குக் ஆக களமிறங்குகிறாரா மணிமேகலை..? புது குண்டை தூக்கிப்போட்ட பிரபலம் - ஒருவேளை இருக்குமோ..!
குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்து விலகுவதாக அறிவித்துள்ள மணிமேகலை அடுத்த சீசனில் குக் ஆக களமிறங்குகிறாரா என்கிற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
தொகுப்பாளராக சின்னத்திரையில் அறிமுகமானவர் மணிமேகலை. மியூசிக் சேனல் மூலம் தனது பயணத்தை தொடங்கிய அவருக்கு தொகுப்பாளராக இருக்கும்போதே ஏராளமான ரசிகர்கள் இருந்து வந்தனர். இதையடுத்து ஹுசைன் என்பவரை கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட அவர், அதன்பின் மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பேமஸ் ஆனார்.
இதையடுத்து அவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பு தான் அவரது வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. தனது துறுதுறு பேச்சால் குக்குகள் முதல் நடுவர்கள் வரை அனைவரையும் திணறடித்து ஸ்கோர் செய்யும் மணிமேகலைக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது. இந்நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த புகழின் காரணமாக சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றையும் ஆரம்பித்து அதிலும் கல்லாகட்டி வருகிறார் மணிமேகலை.
இதையும் படியுங்கள்... என்ன பிரச்சனை... குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை திடீரென விலகியது ஏன்? - லீக்கான தகவல்
இப்படி சின்னத்திரையில் பேமஸ் ஆனவராக வலம் வந்துகொண்டிருந்த மணிமேகலை நேற்றுடன் தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகிவிட்டதாக அறிவித்து அனைவருக்கும் பேரதிர்ச்சியை கொடுத்தார். அவரின் இந்த முடிவால் அவரது ரசிகர்கள் கடும் அப்செட் ஆகி உள்ளனர். மறுபுறம் பிரபலங்களும், அவரின் சின்னத்திரை நண்பர்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் கடந்த சீசனில் டைட்டில் வின்னர் ஆன ஸ்ருதிகா, மணிமேகலைக்கு வாழ்த்து தெரிவித்து போட்டுள்ள பதிவில், மணி டார்லிங், உனக்கு அனைத்தும் நல்லதாவே நடக்க வாழ்த்துக்கள். அடுத்த சீசனில் குக்-ஆ எதிர்பார்க்கலாமா? என கேட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் ஒருவேளை மணிமேகலை குக் ஆக களமிறங்கப்போகிறாரா என கேள்வி எழுப்ப தொடங்கி உள்ளனர். ஏனெனில் ஏற்கனவே கோமாளியாக இருந்த ஷிவாங்கி இந்த சீசனில் குக் ஆக களமிறங்கி கலக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... ‘வாத்தி’யிடம் சரண்டர் ஆன ‘வாரிசு’... பாக்ஸ் ஆபிஸில் விஜய் படத்தை பந்தாடிய தனுஷ்