MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • கோமதிக்கு ஒரு நியாயம், மயிலுக்கு ஒரு நியாயமா? முடிவுக்கு வருகிறதா பாண்டியன் – கோமதி பஞ்சாயத்து?

கோமதிக்கு ஒரு நியாயம், மயிலுக்கு ஒரு நியாயமா? முடிவுக்கு வருகிறதா பாண்டியன் – கோமதி பஞ்சாயத்து?

Gomathi vs Thangamayil Twist in Pandian Stores 2 : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கோமதி மற்றும் பாண்டியன் உறவில் ஏற்பட்ட விரிசல் எப்போது முடிவுக்கு வரும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

2 Min read
Author : Rsiva kumar
Published : Feb 04 2026, 08:17 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 கோமதி பாண்டியன் சண்டை
Image Credit : jiohotstar

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 - கோமதி பாண்டியன் சண்டை

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலானது நாளுக்கு நாள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதில் சரவணன் மற்றும் தங்கமயில் இடையிலான பிரச்சனை பூகம்பமாக வெடித்த நிலையில் இப்போது இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். தங்கமயில் தங்களது குடும்பத்திற்கு ஒரு மருமகளாக வேண்டாம் என்று அவர் கொண்டு வந்த அனைத்து பொருட்களையும் பாண்டியன் அவரது வீட்டிற்கு திருப்பி அனுப்பி வைத்துவிட்டார். படிப்பு, வேலை, குழந்தை விஷயம், வயசு என்று அடுக்கடுக்காக பொய்களை சொல்லி சரவணனை ஏமாற்றி வந்த நிலையில் அவரோ விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பி வைத்தார்.

25
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் செய்திகள்
Image Credit : jiohotstar

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் செய்திகள்

இதைத் தொடர்ந்து பாக்கியம் தனது மகளின் வாழ்க்கை கேள்விக்குறியானதைத் தொடர்ந்து வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து பாண்டியன் குடும்பத்தில் மீனா, ராஜீ மற்றும் அரசி ஆகியோரைத் தவிர மற்ற அனைவரும் சிறைக்கு சென்றனர். பின்னர், சக்திவேல் மற்றும் முத்துவேல் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பாண்டியன் குடும்பத்தினர் வெளியில் வந்தனர். இதைத் தொடர்ந்து நகை விசயமும் வெளிச்சத்திற்கு வர கடைசியில் தங்கமயில் உண்மையை சொல்லவே எப்படியோ பாண்டியன் குடும்பத்தினர் தப்பித்தனர். ஆனால், தங்கமயில் வாழ்க்கை கேள்விக்குறியானது.

35
கோமதி மயில் நியாயம் பஞ்சாயத்து
Image Credit : Jiohotstar

கோமதி மயில் நியாயம் பஞ்சாயத்து

கோர்ட், கேஸ், வரதட்சணை புகார், நகை விசயம் என்று பல சம்பவங்களுக்கு பிறகு பாண்டியன் ஒரு முடிவுக்கு வந்தார். அதனடிப்படையில் இனிமேல் தங்கமயில் நம்முடைய குடும்பத்திற்கு தேவையில்லை. அவரது பொருட்களை திரும்ப ஒப்படைத்தார். என்னதான் பகையாக இருந்தாலும் தன்னையும், தனது குடும்பத்தையும் காப்பாற்றிய அண்ணன்களுக்கு விருந்து வைக்க எண்ணிய கோமதி, அவர்களை அழைக்க சென்ற போது அவமானப்பட்டு திரும்ப வந்தார். பின்னர் எப்படியோ காந்திமதி சரிக்கட்டி கோமதி வீட்டிற்கு விருந்துக்கு வந்தனர். வந்த இடத்தில் சக்திவேல் கதிர் மற்றும் ராஜீ பற்றி பேசவே, கோபத்தின் உச்சத்திற்கு சென்ற கோமதி, கதிர் மற்றும் ராஜீக்கு நான் தான் கல்யாணம் செய்து வைத்தேன் என்று சொல்ல இரு குடும்பத்தினருக்கும் மீண்டும் சண்டை வெடித்தது.

45
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 க்ளைமாக்ஸ்
Image Credit : jiohotstar

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 க்ளைமாக்ஸ்

இது ஒரு புறம் இருக்க, தன்னிடம் எல்லாவற்றையும் மறைத்ததோடு மட்டுமின்றி குடும்பத்தில் தன்னை ஒரு ஆளாக கூட மதிக்கவில்லை என்று பாண்டியன் வாக்குவாதம் செய்தார். அதோடு தன்னிடம் எல்லாவற்றையும் மறைத்த கோமதியிடம் பேசுவதை தவிர்த்து வந்தார். ஒரு கட்டத்தில் சரவணன் சமாதானம் செய்ய நினைக்க அவரிடம் நீ உனது மனைவி பொய்யா பொய்யா சொன்னதால் தான் விவாகரத்து நோட்டீஸ் அனுப்புன. அப்போ மயிலுக்கு நியாயம், கோமதிக்கு ஒரு நியாயமா என்ற கோணத்தில் கேள்வி எழுப்பினார். தன்னிடம் எல்லா உண்மைகளையும் மறைத்ததற்காக பாண்டியன் கோமதியிடம் பேசுவதை தவிர்த்து வந்தார். இப்போது நினைக்கும் போது தங்கமயில் அவரது அம்மா, அப்பாவை காப்பாற்ற வேண்டிய சூழலில் அடுத்தடுத்த பொய்களை சொன்னார். அதே போன்று தான் கோமதி தனது அண்ணன்களின் குடும்ப கௌரவத்தை காப்பாற்ற பொய் சொன்னார்.

55
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் விமர்சனம்
Image Credit : jiohotstar

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் விமர்சனம்

ஆகவே இருவர் செய்ததும் நியாயமாக இருந்தாலும் தாலி கட்டிய கணவரிடம் உண்மையை மறைத்தது ஏற்றுக்கொள்ள முடியாது ஒன்று. இதன் காரணமாகத்தான் சரவணன் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினார். இதே போன்று பாண்டியன் தனது மனைவியிடம் பேசுவதை தவிர்த்து வருகிறார். ஆனால், காலப்போக்கில் எப்படி பாண்டியன் மற்றும் கோமதி இருவரும் ஒன்று சேர்ந்து வாழ்வார்களோ அதே போன்று சரவணன் மற்றும் தங்கமயில் இருவரும் ஒன்று சேர்ந்து வாழும் சூழல் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 (தொலைக்காட்சித் தொடர்)
விஜய் தொலைக்காட்சி தொடர்கள்
விஜய் தொலைக்காட்சி

Latest Videos
Recommended Stories
Recommended image1
Pandian Stores 2: யாருமே செய்யாத மேஜிக்! விஜய் டிவியின் ஒட்டுமொத்த ஸ்லாட்டையும் தட்டித்தூக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜோடி!
Recommended image2
ரூ.5 கோடிக்கு பதிலாக ரூ.50 கோடி கொடுக்கும் சந்திரகலா ; கார்த்திக்கின் இடத்தை ஆட்டைய போட நியூ பிளான்!
Recommended image3
Pandian Stores 2 : சந்தோஷம் முடிவுக்கு வருகிறதா? ராஜியை துரத்தும் கடந்த காலம்... பாண்டியன் ஸ்டோர்ஸில் அதிரடி ட்விஸ்ட்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved