- Home
- Cinema
- தொலைக்காட்சி
- ஜனனி 3 நாளில் சாகப்போறா... புது குண்டை தூக்கிப்போட்ட அறிவுக்கரசி - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
ஜனனி 3 நாளில் சாகப்போறா... புது குண்டை தூக்கிப்போட்ட அறிவுக்கரசி - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனியை மூன்று நாட்களில் கொலை செய்ய இருப்பதாக அறிவுக்கரசி சொன்னதைக் கேட்டு அனைவரும் ஷாக் ஆகிறார்கள். அதன்பின் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

Ethirneechal Thodargiradhu Serial Today Episode
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் சக்தியை ராமசாமி மெய்யப்பன் கடத்தி வைத்திருப்பதால், அவரிடம் இருந்து சக்தியை மீட்க சென்றிருக்கிறார் ஜனனி. தன்னிடம் ஆதி குணசேகரன் சம்பந்தப்பட்ட வீடியோவை கொடுத்தால் தான் சக்தியை விடுவிப்பேன் என கூறி இருக்கிறார் ராமசாமி. அவரிடமும் இரண்டு நாள் டைம் கேட்டு இருக்கிறார் ஜனனி. அதற்கிடையில் சக்தி அடைத்து வைக்கப்பட்டுள்ள இடத்தை நோக்கி நகர்ந்து வருகிறார் ஜனனி. அவர் சக்தியை கண்டுபிடித்தாரா? அவர் ராமசாமியிடம் இருந்து சக்தியை காப்பாற்றினாரா? என்கிற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு இன்றைய எபிசோடில் பதில் கிடைத்ததா என்பதை பார்க்கலாம்.
டென்ஷன் ஆன ஜனனி
ஜனனிக்கு போன் போட முயன்ற சக்தியை அடிவெளுக்கும் ராமசாமி மெய்யப்பன், அவரை கயிற்றால் கட்டிப்போட்டு வைத்திருக்கிறான். பின்னர் ஜனனிக்கும் போன் போட்டு வீடியோ எப்போ கிடைக்கும் என கேட்டு டார்ச்சர் பண்ணுகிறார். ஒருகட்டத்தில் டென்ஷன் ஆன ஜனனி, உனக்கு தேவை வீடியோ தான, இன்னும் ரெண்டு நாள்ல அது உன் கைக்கு வந்திரும். அதுவரைக்கும் சும்மா என்னை போன் போட்டு டார்ச்சர் பண்ணாத என சொல்கிறார் ஜனனி. இதனால் ராமசாமி மெய்யப்பனும் சைலண்ட் ஆகி விடுகிறார். சக்தி காயங்களுடன் ஜனனியின் வருகைக்காக காத்திருக்கின்றார்.
அறிவுக்கரசியை எதிர்க்கும் விசாலாட்சி
மறுபுறம் வீட்டில் இருந்து பார்கவியை துரத்திவிட அறிவுக்கரசி பிளான் போட்டு வரும் நிலையில், விசாலாட்சி வீட்டுக்குள் எண்ட்ரி கொடுக்கிறார். அப்போது வீட்டுக்குள் அறிவுக்கரசி இருப்பதை பார்த்து ஷாக் ஆன விசாலாட்சி, இந்த ரெளடி பொம்பளை வந்து உக்காந்துகிட்டு அவ, இவனு பேசிக்கிட்டு இருக்கா நீங்கெல்லாம் என்னடி சும்மா இருக்கீங்க என ரேணுகாவை பார்த்து கேட்க, அதற்கு ரேணுகா, இத்தனை நாள் நாங்க சொன்னப்ப எல்லாம் நம்பல, இப்போ தான் தெரியுதா அவ ரெளடி பொம்பளனு என பதிலடி கொடுக்கிறார். பின்னர் நீ வெளிய போ என அறிவுக்கரசியை அடிக்க பாய்கிறார் தர்ஷினி.
அறிவுக்கரசி சொன்ன பகீர் தகவல்
இதனால் கடுப்பான அறிவுக்கரசி, அருவாமனையை எடுத்துக் கொண்டு அங்கிருக்கும் அனைவரையும் மிரட்டுவதோடு, ஜனனி மூணு நாள்ல சாகணும்கிறதுனால தான் நான் அமைதியாக இருக்கிறேன் என சொல்ல, அதைக்கேட்டு விசாலாட்சி பேரதிர்ச்சி அடைகிறார். இதன்மூலம் ஜனனியை கொல்ல, இவர்கள் பிளான் போட்டுள்ள விஷயம் அனைவருக்கும் தெரியவருகிறது. இதையடுத்து என்ன ஆனது? ஜனனியை கொல்ல அறிவுக்கரசி என்ன பிளான் போட்டிருக்கிறார்? அறிவுக்கரசியை வீட்டை விட்டு துரத்தினார்களா? இல்லையா? என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.

