- Home
- Cinema
- தொலைக்காட்சி
- வீட்டை விட்டு துரத்தப்படும் பார்கவி... தர்ஷன் எடுத்த அதிரடி முடிவு என்ன? எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
வீட்டை விட்டு துரத்தப்படும் பார்கவி... தர்ஷன் எடுத்த அதிரடி முடிவு என்ன? எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தர்ஷனை, அன்புக்கரசி உடன் சேர்த்து வைக்கும் வேலைகளில் இறங்கி உள்ள அறிவுக்கரசி, பார்கவியை வீட்டை விட்டு விரட்ட முடிவெடுத்து அதற்கான வேலைகளில் இறங்கி உள்ளார்.

Ethirneechal Thodargiradhu Serial Today Episode
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில், ஜனனியை வீட்டைவிட்டு வெளியே அனுப்பிய பின்னர் ஆதி குணசேகரன் தன்னுடைய அடக்குமுறையை தொடங்கி இருக்கிறார். வீட்டில் உள்ள பெண்களை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அவர், யாருக்கும் தெரியாமல் நைசாக தர்ஷனுக்கும், அன்புக்கரசிக்கும் திருமணம் ஆனதாக பதிவு செய்து அவர்களை சட்டப்படி தம்பதி ஆக்கி இருக்கிறார். இதுபோதாது என்று அன்புக்கரசியை வைத்து பார்கவியை இந்த வீட்டை விட்டு வெளியே அனுப்ப பல சதிவேலையும் நடந்து வருகிறது. இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
பார்கவியை மிரட்டும் அறிவுக்கரசி
தர்ஷன் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக கூறி அன்புக்கரசி டிராமா பண்ணிய நிலையில், அதற்கு மறுப்பு தெரிவிக்காமல் கல்லூளிமங்கன் போல் தர்ஷன் நின்றதை பார்த்து அப்செட் ஆன பார்கவி, அவன் மீது அதிருப்தி அடைகிறார். தர்ஷனிடம் அன்புக்கரசி உடன் வாழ்வது பற்றி ஆதி குணசேகரன் கேட்க, அதற்கு தன்னுடைய பதிலை தெரிவிக்காமல் மெளனம் காக்கிறார் தர்ஷன். இதனால் களத்தில் இறங்கும் அறிவுக்கரசி, இப்போ நீ இந்த வீட்டை விட்டு போகவில்லை என்றால், கொன்றுவிடுவேன் என மிரட்டுகிறார். இப்போ நான் ஜாமின்ல தான் வெளிய வந்திருக்கேன். நாலு பேரையும் முடிச்சுவிட்டு மொத்தமா உள்ள போயிடுவேன் என வார்னிங் கொடுக்கிறார்.
சக்தியை மீட்க போராடும் ஜனனி
மறுபுறம் சக்தியை தேடி குற்றாலம் சென்றுள்ள ஜனனிக்கு ஒரு க்ளூ கிடைக்கிறது. சக்தியை அடைத்து வைத்திருக்கும் நபரை பின் தொடர்ந்து செல்கிறார் ஜனனி. அவர் ஏதோ பிரச்சனையில் இருப்பதால் நாமும் வில்லங்கத்தில் சிக்கிவிடுவோமோ என கார் டிரைவர் பயப்பட, உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராமல் நான் பார்த்துக் கொள்கிறேன். தயவு செஞ்சு வேமா போங்க என சொல்லி அவரை கன்வின்ஸ் செய்கிறார் ஜனனி. அதேபோல் சக்தியை அடித்து சிறைபிடித்து வைத்துள்ள ராமசாமி மெய்யப்பன், கயிற்றால் கட்டிப்போடப்பட்டு இருந்த சக்தியை அவிழ்த்து விடுகிறார்.
அடுத்தடுத்த ட்விஸ்ட் என்ன?
கட்டெல்லாம் அவிழ்த்து விட்டிருக்கிறேன். எப்பவும் எகிறு எகிறுனு எகிறுவீங்க. இப்போ எதாவது பண்ணுங்க சார் என சொல்கிறார். இதையடுத்து என்ன ஆனது? சக்தியை ஜனனி காப்பாற்றினாரா? ஆதி குணசேகரன் மற்றும் அறிவுக்கரசியின் சதி வேலைகளை ரேணுகா, நந்தினி, தர்ஷினி ஆகியோர் இணைந்து முறியடித்தார்களா? அன்புக்கரசி உடன் வாழ தர்ஷன் சம்மதித்தாரா? இல்லையா? வீடியோ ஆதாரம் ஜனனி கையில் சிக்கியதா? ஆதி குணசேகரன் பற்றி ரகசியங்கள் வெளிவருமா? போன்ற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு இனி வரும் எபிசோடுகளில் தான் விடை கிடைக்கும்.

