- Home
- Cinema
- தொலைக்காட்சி
- Pandian Stores: காதலில் விழுந்த அரசி; தங்கமயிலின் தில்லு முல்லு : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 இன்றைய அப்டேட்!
Pandian Stores: காதலில் விழுந்த அரசி; தங்கமயிலின் தில்லு முல்லு : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 இன்றைய அப்டேட்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் தங்கமயில் வேலை மற்றும் அரசியின் காதல் டிராக் பற்றிய காட்சிகள் தான் ஒளிபரப்பாக உள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2:
நாளுக்கு நாள் சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் சென்று கொண்டிருக்கிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2. இந்த சீரியலில் பாண்டியனின் 3 மகன்களும் திருமணம் செய்து கொண்டனர். இதில், ஒரு மகனுக்கு தான் தனது ஆசைப்படி நிச்சயம் செய்து சொந்த பந்தங்களுடன் திருமணம் நடைபெற்றது. ஆனால் செந்தில் வீட்டிற்கு தெரியாமல் மீனாவை திருமணம் செய்து கொண்ட நிலையில், கதிர் தனது அம்மாவின் கட்டாயத்துக்காக ராஜியை திருமணம் செய்து கொண்டார்.
பாண்டியனின் 3 பிள்ளைகளுக்கும் நடந்த திருமணம்
இதையடுத்து கோமதியின் தம்பி பழனிவேலுவிற்கு 2 முறை திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டு கடைசியில் நின்றது. இறுதியாக பழனிவேல் தனது அண்ணன்களின் விருப்பப்படி, அவர்கள் பார்த்த பெண்ணையே திருமணம் செய்து கொண்டார். இப்படி எல்லோருமே திருமணம் செய்து கொண்ட நிலையில் கடைசியாக இருப்பது பாண்டியனின் மகள் அரசி தான். இதே போன்று சக்திவேலுவின் மகன் குமரவேலுவிற்கும் இன்னும் பெண் அமையவில்லை.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகுகிறாரா ஷாலினி? புது சேனலுக்கு தாவியதால் ஏற்பட்ட குழப்பம்!
அரசி மற்றும் குமரவேல் லவ் ட்ராக்
இந்த நிலையில் இன்றைய எபிசோடில் அரசி மற்றும் குமரவேலுவின் லவ் டிராக் தான் ஒளிபரப்பாகி இருக்கிறது. அதில், இருவரும் முதல் முறையாக யாருக்கும் தெரியாமல் ரகசியமாக சந்தித்து கொள்கின்றனர். அரசியின் நம்பரை யாரிடமிருந்தோ வாங்கி குமரவேல் அவருக்கு மெசேஜ் அனுப்பியிருக்கிறார். சரி நாம் இருவரும் திருமணம் செய்து கொள்வோம். அப்போது தான் நம்முடைய 2 குடும்பமும் ஒன்று சேரும். நான் நிறைய சண்டை போட்டுருக்கேன். ஆனால் இப்போது இல்லை. சித்தப்பா கல்யாணத்துல கூட நான் உன்னையே பார்த்து கொண்டிருந்தேன். உன்னை ரொம்பவே பிடிக்கும் அரசி. நீ மட்டும் கல்யாணத்துக்கு ஓகே சொன்னால் 2 குடும்பமும் ஒன்று சேர்த்துவிடும். ராஜீ கல்யாணத்துக்கு பிறகு பெரியப்பா இப்போது ராஜீக்காக் பொறுத்துக் கொள்கிறார். நம்முடைய கல்யாணத்திற்கு பிறகு எல்லோருமே ஒன்று சேர்ந்துவிடுவோம். மாமா மச்சான் என்று முறை சொல்லி தான் கூப்பிடுவார்கள் என்றெல்லாம் டயலாக் பேசிய குமரவேல் கடைசியாக என்னை உனக்கு பிடிக்குமா அரசி என்று கேட்கிறார்.
பக்கம் பக்கமாக டயலாக் பேசும் குமரவேல் :
அதற்கு அரசி எந்த பதிலும் சொல்லாமல் புறப்பட்டுவிட்டார். உண்மையில் குமரவேல் மீது அரசிக்கும் காதல் வந்துவிட்டது. எப்போது இந்த காதல் வீட்டிற்கு தெரியும், ரகசிய திருமணமா? இன்னும் பல டுவிஸ்டுகளுடன் அவர்களது காதல் டிராக் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க, வெறும் 12 ஆவது வரையில் படித்துவிட்டு டிகிரி ஹோல்டர் என்று பொய் சொல்லிக் கொண்டு வீட்டை ஏமாற்றி வரும் மயில் இன்று புதிய வேலைக்கு செல்கிறார். ஆனால், கம்பெனி தான் அவருக்கு தெரியவில்லை. கணவர் சரவணன் தான் பைக்கில் கூட்டி செல்கிறார். கணவரை ஏமாற்ற ஒரு கம்பெனி வாசலில் நிற்கிறார். இது தான் என்னுடைய புதிய ஆபிஸ் என்று சொல்லிவிட்டு கேட் வாசலிலேயே நிற்க, சரவணன் சென்றவுடன் அன்றைய பொழுதை கழிக்க பார்க், கோயில், பஸ் ஸ்டாப் என்று சுற்றுகிறார்.
தங்கமயிலின் தில்லு முல்லு:
ஒரு இடத்தில் உட்கார்ந்து மதிய சாப்பாடு முடித்துவிட்டு நன்றாக தூங்கி எழந்திரிக்க, மாலை ஆபிஸ் முடியும் நேரத்திற்கு சரவணன் கூப்பிட வருகிறார். அதோடு இன்றைய எபிசோடு முடிகிறது. ஒரு பொய்யை மறைக்க மேல மேல பொய் சொல்லி கொண்டிருக்கும் இவர், ஒரேயடியாக உண்மையை சொல்லிவிடலாம் என்பதே பலரது கருத்து. இன்னும் என்னென்ன நடக்க போகுதுனு பொறுத்திருந்து பார்ப்போம்.
Pandian Stores: பாண்டியன் குடும்பத்தை கெடுக்க சகுனியாய் மாறிய சுகன்யா - சக்திவேலுடன் ரகசிய திட்டம்!