- Home
- Cinema
- தொலைக்காட்சி
- டுவிஸ்ட் மேல டுவிஸ்ட் கொடுக்கும் கார்த்திகை தீபம் 2 – என்னது சீரியலுக்கு எண்டு கார்டு போடுறாங்களா?
டுவிஸ்ட் மேல டுவிஸ்ட் கொடுக்கும் கார்த்திகை தீபம் 2 – என்னது சீரியலுக்கு எண்டு கார்டு போடுறாங்களா?
Karthigai Deepam 2 Serial Today Episode Promo Video : கார்த்திகை தீபம் 2 சீரியலில் அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்களால் சீரியலுக்கு எண்டுகார்டு போட இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் கார்த்திகை தீபம் 2 சீரியல் இன்னும் ஓரிரு நாட்களில் முடிய இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. இதற்கு காரணம், சீரியலில் அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள் தான் காரணமாக சொல்லப்படுகிறது. கார்த்திகை தீபம் சீரியலின் முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து சீரியலின் 2ஆவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது வரை இந்த சீரியல் 965 எபிசோடுகள் வரையில் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் ஒளிபரப்பு செய்யப்பட்டுவிட்டது.
இந்த நிலையில் தான் ரேவதி மற்றும் கார்த்திக் கல்யாணம் முடிந்த நிலையில் கார்த்திக் தனது அத்தை பையன் என்ற உண்மை ரேவதிக்கு தெரிந்துவிட்டது. மகேஷ் என்ன ஆனார் என்ற உண்மை தெரியவில்லை. ரோகிணி கர்ப்பாக இருக்கிறார்.
நவீன் சிறையில் இருக்கும் நிலையில் இப்போது துர்காவிற்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. ஒரு புறம் துர்காவிற்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை சீட்டிங் பேர்வளி என்று துர்காவின் அக்கா ரோகிணிக்கு தெரிந்துவிட்டது. இதே போன்று அவருக்கு அப்பா, அம்மாவாக நடிக்க வந்தவர்களும் திருட்டு கும்பல் என்று கார்த்திக்கிற்கு தெரிந்துவிட்டது.
இவர்கள் அனைவரும் மண்டபத்திற்கு வந்தால் இதற்கு பின்னனியில் சந்திரகலா இருப்பது தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போன்று கான்ஸ்டபிளுக்கும் உடலிலிருந்த துப்பாக்கி குண்டு எடுக்கப்பட்டுவிட்டது. எப்போது வேண்டுமானாலும் கண் விழிக்கலாம். அப்படி இல்லை என்றால் அவரது செல்போனை வைத்து உண்மையை சாமுண்டீஸ்வரி தெரிந்து கொள்ள வாய்ப்புகள் இருக்கிறது.
அப்படி உண்மையை தெரிந்து கொள்ளும் பட்சத்தில் சாமுண்டீஸ்வரி குடும்பமும், பரமேஸ்வரி குடும்பமும் ஒன்று சேரலாம். மேலும், சந்திரகலா வீட்டை விட்டு வெளியேற்றப்படலாம். அதன் பிறகு சிவனாண்டியுடன் இணைந்து நேரடியாக அக்காவை பழி வாங்கலாம். இல்லையென்றால் சிறைக்கு செல்லும் நிலை உருவாகும். அப்படியே இந்த சிரியலுக்கும் எண்டு கார்டு போடலாம். இல்லையென்றால் சில மாதங்களுக்கு பிறகு என்று குறிப்பிட்டு ரேவதி மற்றும் கார்த்திக்கிற்கு குழந்தை பிறந்தது போன்று காண்பித்து சீரியலை முடிக்கலாம். இதெல்லாம் இயக்குநர் கையில் தான் இருக்கிறது. அதுவரையில் கார்த்திகை தீபம் 2 சீரியலை பார்த்து மகிழலாம்.