- Home
- Cinema
- தொலைக்காட்சி
- தர்பூசணி திவாகரின் நெஞ்சிலேயே ஓங்கி ஒரே மிதி... பார்வதியின் செயலால் பதறிப்போன பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்..!
தர்பூசணி திவாகரின் நெஞ்சிலேயே ஓங்கி ஒரே மிதி... பார்வதியின் செயலால் பதறிப்போன பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்..!
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் வாட்டர்மிலன் ஸ்டார் திவாகரை விஜே பார்வதி ஓங்கி மிதித்ததை பார்த்து அங்கிருந்த ஹவுஸ்மேட்ஸே ஷாக் ஆகிப்போய் உள்ளனர். அதைப்பற்றி பார்க்கலாம்.

Bigg Boss Tamil Promo
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 5-ந் தேதி தொடங்கப்பட்டது. அந்நிகழ்ச்சியில் மொத்தம் 20 போட்டியாளர்கள் களமிறக்கப்பட்டு உள்ளனர். திவாகர், சபரி, நந்தினி, சுபி, விஜே பார்வதி, கனி, எஃப் ஜே, அரோரா, அகோரி கலையரசன், இயக்குனர் பிரவீன் காந்தி, ரம்யா ஜோ, கானா வினோத், அப்சரா, ஆதிரை, வியானா, விக்கல்ஸ் விக்ரம், கெமி, கம்ருதீன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். இவர்கள் உள்ளே சென்ற முதல் நாளில் இருந்தே ஒருவருக்கொருவர் சண்டைபோட்டு வருகிறார்கள். இந்த நிலையில், தற்போது வெளியாகி உள்ள புரோமோவிலும் சண்டை போடுவது போன்ற காட்சிகள் தான் இடம்பெற்று உள்ளன.
மார்னிங் டாஸ்க்
ஆனால் அவர்கள் உண்மையிலேயே சண்டை போடவில்லை. தினந்தோறும் காலையில் போட்டியாளர்களுக்கு பிக் பாஸ் டாஸ்க் கொடுப்பார். அதன்படி இன்றைய மார்னிங் டாஸ்க் ஆக வாட்டர்மிலன் ஸ்டார் அகாடமி என்கிற டாஸ்க் கொடுத்துள்ளார். அதாவது வாட்டர்மிலன் ஸ்டார் என்கிற ஆக்டிங் அகாடமியை திவாகர் நடத்தி, சக போட்டியாளர்களுக்கு நடிப்பு கற்றுத் தர வேண்டும். இந்த டாஸ்க்கில் தான் விஜே பார்வதி திவாகரை ஓங்கி ஒரு மிதி விட்டுள்ளார்.
திவாகரை மிதித்த பார்வதி
அதன்படி திமிரு படத்தில் வரும் ஈஸ்வரி கதாபாத்திரமாக மாறிய விஜே பார்வதி, ஒரு சீனை நடித்துக் காட்டும் போது தான் திவாகரின் நெஞ்சில் ஓங்கி மிதித்துள்ளார். இதைப்பார்த்த அனைவரும் ஷாக் ஆகிப் போயினர். பார்வதி மிதித்ததும் திவாகர் பறந்து போய் கீழே விழும் காட்சிகள் புரோமோவில் இடம்பெற்று இருந்தன. இதையடுத்து துஷார் சுள்ளான் தனுஷ் ஆக நடித்திருந்தார். அவர் சுள்ளான் சூடானா சுலுக்கெடுத்துருவேன் என டயலாக் பேசுகிறார்.
நடிப்பு அரக்கன்
இறுதியாக விக்கல்ஸ் விக்ரம் வீர பாண்டிய கட்டபொம்மன் பட டயலாக்கை உணர்ச்சி பொங்க பேசியதை பார்த்து அனைவரும் கைதட்டி அவருக்கு ஆரவாரம் செய்ய, இறுதியாக வாட்டர் மிலன் ஸ்டார் திவாகர், அவரைப் பார்த்து, இந்த பிக் பாஸ் ஹவுஸோட நடிப்பு அரக்கன் விக்கல்ஸ் விக்ரம் தான் என கூறுகிறார். இதனால் இன்றைய எபிசோடில் காமெடிக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.