- Home
- Cinema
- தொலைக்காட்சி
- அம்மாவுக்கே ஷாக் கொடுத்த துர்கா: கல்யாணம் நடந்ததா? இல்லையா? கார்த்திகை தீபம் 2 அப்டேட்!
அம்மாவுக்கே ஷாக் கொடுத்த துர்கா: கல்யாணம் நடந்ததா? இல்லையா? கார்த்திகை தீபம் 2 அப்டேட்!
Karthigai Deepam 2 Serial Today Episode Promo : கார்த்திகை தீபம் 2 சீரியலில் துர்காவின் திருமணம் நடந்ததா இல்லையா என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கார்த்திகை தீபம் 2 சீரியலானது அதிக சுவாரஸ்யங்களுடன் பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது. திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு கார்த்திகை தீபம் 2 சீரியல் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. ஜீ5 தொலைக்காட்சியிலோ அல்லது ஓடிடி தளத்திலோ பார்க்கலாம்.
நேற்றைய எபிசோடில் செல்வத்தின் காதலி வசந்தாவிற்கு குழந்தை பிறந்த நிலையில் துர்காவை காப்பாற்ற குழந்தை பிறந்த கையோடு மண்டபத்திற்கு கார்த்திக் உடன் வருகிறார். இதே போன்று சாமுண்டீஸ்வரி வீட்டில் நகை, தங்ககட்டி, பணம் என்று இருந்த மொத்தத்தையும் அபேஸ் செய்த டூப்ளிகேட் அப்பா, அம்மாவை மயில் வாகனம் மற்றும் கார்த்திக் இருவரும் கையும் களவுமாக பிடித்து மண்டபத்திற்கு அழைத்து வருவதோடு நேற்றைய எபிசோடு முடிந்தது.
இந்த நிலையில் தான் கார்த்திகை தீபம் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பது பற்றி இந்தத் தொகுப்பில் பார்க்கலாம். கார்த்திகை தீபம் 2 இன்றைய 968 ஆவது எபிசோடில் தாலி கட்டப் போகும் நேரத்தில் செல்வத்தின் காதலி மண்டபத்திற்கு வந்து திருமணத்தை தடுத்து நிறுத்துகிறார். வசந்தாவை பார்த்து சந்திரகலா அதிர்ச்சி அடைகிறார். இதைத் தொடர்ந்து, அங்கு நவீன் வரவே, இவனை என்னால் மன்னிக்கவே முடியாது என்று சந்திரகலா ஆதங்கப்படுகிறார்.
ஆனால், அவரை இப்படி பேசாதீங்க, இப்படி பேசுவதை நிறுத்துங்க என்று அம்மாவிடம் துர்கா கெஞ்ச, நவீனுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம் என்று சந்திரகலா கேட்கவே, ஏற்கனவே நவீன் கட்டிய தாலியை துர்கா காண்பிக்கிறார். இதைப் பார்த்த சாமுண்டீஸ்வரி அதிர்ச்சி அடைகிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது தான் கார்த்திகை தீபம் சீரியலின் இன்றைய எபிசோடு.