக்கவில்லை. அதன் பிறகு அவரது கணவர் கார்த்திக்கைப் பற்றி நன்கு புரிந்து கொண்டு அவரை காதலிக்க ஆரம்பித்தார். இப்போது முதலிரவிற்கும் ஏற்பாடு செய்துள்ளார். ஆனால், கார்த்திக்கிற்கு இதில் துளி கூட விருப்பம் இல்லை. இந்த நிலையில் தான் ஜெயிலிலிருந்து வெளியில் வந்த காளியம்மாள் சாமுண்டீஸ்வரிக்கு சொந்தமான வீட்டை ஆட்டைய போட நினைத்துள்ளார்.
இதற்காக அவர் இருவரை ஏற்பாடு செய்து வைத்து, அவர்கள் மூலமாக வீட்டையும் சீட்டிங் செய்து எழுதி வாங்கியுள்ளார். அதுவும் சந்திரகலாவின் கணவர் சிவனாண்டி பெயரில் தான் அந்த வீடு எழுதி வைக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பத்திரத்துடன் வீட்டிற்கு வந்த சிவனாண்டி சாமுண்டீஸ்வரியை வீட்டை விட்டு வெளியில் அனுப்ப நினைக்க, அதற்கு கார்த்திக் உண்மையை நிரூபிப்பேன் என்று சொல்லியிருக்கிறார். அவர் கூறியபடி உண்மையை நிரூபிப்பாரா இல்லையா என்பது பற்றி இன்றைய எபிசோடில் தெரியவரும்.
கார்த்திக் உண்மையை நிரூபிக்க வாய்ப்புள்ள சில வழிகள்:
சந்திரகலாவின் சந்தேகம்:
சந்திரகலாவுக்கு ரோஹிணி மீது ஏற்பட்ட சந்தேகம், கார்த்திக் உண்மையை நிரூபிக்க ஒரு வாய்ப்பாக அமையும். கார்த்திக், சந்திரகலாவின் சந்தேகங்களை நீக்கும் விதத்தில் சில சான்றுகளை முன்வைக்கலாம்.
சிவனாண்டியின் திட்டம்:
சிவனாண்டி கார்த்திக்கை பின்தொடர சிலரை அனுப்பியதால், கார்த்திக் அதனை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். சிவனாண்டியின் திட்டங்களை வெளிப்படுத்தி, அவன் பஞ்சாயத்தில் பேசியவை அனைத்தும் தவறானவை என்பதை நிரூபிக்கலாம்.
இந்த பஞ்சாயத்தில் கார்த்திக் எப்படி உண்மையை நிரூபித்து, சாமுண்டீஸ்வரியின் வீட்டை மீட்கப் போகிறார் என்பதை அறிய, தொடரின் அடுத்தடுத்த எபிசோட்களைப் பார்க்க வேண்டும். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கார்த்திகை தீபம் சீரியலைக் கண்டுகளியுங்கள். இந்த சீரியல் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படுகிறது.