- Home
- Cinema
- தொலைக்காட்சி
- லவ் மூடில் கார்த்திக்கை பார்த்து கண்ணடித்த ரேவதி – தெறித்து ஓடிய கார்த்திக் – கார்த்திகை தீபம் 2 எபிசோடு!
லவ் மூடில் கார்த்திக்கை பார்த்து கண்ணடித்த ரேவதி – தெறித்து ஓடிய கார்த்திக் – கார்த்திகை தீபம் 2 எபிசோடு!
Revathi in Love Mood Karthigai Deepam 2 Aadi Special Episode : கார்த்திகை தீபம் 2 சீரியலில் ஆடி மாத ஸ்பெஷல் எபிசோடாக நேற்று அம்மன் கோயில் கூழ் ஊற்றும் எபிசோடு ஒளிபரப்பு செய்யப்பட்டது.

கார்த்த்கை தீபம் 2 சீர்யல்
Revathi in Love Mood Karthigai Deepam 2 Aadi Special Episode : ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் சீரியல்களில் மிகவும் முக்கியமான சீரியல் கார்த்திகை தீபம் 2. காதலர்களுக்கு மற்றும் அம்மா மகள், அக்கா தங்கை உறவுகளுக்கு பிடித்தமான சீரியலாக கார்த்திகை தீபம் 2 சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. முழுக்க முழுக்க குடும்பக் கதையை மையப்படுத்திய இந்த சீரியலில் கடந்த சில வாரங்களாக காதல் காட்சிகள் அதிகமாக ஒளிபரப்பு செய்யப்படுவதை பார்க்கப்படுகிறது.
ஆம், ரேவதி மற்றும் கார்த்திக் இருவர் தொடர்பான காதல் காட்சிகள் தான் அதிகமாக ஒளிபரப்பாகி வருகிறது. என்னதான் அத்தை பையனாக இருந்தாலும் திருமணத்திற்கு முன் யார் என்று தெரியாமல் சந்தர்ப்ப சூழல் மற்றும் கட்டாயத்தின் காரணமாக அத்தை பையனை திருமணம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதன் பிறகும் கணவரை பிடிக்காத நிலையில் வெளிநாட்டிற்கு செல்ல திட்டமிட்டு விமான நிலையம் வரை சென்று அங்கு விபத்து ஏற்பட வீட்டிற்கு திரும்பும் நிலை வந்தது.
கார்த்திக்கை பார்த்து கண்ணடித்த ரேவதி
இதைத் தொடர்ந்து கார்த்திக் தான் தனது அத்தை பையன் என்ற உண்மை கொஞ்சம் கொஞ்சமாக ரேவதிக்கு தெரிய வருகிறது. மேலும், கார்த்திக் மீது எந்த தவறும் இல்லை, அவர் நம் குடும்பம் ஒன்று சேர எந்தளவிற்கு கஷ்டப்படுகிறார் என்பது பற்றியும் நன்கு தெரிந்து கொண்டார். அதோடு தனது மகனை காப்பாற்ற அத்தனை தனது உயிரையே தியாகம் செய்ததையும் எண்ணி மனம் வருந்திருந்தினார். இப்படி கொஞ்சம் கொஞ்சமா கார்த்திக்கைப் பற்றி அறிந்து கொண்டு அவர் மீது காதல் வலையில் விழுந்தார்.
தனது காதலை வெளிப்படுத்த பல முறை முயற்சி செய்தும் முடியாமல் போய்விட்டது. இதை தொடர்ந்து பௌர்ணமி நன்னாளில் கடற்கரைக்கு சென்று கணவன் மனைவியாக சோறு சமைத்து எடுத்து சென்று மனம் விட்டு பேசினால் இருவருக்கும் இடையில் ஒற்றுமை மேலோங்கும் என்பது ஐதீகம். இதன் காரணமாக ரேவதி மற்றும் கார்த்திக் இருவரும் கடற்கரைக்கு செல்லவே ரேவதி தனது காதலை வெளிப்படுத்தினார்.
காதல் மூடில் ரேவதி
ஆனால், கார்த்திக் அவரது காதலை ஏற்றுக் கொள்ளவில்லை. மேலும், தனது மனதில் அப்படியொரு எண்ணமே இல்லை. நீ வெளிநாட்டிற்கு சென்று வேலை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டாய் அல்லவா அதற்கான வேலையை பாரு என்றார். அதற்கு ரேவதியோ இன்னும் ஒரு மாசத்திற்குள்ளாக உன்னை காதலிக்க வைக்கிறே என்று சபதம் விட்டிருந்தார். இதற்கு கார்த்திக்கும் முதலில் நீ ஜெயித்தால் பார்க்கலாம் என்று சபதத்திற்கு ஓகே சொல்லியும், சொல்லாமலும் நழுவிச் சென்றார்.
ஆடி ஸ்பெஷல் கூழ் ஊற்றிய ரேவதி
இதன் முதல் கட்டமாக ஆடி மாத 4ஆவது வெள்ளியைத் தொடர்ந்து ஆடி மாத சிறப்பு எபிசோடாக கார்த்திகை தீபம் 2 சீரியலானது சனிக்கிழமை நேற்று ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில் அம்மன் கோயிலில் கூழ் ஊற்றப்பட்டது. அப்போது ரேவதி கார்த்திக்கை பார்த்து திரும்ப திரும்ப கண் அடித்தார். இது குறித்து ரேவதியிடம் கார்த்திக் கேட்க, என்னுடைய கணவரை நான் கண் அடிக்கிறேன். வேறு யாரையாவது கண் அடித்தால் கேட்கலாம், கட்டிய கணவரை கண் அடித்தால் என்ன தவறு என்று கேட்க, உஷாரா கார்த்திக் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
இனி வரும் காலங்களில் இது போன்று பல காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்படலாம் என்று தெரிகிறது. இதற்கு முன்னதாக கார்த்திக்கை கட்டிப்பிடித்து ரேவதி முத்தமிட்ட காட்சியும் ஒளிபரப்பு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.