- Home
- Cinema
- தொலைக்காட்சி
- ஃபெயிலியரான காளியம்மாவின் பிளான்: கார்த்தியை கவர ரேவதி போடும் பிளான் - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
ஃபெயிலியரான காளியம்மாவின் பிளான்: கார்த்தியை கவர ரேவதி போடும் பிளான் - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
Karthigai Deepam 2 Today Episode : ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.

கார்த்திகை தீபம் 2
Karthigai Deepam 2 Today Episode : நாளுக்கு நாள் பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் சீரியல் கார்த்திகை தீபம் 2. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் இந்த சீரியலில் பஞ்சாயத்து தேர்தல் மற்றும் ஆடி மாத வழிபாடுகள் என்று எபிசோடு சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கிறது. கடந்த வாரம் பஞ்சாயத்து தேர்தல் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. இதில் சாமூண்டீஸ்வரி வெற்றி பெற அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
கார்த்திகை தீபம் 2 சீரியல்
இந்த சூழலில் கார்த்திகை தீபம் 2 சீரியலில் புதிய வரவாக காளியம்மாள் என்ற ரோலில் பிரபல மூத்த நடிகையும், செய்தி வாசிப்பாளருமான ஃபாத்திமா பாபு எண்ட்ரி கொடுத்துள்ளார். அதுவும் வில்லி ரோல். இதுவரையில் சிவனாண்டி வில்லனாக பல கெடுதல் செய்து வந்த நிலையில் அவரால் சாமுண்டீஸ்வரியை பழிதீர்க்க முடியவில்லை.
காளியம்மாள் பிளானை முறியடித்த ரேவதி
அதன் பிறகு அவரது சித்தப்பா வர அவராலயும் ஒன்றும் செய்ய முடியவில்லை. பிறகு சிவனாண்டியுடன் இணைந்து சந்திரகலா திட்டம் போட அதுவும் ஒன்று இல்லாமல் போய்விட்டது. வேறு வழியில்லாமல் புதிய எண்ட்ரியை அறிமுகம் செய்தனர். ஆரம்பத்திலேயே கொஞ்சம் சுவாரஸ்யமாக செல்ல கடைசியில் அவரது பிளானும் சொதப்பலானது.
ஆடி திருவிழாவிற்கு பரமேஸ்வரி வீட்டிலிருந்து கூழ் காய்ச்சி அம்மனுக்கு படைப்பது வழக்கம். அதனை தடுக்க காளியம்மாள் பிளான் போட்ட நிலையில் அந்த பிளானும் சொதப்பலில் முடிந்தது. கடைசியில் வாக்குச்சாவடியில் வாக்குபெட்டியை தூக்க பிளான் போட்டார். அதையும் கார்த்திக் முறியடித்து காளியம்மாள் பிளானுக்கு ஆப்பு வைத்தார்.
வாக்குப்பெட்டியை தூக்கவிடாமல் செய்த கார்த்திக்
பொதுவாக ஆடிமாத பௌர்ணமி தினத்தன்று வீட்டில் சமைத்த உணவை கணவன் மனைவி கடற்கரை நிலவு வெளிச்சத்தில் சாப்பிட்டால் கணவன் மனைவி இடையே இருக்கும் மனக்கசப்புகள் நீங்கும் என்பது ஐதீகம். அப்படி ஒரு ஐதீகம் பற்றி பாட்டி சொல்லவே ரேவதி, மயிலு, துர்கா என்று அனைவரும் கேட்டு அதற்கு ரெடியாகிக் கொண்டிருக்கிறார்கள். துர்காவோ நவீனுக்கு போன் போட்டு ஆடி மாத பௌர்ணமியை கொண்டாட சாப்பாடு வாங்கிக் கொண்டு வரச் சொல்கிறார். அதோடு இன்றைய எபிசோடு முடிவடைகிறது. இனி நாளை என்ன நடக்கிறது என்பது பற்றி பார்க்கலாம்.