- Home
- Cinema
- தொலைக்காட்சி
- அடுத்தடுத்த பிளான் – கிரேட் எஸ்கேப் ஆன கார்த்திக் போட்ட ஸ்கெட்ச்; சிங்கத்த கூண்டுல அடைக்க முடியுமா? கார்த்திகை தீபம் 2!
அடுத்தடுத்த பிளான் – கிரேட் எஸ்கேப் ஆன கார்த்திக் போட்ட ஸ்கெட்ச்; சிங்கத்த கூண்டுல அடைக்க முடியுமா? கார்த்திகை தீபம் 2!
Karthigai Deepam 2 Today Episode : கார்த்திகை தீபம் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் கார்த்திக் தப்பிப்பதும், ஜனனியை காப்பாற்றுவதும் போன்ற காட்சிகல் இடம் பெற்றுள்ளன.

கார்த்திகை தீபம் 2 சீரியல் இன்றைய எபிசோடு
கார்த்திகை தீபம் 2 சீரியலானது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பு செய்யப்படுகிறது. முக்கிய எபிசோடுகள் மட்டுமே சனிக்கிழமைகளில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. ஒவ்வொரு எபிசோடும் குறைந்தது 40 முதல் 45 நிமிடங்கள் வரையில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. சிவனாண்டி மற்றும் சந்திரகலா இருவரும் எதிரிகளாக இருந்த நிலையில் இப்போது புதிய வரவாக காளியம்மாவும் வந்துவிட்டது.
கார்த்திகை தீபம் 2 சீரியல்
முதல் சீனிலேயே தோல்வியை சந்தித்தார். அது கார்த்திக்கிற்கு சாதகமாக முடிந்தது. கும்பாபிஷேகத்தை நடத்தி காட்டுவேன் என்று பரமேஸ்வரி வாக்குறுதி அளித்துள்ளார். இது ஒரு புறம் இருக்க ரேவதி மற்றும் கார்த்திக் இடையிலான லவ் டிராக் ஒருபுறம் ஓடிக் கொண்டிருக்கிறது.
கார்த்திக் மற்றும் சாமுண்டீஸ்வரி
இந்த நிலையில் தான் இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். பிஸினஸ் விஷயமாக கார்த்திக் ஆன்லைன் மீட்டிங் அட்டெண்ட் செய்ய வேண்டிய சூழல் ஏற்படுகிறது. எப்படியாவது அவரை மாட்டிவிட சந்தரகலா திட்டமிடுகிறார். ஆனால், அது எப்படியோ மயில்வாகனத்திற்கு தெரியவர அதைப் பற்றி கார்த்திக்கிடம் சொல்கிறார். இதையடுத்து கார்த்திக் வேறொரு பிளான் போட்டு அதிலிருந்து தபிக்கிறார்.
ரேவதி மற்றும் கார்த்திக் லவ் டிராக்
இது தெரியாமல் சந்திரகலா மற்றும் சாமுண்டீஸ்வரி இருவரும் ஹோட்டலுக்கு வருகின்றனர். ஹோட்டலில் இளையராஜா சர்வர் வேலை பார்த்துக் கொண்டிருக்க இவர்கள் பார்த்து ஷாக் ஆகின்றனர். அவனை பிடித்து நீ ராஜ சேதுபதியின் பேரன் தானே என்று மிரட்ட இளையராஜா நான் இல்ல நீங்க தப்பா புரிஞ்சிக்கிட்டு இருக்கீங்க என்று சொல்லி சமாளிக்க முயற்சி செய்கிறான்.
கார்த்திகை தீபம் 2 சீரியல் இன்றைய எபிசோடு
அதன் பிறகு இருவரும் வெளியே வர இளையராஜா போலவே இன்னொருவன் அங்கிருக்க குழப்பம் அடைகின்றனர். இளையராஜா சாமுண்டீஸ்வரியை பார்த்து என்ன அத்த இங்க என்ன பண்றீங்க என்று பேசுகிறான். மறுபக்கம் கோவிலில் தீ மிதிக்க ஏற்பாடுகள் நடக்க காளியம்மா சொன்னதெல்லாம் ரெடியா என்று ரௌடிகளிடம் கேட்கிறாள். பிறகு முத்துவேல் மைதிலி கடத்த ஜானகி கார்த்திக்கு தெரியப்படுத்துகிறார். இதைத் தொடர்ந்து கார்த்திக் ஜானகியை காப்பாற்றினாரா? இல்லையா என்பது தான் கார்த்திகை தீபம் 2 சீரியலின் இன்றைய எபிசோடில் பார்க்கலாம்.