- Home
- Cinema
- தொலைக்காட்சி
- TRP ரேஸில் வாஷ் அவுட் ஆன கயல்; வச்சு செய்யும் எதிர்நீச்சல் 2 - இந்த வார டாப் 10 சீரியல்கள் லிஸ்ட் இதோ
TRP ரேஸில் வாஷ் அவுட் ஆன கயல்; வச்சு செய்யும் எதிர்நீச்சல் 2 - இந்த வார டாப் 10 சீரியல்கள் லிஸ்ட் இதோ
டிஆர்பி ரேஸில் வழக்கம் போல் சன் டிவி மற்றும் விஜய் டிவி சீரியல்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி உள்ளது. இந்த வாரம் டாப் 10 இடம்பிடித்த சீரியல்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

Top 10 Tamil Serial TRP Rating
சின்னத்திரையில் சன் டிவியும், விஜய் டிவியும் தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்த இரண்டு சேனல்களும் போட்டிபோட்டு ஒளிபரப்பும் சீரியல்கள் தான் டிஆர்பி ரேஸிலும் டாப் 10-ல் இடம்பிடிக்கின்றன. ஒரு சீரியலின் வெற்றி, தோல்வியை தீர்மானிப்பது அதன் டிஆர்பி ரேட்டிங் தான். அப்படி ஒவ்வொரு வாரமும் தமிழ் சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 2025-ம் ஆண்டின் 28வது வாரத்திற்கான டாப் 10 தமிழ் சீரியல்களின் டிஆர்பி பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் அதிக டிஆர்பி பெற்ற சீரியல்கள் என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
டாப் 10 சீரியல்கள்
கடந்த வாரம் 10வது இடத்தில் இருந்த விஜய் டிவியின் சின்ன மருமகள் சீரியல் தான் இந்த வாரமும் 10வது இடத்தில் இருக்கிறது. இந்த சீரியலுக்கு 6.47 டிஆர்பி புள்ளிகள் கிடைத்துள்ளன. இது கடந்த வாரத்தை விட அதிகமாகும். கடந்த வாரம் 8வது இடத்தில் இருந்த அன்னம் சீரியல் இந்த வாரம் ஒரு இடம் பின்னுக்கு தள்ளப்பட்டு 9-வது இடத்தை பிடித்துள்ளது. இந்த சீரியலுக்கு 7.09 டிஆர்பி ரேட்டிங் கிடைத்திருக்கிறது. கடந்த வாரம் 9-ம் இடத்தில் இருந்த விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இந்த வாரம் ஒரு இடம் முன்னேறி 8-ம் இடத்தை பிடித்திருக்கிறது. இந்த சீரியலுக்கு 7.49 டிஆர்பி ரேட்டிங் கிடைத்துள்ளது.
தூள் கிளப்பிய அய்யனார் துணை
விஜய் டிவியில் தற்போதைய டிரெண்டிங் சீரியலான அய்யனார் துணை கடந்த வாரம் டிஆர்பியில் சற்று சரிவை சந்தித்திருந்தது. இதனால் 7-வது இடத்தில் இருந்த அந்த சீரியல் இந்த வாரம் அதிரடியாக ஆறாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. இந்த வாரம் அய்யனார் துணை சீரியலுக்கு 7.93 டிஆர்பி ரேட்டிங் கிடைத்திருக்கிறது. கடந்த வாரம் 6-ம் இடத்தில் இருந்த மருமகள் சீரியல் இந்த வாரம் மளமளவென பின்னுக்கு தள்ளப்பட்டு 7.88 டிஆர்பி ரேட்டிங் உடன் 7-ம் இடத்தை பிடித்துள்ளது.
கயலை முந்திய சிறகடிக்க ஆசை சீரியல்
சன் டிவியின் கயல் சீரியல் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக மூன்றாவது இடத்திலேயே நீடித்து வந்த நிலையில், கடந்த வாரம் 4-ம் இடத்துக்கு தள்ளப்பட்டு இருந்தது. ஆனால் இந்த வாரம் அதைவிட குறைவான டிஆர்பி ரேட்டிங் பெற்று 5-ம் இடத்துக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. இந்த வாரம் கயல் சீரியலுக்கு 8.15 டிஆர்பி மட்டுமே கிடைத்துள்ளது. அதேபோல் சிறகடிக்க ஆசை சீரியல் இந்த வாரம் ஒரு இடம் முன்னேறி நான்காம் இடத்தை பிடித்துள்ளது. அந்த சீரியலுக்கு 8.27 டிஆர்பி புள்ளிகள் கிடைத்துள்ளன.
டாப் 3-ல் எதிர்நீச்சல் 2
டிஆர்பி ரேஸில் கடந்த சில வாரங்களாக அசுர வளர்ச்சி கண்ட சீரியல் என்றால் அது எதிர்நீச்சல் 2 தான். இந்த சீரியல் தொடங்கியதில் இருந்து கடந்த வாரம் தான் டாப் 5-க்குள் நுழைந்தது. கடந்த வாரத்தை போல் இந்த வாரமும் டிஆர்பியில் மளமளவென முன்னேறி 3-ம் இடத்தை பிடித்திருக்கிறது. இந்த சீரியலுக்கு 8.49 டிஆர்பி கிடைத்துள்ளன. வழக்கம்போல் மூன்று முடிச்சு மற்றும் சிங்கப்பெண்ணே சீரியல்கள் தான் முதல் இரண்டு இடத்தை ஆக்கிரமித்துள்ளன. இதில் இரண்டாம் இடத்தில் உள்ள மூன்று முடிச்சு சீரியலுக்கு 8.91 டிஆர்பியும், முதலிடத்தில் உள்ள சிங்கப்பெண்ணே சீரியலுக்கு 9.36 டிஆர்பியும் கிடைத்துள்ளது.