- Home
- Cinema
- தொலைக்காட்சி
- கார்த்திக் ஆபிஸுக்கு திடீரென வந்த அபிராமியால் தீபாவுக்கு ஏற்பட்ட சிக்கல் - கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்
கார்த்திக் ஆபிஸுக்கு திடீரென வந்த அபிராமியால் தீபாவுக்கு ஏற்பட்ட சிக்கல் - கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்
கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் கார்த்திக் தீபா கையில் இருக்கும் மருதாணியை பார்த்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பதை பார்க்கலாம்.

karthigai deepam Arthika
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம், இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் கார்த்திக் தீபா கையில் இருக்கும் மருதாணியை பார்த்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது தீபா பல்லவி கையில் இதே மாதிரி மருதாணியை பார்த்தேன் என்று சொல்ல தீபா ஷாக் ஆகிறாள், அதே சமயம் கார்த்திக்கு தன் மீது சந்தேகம் வரவில்லை என்பதை நினைத்தும் சந்தோஷமும் அடைகிறாள்.
karthigai deepam serial
அடுத்து கார்த்திக் ஒரு மீட்டிங் இருக்கு என்று வெளியே கிளம்ப தீபா ஆபிஸ் கிளம்பி வருகிறாள். ஆபிஸ் எண்ட்ரன்ஸில் கையெழுத்து போட்டு விட்டு குடையை மறந்து வைத்து விட்டு தீபா மேலே செல்கிறாள். ஸ்னேகா அவளை பார்த்து சரியான நேரத்துக்கு தான் ஆபிஸ் வரணும்னு இல்ல, சீக்கிரமாகவே வரணும் என வார்னிங் கொடுக்கிறாள். மறுபக்கம் அபிராமி காரில் டிரைவருடன் சென்று கொண்டிருக்கு வேறு ஒரு ரூட்டில் கார் செல்வதை பார்த்து புது ரூட்டா இருக்கே என்று விசாரிக்கிறாள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
karthigai deepam serial update
ட்ரைவர் ரூட் மாற்றி விட்டிருக்காங்க என்று சொல்ல அபிராமி இந்த பக்கம் தானே கார்த்திக் புது கம்பெனி வாங்கிருக்கான், அங்க போகலாம் என்று சொல்லி ஆபிஸ்க்கு வருகிறாள். லிப்டில் மேலே செல்ல காத்திருக்க தீபா குடையை கீழே வருகிறாள். இருவரும் ஒருவரை சந்தித்து கொள்வார்களோ என்ற பதற்றம் உருவாகிறது. ஆனால் இருவரும் சந்தித்து கொள்ள முடியாமல் போகிறது.
karthigai deepam today episode
அபிராமி மேலே வர ஸ்னேகா யாரு என்ன வேண்டும் என்று விசாரிக்க இளையராஜா அங்கு வந்து விடுகிறான், இது கார்த்தியின் அம்மா என்று சொல்ல அபிராமியிடம் நல்ல பேர் வாங்க பிளான் போடுகிறாள் ஸ்னேகா.
உடனே தீபாவிடம் வந்து முக்கியமான கிளைன்ட் வந்திருக்காங்க. காபி எடுத்துட்டு வா என்று சொல்கிறாள். தீபாவும் காபி எடுத்து கொண்டு மேலே வர அங்கு அபிராமியை பார்த்து ஷாக் ஆகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.
இதையும் படியுங்கள்... பொளிச்சு பொளிச்சுனு அடிப்பேன்னு சொன்ன விஷ்ணு... ஓவியா பாணியில் தரமான பதிலடி கொடுத்த அர்ச்சனா