- Home
- Cinema
- தொலைக்காட்சி
- ஜாமினில் வந்த வில்லாதி வில்லி அறிவுக்கரசி.. ஆட்டத்தை ஆரம்பித்த ஆதி குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
ஜாமினில் வந்த வில்லாதி வில்லி அறிவுக்கரசி.. ஆட்டத்தை ஆரம்பித்த ஆதி குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
கேமராமேன் கெவினை கொலை செய்த குற்றத்திற்காக சிறைக்கு சென்ற அறிவுக்கரசியை தற்போது ஜாமினில் வெளியே கொண்டு வந்துள்ளார் ஆதி குணசேகரன். இதையடுத்து என்ன ஆகிறது என்பதை பார்க்கலாம்.

Ethirneechal Thodargiradhu Serial Today Episode
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் விறுவிறுப்பான கதைக்களத்துடன் சென்றுகொண்டிருக்கிறது. ஆதி குணசேகரனின் சதித்திட்டத்தை முறியடித்து தர்ஷனுக்கும் பார்கவிக்கும் திருமணம் செய்துவைத்துவிட்டதாக மிதப்பில் இருந்த ரேணுகா, ஜனனி மற்றும் நந்தினிக்கு மிகப்பெரிய ட்விஸ்ட் ஒன்றை கொடுத்த ஆதி குணசேகரன், தர்ஷனுக்கும், அன்புக்கரசிக்கும் திருமணம் ஆனதாக பதிவு செய்துவிட்டதாக சொல்ல அனைவரும் ஷாக் ஆகிப்போனார்கள். அதுமட்டுமின்றி இனி பார்கவிக்கும் தர்ஷனுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என போலீஸை வர வைத்து எழுதியும் வாங்கி உள்ளார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.
அறிவுக்கரசி ரிட்டர்ன்ஸ்
தர்ஷன் - பார்கவியை பிரித்துவிட்ட கையோடு, வீட்டில் அடுத்த புயலை கிளப்பி இருக்கிறார் ஆதி குணசேகரன். அதன்படி கெவினை கொலை செய்ததற்காக ஜெயிலுக்கு சென்ற அறிவுக்கரசியை, பெயிலில் வெளியே கொண்டு வந்துள்ளார் ஆதி குணசேகரன். ஜெயிலில் இருந்து நேராக ஆதி குணசேகரனின் வீட்டிற்கு வருகிறார் அறிவுக்கரசி. அவரைப்பார்த்து நந்தினி, ரேணுகா ஆகியோர் பதறிப்போகிறார்கள். வீட்டுக்குள் வந்ததும் நடந்தவை அனைத்தையும் அறிவுக்கரசி சொன்னதை பார்த்து உனக்கு எல்லாமே தெரியுமா அறிவு என முல்லை கேட்க, இதெல்லாம் திட்டம் போட்டு என்னை செய்ய சொன்னதே குணசேகரன் மாமா தான் என ஒரு குண்டை தூக்கிப் போடுகிறார் அறிவுக்கரசி.
கோபத்தை கொட்டிய நந்தினி
பின்னர் அறிவுக்கரசியை வீட்டுக்குள் அழைத்துச் சென்று தடபுடலாக கறிவிருந்து கொடுக்கிறார் ஆதி குணசேகரன். சொத்துக்காக தான் அன்புக்கரசியை தர்ஷனுக்கு திருமணம் செய்துகொடுக்க ஆதி குணசேகரன் சம்மதித்ததாக சொல்லும் நந்தினி, இன்னும் எத்தனை பேர் சொத்தை அடிச்சு பிடுங்கி தின்னா உங்க சொத்து வெறி அடங்கும், எங்களுக்கு எதுவும் தெரியாதுனு நினைச்சிட்டு இருக்கீங்களா, உங்க தில்லுமுல்லு அம்புட்டையும் நாங்க கண்டுபிடிச்சிட்டோம் என நந்தினி சொல்ல, அவரை தடுத்து நிறுத்தும் ரேணுகா, ஜனனி வரும் வரை எதையும் சொல்ல வேண்டாம் என தடுக்கிறார்.
ஏமாற்றமடையும் ஜனனி
மறுபுறம் சக்தியை தேடி குற்றாலம் முழுவதும் அலையும் ஜனனி, ஒரு ஓட்டலுக்கு சென்று, அங்கிருக்கும் சிசிடிவியில் இவர் இங்கு வந்தாரா என்று செக் பண்ண முடியுமா என கேட்க, அந்த ஓட்டல் உரிமையாளர் மறுத்துவிடுகிறார். ஒருபுறம் சக்தியை கண்டுபிடிக்க முடியாமல் ஜனனி திணறி வர, மறுபுறம், ஆதி குணசேகரன், தன்னுடைய ஆட்டத்தை தீவிரப்படுத்தி இருக்கிறார். ஜனனி வருவதற்குள் வீட்டை தன்னுடைய கண்ட்ரோலுக்கு கொண்டுவர பார்க்கிறார். இந்த ஆட்டத்தில் ஆதி குணசேகரன் வெல்வாரா? அவரின் ஆட்டத்தை ஜனனி அடக்குவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

