- Home
- Cinema
- தொலைக்காட்சி
- அத்தைக்கு ஷாக் கொடுத்த சந்திரகலா; பயந்து நடுங்கும் காளியம்மாள் அண்ட் கேங்; 'கார்த்திகை தீபம்' அதிரடித் திருப்பம்!
அத்தைக்கு ஷாக் கொடுத்த சந்திரகலா; பயந்து நடுங்கும் காளியம்மாள் அண்ட் கேங்; 'கார்த்திகை தீபம்' அதிரடித் திருப்பம்!
chandrakala revealed the truth about Karthik return to kaliammal in karthigai deepam: கார்த்திகை தீபம் சீரியலில் கார்த்திக் வீட்டிற்கு வந்ததை தனது அத்தையான காளியம்மாவிற்கு சொல்லவே அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

Revathi Karthik Romance Scene in Karthigai Deepam,
கார்த்திகை தீபம் சீரியலில் கார்த்திக் ரேவதிக்கு டிவோர்ஸ் நோட்டீஸ் அனுப்பியது போன்று, ரேவதியும் கார்த்திக்கிற்கு ஒரு டைவோர்ஸ் நோட்டீஸ் அனுப்பினார். ஆனால், கார்த்திக் அனுப்பியதற்கு ஒரு காரணம் இருந்தது. இதைத் தொடர்ந்து இருவரும் கோர்ட்டில் நீதிபதி முன்பு ஆஜராகினர். இந்த வழக்கு தனியாக நீதிபதி அறையில் நடைபெற்றது. அப்போது இருவரும் விவாகரத்து கேட்கவே, அவர்களது வயதை கருத்தில் கொண்டு இருவரும் 6 மாத காலம் சேர்ந்து வாழ வேண்டும் என்று ஆணையிட்டார். அதன் பிறகும் இருவருக்கும் விவாகரத்து தான் வேண்டும் என்றால் அப்போது கொடுக்கிறேன் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
Chamundeshwari vs Karthik
இதைத் தொடர்ந்து உனக்கு வேறொரு நல்ல மாப்பிள்ளையாக பார்த்து திருமணம் செய்து வைக்கிறேன் என்று சாமுண்டீஸ்வரி தனது மகள் ரேவதியிடம் கூறினார். அப்போது கார்த்திக் அங்கு வந்து ரேவதியை என்னுடன் அனுப்பி வையுங்கள். இல்லையென்றால் என்னை வீட்டிற்கு அனுமதியுங்கள். இது கோர்ட் ஆர்டர் என்றார். அப்படியில்லை என்றால் விவாகரத்தை ரத்து செய்துவிடுவேன் என்று சொல்லவே சாமுண்டீஸ்வரி, கார்த்திக்கை வீட்டிற்குள் அனுமதிக்க சம்மதித்தார்.
கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்,
உடனே ரேவதியும் கார்த்திக்கிற்கு ஆரத்தி எடுத்து கையை பிடித்து வீட்டிற்குள் அழைத்து சென்றார். கார்த்திக் மீண்டும் வீட்டிற்கு வந்த்து மயில்வாகனம், ரோகிணி, சுவாதி, ராஜராஜன் என்று எல்லோருக்குமே ஹேப்பி தான். ஆனால், இது சந்திரகலா மற்றும் சாமுண்டீஸ்வரிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிறகு ரேவதி மற்றும் கார்த்திக் இருவரும் ஒருவருக்கொருவர் கட்டியணைத்து ரொமான்ஸில் ஈடுபட்டனர். அப்போது இன்னும் 6 மாசத்தில் அத்தையின் அம்மாவை கொன்றது யார் என்று கண்டுபிடித்து மீண்டும் நின்று போன்ற கும்பாபிஷேகத்தை நடத்திகாட்டுவேன் என்று கார்த்திக் ரேவதிக்கு வாக்குறுதி அளித்தார்.
Karthik Raj Karthigai Deepam Latest Twist,
இந்த நிலையில் தான் வீட்டிற்குள் வந்த கார்த்திக்கை பழி வாங்க, அவருக்கு வீட்டில் உள்ள எல்லா வேலைகளையும் கொடுக்க வேண்டும். டிரைவர் வேலை கொஞ்ச நேரம் தான் இருக்கும். அதோடு வீட்டு வேலை, தோட்ட வேலை, ஈபி பில் கட்டுவது, கடைக்கு போறது இப்படி எல்லா வேலைகளையும் கொடுக்க வேண்டும் என்று சந்திரகலா ஐடியா கொடுக்க அதன்படி செய்தார். ஏற்கனவே இருந்த வேலைக்காரங்களை நிறுத்திவிட்டார்.
Karthik vs Chandrakala Fight
இது குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தாலும் கார்த்திக்கிற்கு இது ஒன்றும் பெரிய வேலையே கிடையாது. முதல் பாகத்தில் தொழிற்சாலையில் கூட வேலை பார்த்திருக்கிறார். இப்போது வீட்டில் வேலை பார்க்க போகிறார் அவ்வளவு தான். இதற்கிடையில் லாக்கப்பில் இருந்த காளியம்மாள், சிவனாண்டி மற்றும் முத்துவேல் ஆகிய மூவரையும் சந்திரகலா ஜாமீனில் எடுத்தார். அப்போது ஒரு அதிர்ச்சியான விஷயத்தை பகிர்ந்து கொண்டார். அதாவது கார்த்திக் மீண்டும் வீட்டிற்குள் வந்துவிட்டான்.
Chandrakala Master Plan in Karthigai Deepam
ரேவதிக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியது எல்லாம் அவனோட டிராமா. நான் தான் நம்பி ஏமாந்துவிட்டேன் என்று சொல்லவே காளியம்மாள் அதிர்ச்சி அடைந்தார். அதோடு ஒரு ஐடியாவையும் கொடுத்தார். உன்னுடைய அக்காவையும், அவனையும் சேர விடக் கூடாது. இருவருக்கும் வெறுப்பு வரும்படியான வேலைகளை செய்து கொண்டே இரு என்றார். இன்னும் 6 மாசம் தானே, அவனுக்கு டார்ஜர் கொடுத்து கொண்டே இரு. கொஞ்சம் கவனமாக இரு.
Karthigai Deepam Today Episode
ஏனென்றால் சும்மா விட மாட்டான். இனி துணிச்சலாகவே எல்லா விஷயத்தையும் செய்வான் என்று அப்படி இப்படி என்று பேசிக் கொண்டனர். எது எப்படியோ கார்த்திக்கின் ரிவெஞ்ச் ஸ்டார் ஆக போகுது. வாங்கிய எல்லாவற்றையும் மொத்தமாக திருப்பி கொடுக்க போகிறார். இது மாமியார் மருமகனுக்கு இடையில் நடக்கும் விளையாட்டு. சுவாரஸ்யமாகத்தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என்ன நடக்க போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
chandrakala revealed the truth about Karthik return to kaliammal in karthigai deepam
இது ஒரு வருத்தம் என்னவென்றால் ராஜராஜனின் வாய்ஸை மாற்றியிருக்கிறார்கள். அதை கேட்பதற்கு நல்லாவே இல்லை. எல்லா தவறும் செய்தது நீ, ஆனால், பழியை மட்டும் என் மீது போடுவீயா? அதான், அந்த கடவுளுக்கே பொறுக்கவில்லை. மாப்பிள்ளை வீட்டிற்கே திரும்ப வந்துவிட்டார் என்று ராஜராஜன் கூறினார்.