- Home
- Cinema
- தொலைக்காட்சி
- முதல் வாரமே பிக் பாஸ் போட்ட குறும்படம்... கையும் களவுமாக சிக்கிய அந்த பிளாக்ஷீப் யார்?
முதல் வாரமே பிக் பாஸ் போட்ட குறும்படம்... கையும் களவுமாக சிக்கிய அந்த பிளாக்ஷீப் யார்?
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கி இன்னும் ஒரு வாரம் கூட நிறைவடையாத நிலையில், அதற்குள் குறும்படம் போட்டுள்ளார்கள். அதில் சிக்கியது யார் என்பதை பார்க்கலாம்.

Bigg Boss Tamil Season 9 Kurumpadam
விஜய் டிவியில் டிஆர்பியில் சக்கைப்போடு போடும் ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ் நிகழ்ச்சியும் ஒன்று. இந்நிகழ்ச்சி இதுவரை 8 சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், 9-வது சீசன் கடந்த வாரம் தொடங்கப்பட்டது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தான் இம்முறையும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இந்நிகழ்ச்சியில் 10 ஆண் போட்டியாளர்கள், 9 பெண் போட்டியாளர்கள், ஒரு திருநங்கை என மொத்தம் 20 பேர் கலந்துகொண்டுள்ளனர். இந்நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளில் இருந்தே சண்டையும் சச்சரவுமாக சென்று கொண்டிருக்கிறது.
புது ரூல்ஸ்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் தண்ணீரை வேஸ்ட் பண்ணிவிடக் கூடாது என்பதற்காக அவர்களுக்காக வெளியே ஒரு டேங்க் கொடுக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி பிக் பாஸ் வீட்டிற்கு தண்ணீர் கொடுக்க ஒரு தனி பைப் லைனையும் வெளியே வைத்துள்ளார். வெளியே இதற்காக ஒரு அலாரமும் கொடுக்கப்பட்டு உள்ளது. தண்ணீர் வரும்போது அந்த அலாரம் அடிக்கும். அப்போது அந்த டேங்க் உடன் கூடிய வண்டியை நகர்த்தி கொண்டு வந்து தண்ணீர் பிடிக்க வேண்டும். இதை கவனித்துக் கொள்வதற்காக சபரி மற்றும் கம்ருதீன் ஆகிய இருவரை நியமித்து இருந்தனர்.
குறும்படம் போட்ட பிக் பாஸ்
இந்த நிலையில் தற்போது வெளியாகி உள்ள புரோமோவில், எல்லாருக்கும் இப்போ தண்ணி எவ்வளவு இருக்கு தெரியுமா என பிக் பாஸ் கேட்கிறார். அதற்கு சபரி, 50 லிட்டர் கம்மியாக உள்ளது என கூறுகிறார். நீங்கள் எத்தனை முறை தண்ணீர் பிடிக்க தவறுனீர்கள் என்பதை ஒரு குறும்படமாக போட்டு காட்டி இருக்கிறார் பிக் பாஸ். அதில் கம்ரூதின் இரவு தண்ணீர் வருவதை பார்க்காமல் தூங்கியதால் தான் தண்ணீர் வீணாய் போனது என்பது தெரியவந்திருக்கிறது. இதைப்பார்த்த ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் ஷாக் ஆகினர்.
சிக்கிய கம்ருதீன்
கம்ருதீன் நீங்க தூங்கிருக்கவே கூடாது என விக்ரம் சொல்ல, அடுத்து பேசிய கனி, ஒரு பதவி நமக்கு வருகிறது என்றால் அந்த பதவிக்கான பொறுப்பையும் நாம் உணர்ந்து நடந்திருக்க வேண்டும் என கூறுகிறார். இதையடுத்து பேசிய ஆதிரை, இதுதான் நம்மளோட மெயின் டாஸ்க், நீங்க அங்க தான் இருந்திருக்கனும், இது முழுக்க முழுக்க உங்களோட மிஸ்டேக் தான் என சொல்கிறார். பின்னர் பேசும் நந்தினி, நீங்க தண்ணீர் மேல் கவனமே செலுத்தவில்லை என சொல்கிறார். இப்படி அனைவரும் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திக்குமுக்காடி நிற்கிறார் கம்ருதீன். இதனால் இன்றைய எபிசோடில் செம சண்டை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.