- Home
- Cinema
- தொலைக்காட்சி
- Karthigai Deepam: சாமுண்டீஸ்வரி எடுத்த விபரீத முடிவு; திருமணத்திற்கு சம்மதம் சொல்லும் ரேவதி!
Karthigai Deepam: சாமுண்டீஸ்வரி எடுத்த விபரீத முடிவு; திருமணத்திற்கு சம்மதம் சொல்லும் ரேவதி!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், 'கார்த்திகை தீபம்' சீரியலில் சாமுண்டீஸ்வரி, கார்த்திக்கை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கூற, அதற்கு ரேவதி முடியாது என கூறுகிறாள். இந்த நிலையில் இன்று என்ன நடக்க போகிறது என்பது பற்றி பார்க்கலாம்.
- FB
- TW
- Linkdin
Follow Us
)
'கார்த்திகை தீபம்' தொடரின் நேற்றைய எபிசோடில், சாமுண்டீஸ்வரி ட்ரைவர் ராஜா தான் மாப்பிள்ளை என்கிற முடிவில் உறுதியாக இருப்பதையும், இந்த முடிவால் அதிர்ச்சியடையும் ரேவதி, ஒரு ட்ரைவரை போய் எப்படி திருமணம் செய்து கொள்ள முடியும்? என சாமுண்டீஸ்வரியிடம் வாக்குவாதம் செய்வதையும் பார்த்தோம். இதை தொடருந்து சாமுண்டீஸ்வரி, அவன் நல்லவன் என்கிற ஒரு தகுதி போதும் நீ அவனை திருமணம் செய்து கொள்ள என கூற... அம்மாவின் இந்த முடிவை ஏற்றுக்கொள்ள ரேவதியின் மனம் மறுக்கிறது .
கார்த்திக்கை சம்மதிக்க வைக்க நடக்கும் போராட்டம்:
இன்னொருபுறம், திருமணமே வேண்டாம் என இருக்கும், கார்த்திக்கை ராஜராஜன், பரமேஸ்வரி பாட்டி மற்றும் மயில்வாகனம் ஆகியோர் சம்மதிக்க வைக்க போராடி வருகிறார்கள். ஆனால் கார்த்திக் இல்ல பாட்டி இதெல்லாம் சரியா வராது, ரேவதிக்கு வேற ஒரு நல்ல மாப்பிள்ளையை பார்த்து திருமணம் செய்து வைக்கலாம் என கூறுகிறான்.
சென்டிமெண்டால் கவிழ்க்க நினைக்கும் பாட்டி
பின்னர் பாட்டி சென்டிமெண்டால் கார்த்திக்கை கவிழ்க்க நினைக்கிறார். ரேவதிக்கும் உனக்கும் திருமணம் நடந்துவிட்டால், நம் குடும்பத்தை ஏற்றுக்கொள்ளவே மாட்டேன் என கூறும் சாமுண்டீஸ்வரி நம்ம குடும்பத்தை ஏத்துக்கிட்டு தான் ஆகணும். இந்த இரு குடும்பமும் ஒன்னு சேர்வதும், கடைசி வரைக்கும் ஒன்னு சேராமல் போவதும் உன் கையில் தான் இருக்கு என பாட்டி பேச என்ன பதில் சொல்வது என திணறி நிற்கிறான் கார்த்திக்.
ரேவதி திருமணத்திற்கு சம்மதிப்பாளா?
இங்கே சாமுண்டீஸ்வரியும், ரேவதியை திருமணத்திற்கு சம்மதிக்க வைக்க போராடி வருகிறாள். ரேவதி தன்னுடைய முடிவில் பிடிவாதமாக இருக்க, துப்பாக்கியை எடுத்து ரேவதி முன் நீட்டுகிறாள். இதற்க்கு ரேவதி என்ன கொன்னுடுவீங்களா? தாராளமா சுடுங்க என்று சொல்ல, சாமுண்டீஸ்வரி உன்னை சுட மாட்டேன். என்னையே நான் சுட்டுக்குவேன் என்று அதிர்ச்சி கொடுக்கிறாள்.
மிரட்டி சம்மதம் பெரும் சாமுண்டீஸ்வரி
ரேவதி, அம்மா நீங்க இப்படியெல்லாம் செய்வது ரொம்ப தப்பு என்று சொல்ல, சாமுண்டீஸ்வரி உறுதியாக இருக்க... அம்மா சாமுண்டீஸ்வரி உயிரை காப்பாற்ற வேறு வழி தெரியாமல் ரேவதி திருமணத்திற்கு சம்மதம் சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன? கார்த்திக் என்ன சொல்ல போகிறார். இருவரும் திருமணம் செய்து கொண்டால் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து தெரிந்துகொள்வோம்.