- Home
- Cinema
- தொலைக்காட்சி
- சக்திக்கு சவால்விட்ட ஆதி குணசேகரன்... ரெளடிகளிடம் சிக்கினாரா ஜனனி? - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
சக்திக்கு சவால்விட்ட ஆதி குணசேகரன்... ரெளடிகளிடம் சிக்கினாரா ஜனனி? - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி ஜீவானந்தத்தை மீட்க சென்ற இடத்தில் அவரை கண்டுபிடித்த ரெளடிகள் துரத்துகிறார்கள். அதன் பின் என்ன ஆனது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Ethirneechal Thodargiradhu Today Episode
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜீவானந்தம் மற்றும் பார்கவியை காப்பாற்றி கூட்டி வர ஜனனி தனியாக சென்றிருக்கும் நிலையில், அவரை கொலை செய்ய ஆதி குணசேகரன் அடியாட்களை அனுப்பி இருக்கிறார். அந்த கும்பல் தன்னை வலைவீசி தேடுவதை அறிந்த ஜனனி அவர்களிடம் இருந்து எஸ்கேப் ஆகி, ஜீவானந்தம் இருக்கும் இடத்தை நெருங்குகிறார். அப்போது அங்கு ஜனனியை ரெளடிகள் அடையாளம் காண்கிறார்கள். இதைப்பார்த்த ஜனனி, அங்கிருந்து காரில் எஸ்கேப் ஆகிறார். அவரை ரெளடிகள் சேஸிங் செய்து வருகிறார்கள். இதன் பின் இன்றைய எபிசோடில் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.
ஜனனியை துரத்தும் ரெளடிகள்
காரில் ரெளடிகள் துரத்தி வர, பதறியடித்து ஜீவானந்தம் மற்றும் பார்கவிக்கு போன் போட்டு பேசும் ஜனனி, தன்னை ரெளடிகள் சேஸ் பண்ணி வருவதைப் பற்றி சொல்கிறார். அதுமட்டுமின்றி எக்காரணத்துக்காகவும் நீங்கள் இருவரும் வெளியே வந்துவிடாதீர்கள் என்றும் அலர்ட் செய்கிறார். தன்னை துரத்தி வரும் ரெளடிகளை திசைதிருப்பிவிட்டு, தான் உங்களை அழைத்துச் செல்வதாக கூறுகிறார் ஜனனி. மறுபுறம் திருமண மண்டபத்திலும் ஒரு கலாட்டா நடக்கிறது. நந்தினி மாறு வேடத்தில் தர்ஷனுக்கு மேக்கப் போட வந்து அவனிடம் நடந்ததையெல்லாம் கூறி அவனது மனதை மாற்றிவிடுகிறார்.
சவால்விடும் ஆதி குணசேகரன்
நந்தினி தான் மாறு வேடத்தில் இருப்பதாக கதிருக்கு சந்தேகம் வந்த நிலையில், அதை கண்டுபிடிக்க முடியாமல் அவர் திணறுகிறார். இந்த நிலையில், மண்டபத்தில் உள்ள சக்தியிடம் ஆதி குணசேகரன் ஒரு சவால் விடுகிறார். இங்க இருப்பதை விட்டுவிட்டு போய் உன் பொண்டாட்டிய காப்பாத்துற வழியப் பாரு என சொல்கிறார். அதுமட்டுமின்றி உன்னுடைய பொண்டாட்டி மட்டும் அந்த பார்கவியின் கல்யாணத்தை முடித்துவிட்டால், நீ சொல்றத நான் கேட்கிறேன் என ஓப்பனாக சேலஞ்ச் செய்கிறார் ஆதி குணசேகரன். அவரின் இந்த பேச்சால் ஜனனிக்கு என்ன ஆனதோ என பதறிப்போகிறார் சக்தி.
அடுத்த ட்விஸ்ட் என்ன?
ரெளடிகளிடம் இருந்து ஜனனி தப்பித்தாரா? ஜீவானந்தம் மற்றும் பார்கவியை மீட்டு மதுரைக்கு அழைத்து வந்தாரா? தர்ஷன் மற்றும் நந்தினியின் நிலைமை என்ன ஆனது? நந்தினி தார் புர்கா அணிந்து வந்திருக்கிறார் என்பதை கதிர் கண்டுபிடித்தாரா? சவாலில் ஆதி குணசேகரன் ஜெயித்தாரா? தர்ஷனுக்கு யாரோடு திருமணம் நடக்கப் போகிறது? ஈஸ்வரியை ஆதி குணசேகரன் தாக்கிய வீடியோ ஆதாரம் வெளியாகுமா? ஈஸ்வரி கண்விழித்து உண்மையை சொல்வாரா? என்கிற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு இனி வரும் எபிசோடுகளில் தான் விடை கிடைக்கும் என்பதால் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அடுத்தடுத்து அனல்பறக்கும் ட்விஸ்ட் இருக்கும் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.