- Home
- Cinema
- தொலைக்காட்சி
- தமிழ் சோறு ஃபுட் டிரக்கிற்கு சீல் வைக்க வந்த அதிகாரிகள்... ஷாக் ஆன ஜனனி - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
தமிழ் சோறு ஃபுட் டிரக்கிற்கு சீல் வைக்க வந்த அதிகாரிகள்... ஷாக் ஆன ஜனனி - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி ஃபுட் டிரக் பிசினஸ் நடத்தி வரும் இடத்திற்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்ய வந்துள்ளனர். இதையடுத்து என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

Ethirneechal Thodargiradhu Serial Today Episode
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகரன் கைதுக்கு பயந்து வீட்டை விட்டு ஓடி ஒளிந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில், பெண்கள் எல்லோரும் சேர்ந்து ஃபுட் டிரக் பிசினஸ் தொடங்கி அதை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். அதற்கு நாளுக்கு நாள் வரவேற்பு அதிகரித்து வருவதை அறிந்த ஆதி குணசேகரன், ரெளடி குமார் மூலம் புது பிளான் ஒன்றை போட்டிருக்கிறார். ஏற்கனவே அவர் கவுன்சிலரை வைத்து மிரட்டிப் பார்த்தும் அதற்கெல்லாம் ஜனனி செவிசாய்க்காததால், சின்ன விஷயத்தை செய்து அதில் அவர்களை சிக்க வைக்கலாம் என முடிவெடுத்திருக்கிறார்கள். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
பிரியாணிக்குள் கரப்பான் பூச்சியை போட்ட அறிவுக்கரசி
தமிழ் சோறு ஃபுட் டிரக் பிசினஸிற்கு தேவையான உணவுகள் அனைத்தையும் வீட்டில் தயார் செய்து கொண்டு வந்து தான் விற்பனை செய்கிறார்கள். அந்த வகையில் முதன்முறைய தன்னுடைய சீக்ரெட் ரெசிபியை பயன்படுத்தி விசாலாட்சி சமைத்த சிக்கன் பிரியாணியை சுவைத்துப் பார்த்து சுப்பராக இருக்கு என ரிவ்யூ கொடுத்த நந்தினி, கடைக்கு கிளம்புவதற்காக ரெடியாக மாடிக்கு செல்கிறார். பின்னர் அங்கிருந்த விசாலாட்சியையும் டைவர்ட் பண்ணி மாடிக்கு அனுப்பிவிட்ட முல்லை, அறிவுக்கரசி உடன் கிச்சனுக்குள் நுழைகிறார். அங்கு அவர்கள் சமைத்து வைத்த பிரியாணிக்குள் கரப்பான் பூச்சியை போட்டுவிடுகிறார் அறிவுக்கரசி.
சோதனை செய்ய வரும் அதிகாரிகள்
அந்த நேரம் பார்த்து ஜனனி வீட்டுக்குள் வர, அறிவுக்கரசி கிச்சனில் ஒளிந்துகொள்கிறார். வாசலில் முல்லை நிற்பதை பார்த்து ஜனனிக்கு சந்தேகம் வந்து கிச்சனுக்குள் எட்டிப் பார்க்கையில், அறிவுக்கரசி உள்ளே இருப்பதை கண்டுபிடிக்கிறார். பின்னர் ஜனனியிடம் ஏதேதோ சொல்லி எஸ்கேப் ஆகிவிடுகிறார் அறிவு. பின்னர் கடைக்கு சமைத்த உணவையெல்லாம் எடுத்துக் கொண்டு செல்கிறார் ஜனனி. அப்போது கஸ்டமர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், தமிழ் சோறு ஃபுட் டிரக்கை சோதனை செய்ய வருகிறார்கள்.
சீல் வைக்கப்படுமா?
பின்னர் அங்கிருந்த உணவுகளை சோதனை செய்கிறார்கள். அதோடு பிசினஸுக்கான ஆவணங்களையும் சரிபார்க்கிறார்கள். அதோடு அங்கு சாப்பிடுபவர்களிடமும் உணவு பற்றி கேட்கிறார்கள். அவர்களும் நன்றாக இருக்கிறது என சொல்கிறார்கள். இதையடுத்து ஓரமாக இருந்த ஒரு டபராவை பார்க்கும் அதிகாரிகள், இது என்ன என கேட்க, அதில் பிரியாணி இருப்பதாக சொல்கிறார் ஜனனி. பின்னர் அதை சோதிக்க வருகிறார். அந்த டபராவில் தான் கரப்பான் பூச்சியை போட்டிருக்கிறார் அறிவுக்கரசி. அதை அதிகாரிகள் கண்டுபிடித்தால் ஃபுட் டிரக்கிற்கு சீல் வைக்கவும் வாய்ப்பு உள்ளது. அதன்பின்னர் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

