MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • சன் டிவியின் மெகா சர்ப்ரைஸ்... சினிமாவை போல் ஒன்றரை மணிநேரம் ஒளிபரப்பாகப்போகும் சீரியல்.!

சன் டிவியின் மெகா சர்ப்ரைஸ்... சினிமாவை போல் ஒன்றரை மணிநேரம் ஒளிபரப்பாகப்போகும் சீரியல்.!

சின்னத்திரை சீரியல்களில் பல்வேறு புதுமைகளை செய்து வரும் சன் டிவி, தற்போது ஒன்றரை மணி ஒரே கதைக்களத்துடன் சீரியலை ஒளிபரப்ப உள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : Sep 08 2025, 02:51 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Sun TV Mega Sangamam
Image Credit : youtube/suntv

Sun TV Mega Sangamam

சினிமாவில் இரண்டு படங்களுக்கு இடையே கனெக்‌ஷன் உருவாக்கி அதை ஒரே யூனிவர்ஸுக்குள் கொண்டு வருவது சமீபகாலமாக டிரெண்டாகி வருகிறது. தமிழ் சினிமாவில் எல்.சி.யு என்கிற யூனிவர்ஸை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அதேபோல் மலையாளத்தில் சமீபத்தில் லோகா யூனிவர்ஸ் தொடங்கப்பட்டது. சினிமாவுக்கு நிகராக சின்னத்திரையிலும் இரண்டு சீரியல்கள் இணைந்து ஒரே கதைக்களத்தில் பயணிப்பது போன்று உருவாக்கி வந்தனர். மகா சங்கமம் என்கிற பெயரில் இரு சீரியல்களை ஒன்றிணைத்து இதுவரை ஒளிபரப்பி வந்த நிலையில், தற்போது அதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது சன் டிவி.

24
மெகா சங்கமம்
Image Credit : Instagram/SunTV

மெகா சங்கமம்

அந்த வகையில் ஒரே நேரத்தில் மூன்று சீரியல்களை ஒன்றிணைத்து மெகா சங்கமம் ஆக ஒளிபரப்ப இருக்கிறது சன் டிவி. அதன்படி அன்னம், கயல் மற்றும் மருமகள் ஆகிய மூன்று சீரியல்கள் செப்டம்பர் 15-ம் தேதி முதல் மெகா சங்கமம் ஆக ஒளிபரப்பாக உள்ளது. மூன்று சீரியல்களும் ஒரே கதைக்களத்தில் இணைந்து பயணிக்க உள்ளதால் அதனைக் காண ரசிகர்களும் ஆவலோடு காத்திருக்கின்றனர். முதன்முறையாக சன் டிவியில் மூன்று சீரியல்கள் மெகா சங்கமம் ஆக ஒளிபரப்பாக உள்ளதால், இதற்கு எந்த அளவு வரவேற்பு கிடைக்கிறது என்பதை பொறுத்து மற்ற சீரியல்களிலும் இதை செயல்படுத்த காத்திருக்கிறதாம் சன் டிவி.

Related Articles

Related image1
புதுசு கண்ணா புதுசு... சன் டிவியில் புதிதாக களமிறங்கப்போகும் 3 முத்தான சீரியல்கள்..!
Related image2
நல்லா ஓடுற சீரியலுக்கு திடீரென எண்ட் கார்டு போடும் சன் டிவி... இன்னும் 20 எபிசோடு தான் பாக்கி இருக்காம்..!
34
ஒன்றரை மணிநேரம் ஒளிபரப்பாகும் சீரியல்
Image Credit : Instagram/SunTV

ஒன்றரை மணிநேரம் ஒளிபரப்பாகும் சீரியல்

மெகா சங்கமத்தால் செப்டம்பர் 15-ம் தேதி முதல் அன்னம், மருமகள், கயல் சீரியல்களின் மெகா சங்கமம் சுமார் ஒன்றரை மணிநேரம் நான் ஸ்டாப் ஆக ஒளிபரப்பாக உள்ளது. இதனால் ரசிகர்களுக்கு தினந்தோறும் சினிமா பார்க்கும் ஃபீலை கொடுக்க உள்ளது சன் டிவி. இதற்கு முன்னர் மருமகள் மற்றும் மூன்று முடிச்சு ஆகிய சீரியல்கள் இணைந்த மகா சங்கமம் ஹிட்டானதோடு, அது டிஆர்பியிலும் நம்பர் 1 இடத்தை பிடித்து அசத்தியது. தற்போது முதன்முறையாக மூன்று சீரியல்கள் ஒன்றிணையும் மெகா சங்கமமும் ஹிட் ஆனால், இத்தனை நாள் முதலிடத்தில் இருந்த சிங்கப்பெண்ணே சீரியலுக்கு ஆப்பு கன்பார்ம்.

44
எகிறப்போகும் டிஆர்பி
Image Credit : Instagram/SunTV

எகிறப்போகும் டிஆர்பி

சன் டிவியில் கடந்த சில வாரங்களாக மருமகள் மற்றும் அன்னம் சீரியல்களின் டிஆர்பி சரிவை சந்தித்த வண்ணம் இருந்தது. அதேபோல் கயல் சீரியலும் கடந்த வாரம் டிஆர்பி ரேஸில் பின்னுக்கு தள்ளப்பட்டது. அந்த மூன்று சீரியல்களின் டிஆர்பியை எகிற வைப்பதற்காகவே இந்த சீரியல்களை மெகா சங்கமமாக ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளனர். இதனால் இனி வரும் வாரத்தில் இந்த சீரியல்கள் டிஆர்பியில் கடகடவென முன்னேறிச் செல்லவும் வாய்ப்பு உள்ளது.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சன் தொலைக்காட்சி
கயல் (தொலைக்காட்சித் தொடர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
டைவர்ஸ் கொடுக்குறேன் ஆனா ஒரு கண்டிஷன்... ரோகிணி விரித்த வலையில் சிக்கும் மனோஜ் - சிறகடிக்க ஆசை அப்டேட்
Recommended image2
ஆதாரத்தோடு வந்து நின்ற கார்த்திக்! ஆடிப்போன சந்திரகலா.. சாமுண்டீஸ்வரி முகத்தில் சந்தோஷம்! கார்த்திகை தீபம் மெகா ட்விஸ்ட்!
Recommended image3
வயித்துல இருக்குற குழந்தையை நினைச்சு உருகும் ரோகிணி - கார்த்திகை தீபம் உருக்கமான கட்டம்!
Related Stories
Recommended image1
புதுசு கண்ணா புதுசு... சன் டிவியில் புதிதாக களமிறங்கப்போகும் 3 முத்தான சீரியல்கள்..!
Recommended image2
நல்லா ஓடுற சீரியலுக்கு திடீரென எண்ட் கார்டு போடும் சன் டிவி... இன்னும் 20 எபிசோடு தான் பாக்கி இருக்காம்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved