- Home
- Cinema
- தொலைக்காட்சி
- ஓடி ஒளிஞ்சது போதும்... சரண்டர் ஆகும் முடிவில் குணசேகரன்; ஜனனிக்கு அடுத்த சிக்கல் - எதிர்நீச்சல் தொடர்கிறது
ஓடி ஒளிஞ்சது போதும்... சரண்டர் ஆகும் முடிவில் குணசேகரன்; ஜனனிக்கு அடுத்த சிக்கல் - எதிர்நீச்சல் தொடர்கிறது
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் போலீசுக்கு பயந்து ஓடி ஒளிந்து கொண்டிருக்கும் ஆதி குணசேகரன் தற்போது சரண்டர் ஆகும் முடிவுக்கு வந்துள்ளார். அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Ethirneechal Thodargiradhu Serial Today Episode
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி, தன்னுடைய அக்காக்களான நந்தினி மற்றும் ரேணுகா உடன் சேர்ந்து தமிழ் சோறு என்கிற ஃபுட் டிரக் பிசினஸை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். ஜனனி இந்த பிசினஸை நிம்மதியாக நடத்தக் கூடாது என்பதற்காக தினசரி ஏதாவது ஒரு ரூபத்தில் கொடைச்சல் கொடுத்து வருகிறார். அந்த தடைகளை எல்லாம் மீறி பிசினஸ் பிக் அப் ஆகி ஓடி வருகிறது. இறுதியாக சாப்பாட்டில் கைவைக்க முடிவெடுத்து, முதலில் அறிவுக்கரசியை வைத்து கரப்பான்பூச்சியை பிரியாணியில் போட்டார்கள். ஆனால் அந்த பிளான் சொதப்பலில் முடிந்தது. இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
பேதி மாத்திரையை கலந்த முல்லை
அறிவுக்கரசி தான் கரப்பான்பூச்சியை பிரியாணியில் கலந்தாள் என்பது தெரியவந்ததால், இனி சப்பாடு செய்யும் போது அவர்களை கிச்சனுக்குள் அனுமதிக்கவே கூடாது என்கிற முடிவில் இருக்கிறார் ஜனனி. அப்படி இருக்கையில் கரிகாலன் ஐடியாவை கேட்டு, கிச்சனுக்குள் செல்கிறார் முல்லை. அப்போது அவரை தடுத்து நிறுத்துகிறார்கள். தண்ணி குடிக்க வந்தேன் என சொல்லி முல்லை உள்ளே வந்து அங்கிருந்த நெய் பாட்டிலை எடுத்துச் செல்கிறார். அதில் அவர் பேதி மாத்திரையை கலந்து வைத்துவிடுகிறார். இதுதெரியாமல் அந்த பாட்டிலை கடைக்கு எடுத்துச் செல்கிறார் நந்தினி.
ஈஸ்வரி பற்றி வந்த அப்டேட்
அவர்கள் நெய் பாட்டிலை கடைக்கு எடுத்துச் செல்வதை பார்க்கும் முல்லை, இன்னைக்கு நெய் ஊத்தப்போறாங்க, பிசினஸ் இன்னையோடு காலி என சந்தோஷப்படுகிறார். பிசினஸ் நடக்கும் இடத்துக்கு சென்றதும் ஆஸ்பத்திரியில் இருந்து நந்தினிக்கு போன் கால் வருகிறது. ஈஸ்வரியின் உடல்நிலை பற்றி அவருக்கு அப்டேட் வருகிறது. முன்புக்கு இப்போது நல்ல முன்னேற்றம் இருக்கிறதாக சொல்கிறார்கள் என கூறும் நந்தினி, ஈஸ்வரி சீக்கிரம் குணமாகிவிடுவார் என்று கூறுகிறார். இதைக்கேட்டு ஜனனி, தர்ஷினி ஆகியோர் சந்தோஷப்படுகிறார்கள். இதனால் ஈஸ்வரி மீண்டு வர வாய்ப்புள்ளது தெரிகிறது.
சரண்டர் ஆக முடிவெடுத்த ஆதி குணசேகரன்
மறுபுறம் தலைமறைவாக இருக்கும் ஆதி குணசேகரன் அதிரடி முடிவு ஒன்றை எடுக்கிறார். தன் தம்பிகளை நம்பி தொடர்ந்து பிளான் சொதப்பி வருவதால், போலீசில் சரண்டர் ஆக முடிவெடுக்கிறார். நான் போய் போலீஸில் சரண்டர் ஆகி, என்னால என்ன பண்ண முடியுமோ பாத்துக்குறேன் என சொல்கிறார். இதைக்கேட்டு கதிர் மற்றும் கரிகாலன் ஷாக் ஆகிறார்கள். இதுக்காகவா இவ்ளோ நாள் ஓடி ஒளிஞ்சிட்டு இருந்தோம் என சொல்கிறார்கள். இதனால் அடுத்து ஆதி குணசேகரன் என்ன முடிவு எடுக்கப்போகிறார்? சரண்டர் ஆகும் முடிவில் இருந்து பின்வாங்குவாரா? என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.

