MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • Karthigai Deepam : சாமுண்டீஸ்வரியை கைது செய்ய வந்த போலீஸ்... சிவனாண்டியின் சதியை உடைப்பாரா கார்த்தி?

Karthigai Deepam : சாமுண்டீஸ்வரியை கைது செய்ய வந்த போலீஸ்... சிவனாண்டியின் சதியை உடைப்பாரா கார்த்தி?

Karthigai Deepam Serial Today Episode : கார்த்திகை தீபம் சீரியலின் இன்றைய எபிசோடில் சாமுண்டீஸ்வரியை கைது செய்ய அதிகாரிகள் வீட்டுக்கு வந்துள்ளனர். அதன்பின் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Oct 13 2026, 08:32 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Karthigai Deepam Serial Today Episode
Image Credit : zee tamil

Karthigai Deepam Serial Today Episode

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான தொடர்களில் ஒன்று கார்த்திகை தீபம். திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த சீரியல், அடுத்தடுத்த எதிர்பாராத திருப்பங்களுடன் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்த வகையில், தற்போது சாமுண்டீஸ்வரியை பழிவாங்க சிவனாண்டி தீட்டியுள்ள புதிய சதியால் கதைக்களம் மேலும் பரபரப்பாக மாறியுள்ளது.

நேற்றைய எபிசோடில் மகேஷ் மற்றும் மாயா இருவரும் கார்த்தியிடம் வசமாகச் சிக்கிக் கொண்டனர். அவர்கள் மீது கார்த்திக்கு சந்தேகம் ஏற்பட்டாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருவரையும் விட்டுவிடுகிறான். இதனைத் தொடர்ந்து இன்றைய எபிசோடில் சாமுண்டீஸ்வரிக்கு எதிராக சிவனாண்டி மிகப்பெரிய சதித்திட்டத்தை அரங்கேற்றுகிறான்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
சாமுண்டீஸ்வரியை சிக்கவைக்க சிவனாண்டியின் புதிய பிளான்!
Image Credit : zee tamil

சாமுண்டீஸ்வரியை சிக்கவைக்க சிவனாண்டியின் புதிய பிளான்!

சாமுண்டீஸ்வரி மீதான பழிவாங்கும் எண்ணத்தில் இருக்கும் சிவனாண்டி, ரேஷன் கடைக்காரர் ஒருவரை ரகசியமாகச் சந்திக்கிறான். அவருடன் சேர்ந்து சாமுண்டீஸ்வரியை சட்டச் சிக்கலில் மாட்டிவிடுவதற்காக ஒரு திட்டத்தை உருவாக்குகிறான்.

அதன்படி, சாமுண்டீஸ்வரியின் வீட்டில் ரேஷன் அரிசியைப் பதுக்கி வைத்துவிட்டு, அவர் ரேஷன் பொருட்களைக் கடத்துவதாகப் பொய்யான புகாரை அளிக்க ஏற்பாடு செய்கிறான். சிவனாண்டியின் திட்டப்படி அனைத்தும் நடைபெற, சாமுண்டீஸ்வரிக்கு எதிராக அதிகாரிகளிடம் புகார் செல்கிறது.

34
சாமுண்டீஸ்வரியை கைது செய்ய வந்த அதிகாரிகள்!
Image Credit : zee tamil

சாமுண்டீஸ்வரியை கைது செய்ய வந்த அதிகாரிகள்!

ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பான புகாரைத் தொடர்ந்து, உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சாமுண்டீஸ்வரியின் வீட்டிற்கு அதிரடியாக வருகின்றனர். வீட்டில் சோதனை நடத்தும் அதிகாரிகள், அங்கு ரேஷன் அரிசி இருப்பதைக் கண்டுபிடிக்கின்றனர். இதனால் சாமுண்டீஸ்வரி மீது சந்தேகம் வலுக்கிறது. தொடர்ந்து அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் அதிகாரிகள் இறங்குகின்றனர். தான் செய்யாத குற்றத்திற்காக சாமுண்டீஸ்வரி கைது செய்யப்படும் சூழல் உருவாக, அந்த நேரத்தில் கார்த்தி அங்கு வந்து நிலைமையை அறிந்துகொள்கிறான்.

44
சிக்குவாரா சிவனாண்டி?
Image Credit : zee tamil

சிக்குவாரா சிவனாண்டி?

சாமுண்டீஸ்வரிக்கு எதிராக ஏதோ சதி நடந்திருப்பதை உணரும் கார்த்தி, உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடிக்க அதிகாரிகளிடம் அரை மணி நேரம் அவகாசம் கேட்கிறான். பின்னர் இந்த விவகாரத்தின் பின்னணியைத் தெரிந்துகொள்ள நேரடியாக ரேஷன் கடைக்காரரைச் சந்திக்கச் செல்கிறான். சாமுண்டீஸ்வரியின் வீட்டிற்கு ரேஷன் அரிசி எப்படி வந்தது? பொருட்களைக் கடத்தச் சொன்னது யார்? இதற்குப் பின்னால் இருப்பவர் யார்? என அடுத்தடுத்து கேள்விகளை எழுப்பி விசாரணையைத் தொடங்குகிறான்.

கார்த்தியின் அதிரடி நடவடிக்கையால் சிவனாண்டியின் சதித்திட்டம் வெளிச்சத்திற்கு வருமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சாமுண்டீஸ்வரியை கைதிலிருந்து கார்த்தி காப்பாற்றுவானா? ரேஷன் கடைக்காரர் உண்மையை ஒப்புக்கொள்வாரா? சிவனாண்டியின் முகத்திரை கிழியுமா? போன்ற கேள்விகளுடன் இன்றைய எபிசோட் விறுவிறுப்பாக நகரவுள்ளது. அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதைத் தெரிந்துகொள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் சீரியலைக் காணத் தவறாதீர்கள்!

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கார்த்திகை தீபம் (தொலைக்காட்சித் தொடர்)
 
2nd TEST • SA vs AUS
Stumps
SASA
(127.1 ov)425/9
AUSAUS
(54.0 ov) 99 & 156/4
Day 4
Schedule ›
5th T20 • IND vs WI
abandoned
INDIND
118/5
WIWI
-
Match abandoned
Schedule ›
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
NZNZ
Thu, 22 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
NZNZ
Sat, 24 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
NZNZ
Tue, 27 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd TEST • SA vs AUS
SASA
Tue, 27 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss 10 : ரெட் டீமுக்கு ஆப்பு வைத்த ப்ளூ டீம்.. கிச்சனுக்கு பூட்டு! பிக்பாஸ் வீட்டில் ஆரம்பமான அடுத்த யுத்தம்!
Recommended image2
TTF Vasan : டிடிஎஃப் வாசனுக்கு ரெட் கார்டு? வீக் எண்டில் விஜய் சேதுபதி வைக்கப்போகும் செக்..!
Recommended image3
Bigg Boss 10 : பிக் பாஸ் சர்வைவல் டாஸ்க்கில் ட்விஸ்ட்... ரெட் டீம் முதுகில் குத்திய ஜேசன்; திடீரென ப்ளூ டீமுக்கு தாவியதால் பரபரப்பு
Related Stories
Recommended image1
Karthigai Deepam : ரேவதிக்கு மீண்டும் திருமணம் செய்ய பிளான் போடும் சாமுண்டீஸ்வரி.. வயதான மாப்பிள்ளையை தேடும் சந்திரகலா!
Recommended image2
Karthigai Deepam : ரேவதியை தடுத்து நிறுத்திய கார்த்திக்... கிழிக்கப்பட்ட டாக்குமென்ட்! கார்த்திகை தீபத்தில் பரபரப்பு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved