- Home
- Cinema
- தொலைக்காட்சி
- பிக் பாஸ் சீசன் 9 நாமினேஷனில் செம ட்விஸ்ட்... எல்லாரும் எலிமினேட் செய்ய விரும்பிய அந்த ஒரு நபர் யார் தெரியுமா?
பிக் பாஸ் சீசன் 9 நாமினேஷனில் செம ட்விஸ்ட்... எல்லாரும் எலிமினேட் செய்ய விரும்பிய அந்த ஒரு நபர் யார் தெரியுமா?
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் கடந்த வாரம் பிரவீன் காந்தி எலிமினேட் ஆன நிலையில், இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் யார்... யாரெல்லாம் இடம்பெற்றுள்ளார்கள் என்பதை பார்க்கலாம்.

Bigg Boss Tamil Season 9 Nomination
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 5-ந் தேதி ஆரம்பமானது. பெரியளவில் ஹைப் இல்லாமல் தொடங்கிய இந்நிகழ்ச்சியில், 10 ஆண் போட்டியாளர்களும், 9 பெண் போட்டியாளர்களும், ஒரு திருநங்கையும் களமிறக்கப்பட்டனர். இதில் நிகழ்ச்சி தொடங்கிய ஐந்தாம் நாளிலேயே நந்தினி வெளியேறினார். தனக்கு இந்த வீட்டில் ரியாலிட்டி தெரியவில்லை என்றும், எல்லாருமே போலியாக இருப்பதாக கூறி வெளியேறினார் நந்தினி. இதையடுத்து வார இறுதியில் மொத்தம் நாமினேட் ஆகி இருந்த 7 பேரில் இருந்து கம்மியான வாக்குகளை பெற்ற பிரவீன் காந்தி எலிமினேட் செய்யப்பட்டார்.
நாமினேஷன்
இதையடுத்து இரண்டாவது வாரத்திற்கான நாமினேஷன் இன்று நடைபெற்றுள்ளது. அதில் சுபி மற்றும் வியானா இருவரும் பார்வதியை தேர்வு செய்துள்ளனர். அவர் ரொம்ப டாமினேட் செய்வது போல் தோன்றுவதாக கூறி அவரை நாமினேட் செய்திருந்தனர். இதையடுத்து விக்கல்ஸ் விக்ரம் மற்றும் வாட்டர்மிலன் ஸ்டார் திவாகர் ஆகியோர் கம்ருதீனை தேர்வு செய்தனர். அவர் அடிக்க வருவதை சுட்டிக்காட்டி அவரை நாமினேட் செய்துள்ளார் திவாகர்.
சிக்கிய சபரி மற்றும் திவாகர்
அதேபோல் சபரியையும் இந்த வாரம் நாமினேட் செய்துள்ளனர். அவரை நாமினேட் செய்த கலையரசன், அவன் சில ஸ்மார்ட் ஆக விளையாடியதாக கூறி அவரை நாமினேட் செய்திருக்கிறார். இதையடுத்து வந்த துஷார், திவாகரை நாமினேட் செய்திருக்கிறார். அவர் தன்னுடைய சொந்த கருத்தை முன்வைப்பதில்லை என்றும், பார்வதி சொல்வதைக் கேட்டு செயல்படுவதாக கூறி அவரை நாமினேட் செய்துள்ளார். கடந்த வாரமும் நாமினேஷனில் இருந்த திவாகர், அதிக வாக்குகளை பெற்று தப்பினார்.
நாமினேஷனில் சிக்கியது யார்?
அதிகம் பேர் நாமினேட் செய்த நபர்களில் இருந்து தான் வழக்கமாக பிக் பாஸ் போட்டியாளர்கள் பெயர்களை படிப்பார். அந்த வகையில் இந்த வாரம் அதிகம் பேர் நாமினேட் செய்த போட்டியாளர் விஜே பார்வதி தான். இவருக்கு அடுத்தபடியாக கம்ருதீனின் பெயரைக் குறிப்பிட்டார். பின்னர் அரோரா, எஃப்.ஜே, அப்சரா, ரம்யா, சபரி, கெமி என வரிசையாக ஒவ்வொரு பெயராக சொன்ன பிக் பாஸ் இறுதியாக வாட்டர்மிலன் ஸ்டார் திவாகர் பெயரையும் கூறினார்.