MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • Kumaran in Bigg Boss: பிக்பாஸ் வீட்டில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கதிர்.. ரசிகர்களுக்கு வேற லெவல் சர்ப்ரைஸ்!

Kumaran in Bigg Boss: பிக்பாஸ் வீட்டில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கதிர்.. ரசிகர்களுக்கு வேற லெவல் சர்ப்ரைஸ்!

Kumaran in Bigg Boss: பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிர் கதாபாத்திரம் மூலம் பிரபலமான குமரன் தங்கராஜன், பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்குகிறார்.

2 Min read
Author : Vishnupriya
Published : Sep 06 2026, 03:43 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
பிக்பாஸ் வீட்டில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கதிர்
Image Credit : Kumaran Thangarajan - Instagram

பிக்பாஸ் வீட்டில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கதிர்

பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் கதிராக வந்து இல்லத்தரசிகள் முதல் இளைஞர்கள் வரை ஏராளமான ரசிகர்களை சம்பாதித்தவர் குமரன் தங்கராஜன். நடனக் கலைஞராக தனது பயணத்தை தொடங்கி, சின்னத்திரை, வெள்ளித்திரை, வெப் தொடர் என அடுத்தடுத்த கட்டங்களை கடந்து வந்துள்ள அவர், தற்போது பிக்பாஸ் தமிழ் சீசன் 10 வீட்டிற்குள் போட்டியாளராக செல்கிறார் என்ற தகவல் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 இன்று மாலை 6 மணிக்கு பிரம்மாண்டமாக தொடங்குகிறது. இந்த சீசனில் Celebrity போட்டியாளர்களுடன் சேர்ந்து Common Man-களுக்கும் பங்கேற்கின்றனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
நடனக் கலைஞராக தொடங்கிய பயணம்
Image Credit : Kumaran Thangarajan - Instagram

நடனக் கலைஞராக தொடங்கிய பயணம்

குமரன் தங்கராஜன் 1989 மார்ச்சு 10 ஆம் தேதி சென்னையில் பிறந்தவர். பள்ளிப்படிப்பை சென்னையில் முடித்த அவர், சிறு வயது முதலே நடனம் மற்றும் நடிப்பில் ஆர்வம் கொண்டிருந்துள்ளார்.

முதலில் விஜய் டிவியின் ‘ஜோடி நம்பர் 1’ நிகழ்ச்சியில் பின்னணி நடனக் கலைஞராகப் பணியாற்றியுள்ளார். தொடர்ந்து உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, மானாட மயிலாட உள்ளிட்ட நடன நிகழ்ச்சிகளில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.

Related Articles

Related image1
Lakshmi Priya in BB house: ‘மகாநதி’ காவேரி இனி பிக்பாஸ் வீட்டில் - லட்சுமி பிரியாவின் புதிய பயணம் ஆரம்பம்!
Related image2
Bigg Boss season 10: இன்று தான் அந்த நாள்! பிக்பாஸ் வீட்டுக்குள் யார் யார் செல்கிறார்கள்? வைரலாகும் லிஸ்ட்!
35
‘மாப்பிள்ளை’, ‘ஈரமான ரோஜாவே’ முதல் ‘கதிர்’ வரை!
Image Credit : Kumaran Thangarajan - Instagram

‘மாப்பிள்ளை’, ‘ஈரமான ரோஜாவே’ முதல் ‘கதிர்’ வரை!

சின்னத்திரையில், 2017 இல் ஒளிபரப்பான ‘மாப்பிள்ளை’ தொடரில் நடித்த குமரன், தொடர்ந்து ‘ஈரமான ரோஜாவே’ தொடரிலும் மாறன் என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதன் பின்னர் 2018-ல் தொடங்கிய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடிகை சித்ராவுக்கு ஜோடியாக நடித்தது அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. முல்லை–கதிர் ஜோடியின் காட்சிகளுக்கு தனி ரசிகர் பட்டாளமே உருவானது.

45
சினிமா, வெப் தொடர்களிலும் குமரன்!
Image Credit : Kumaran Thangarajan - x page

சினிமா, வெப் தொடர்களிலும் குமரன்!

சீரியல் மட்டுமின்றி திரைப்படங்களிலும் குமரன் நடித்துள்ளார். 2015-ல் வெளியான ‘இது என்ன மாயம்’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். பின்னர், வதந்தி: தி ஃபேபிள் ஆஃப் வேலோனி’ வெப் தொடரிலும், மாய தோட்டா உள்ளிட்ட படைப்புகளிலும் அவர் நடித்துள்ளார்.

மேலும், பாலாஜி வேணுகோபால் எழுதி இயக்கிய ‘குமாரசம்பவம்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாகவும் அறிமுகமானார். சின்னத்திரையில் அமைதியான கதிராக பார்த்த ரசிகர்கள், இந்தப் படத்தில் அவரை வேறொரு கோணத்தில் பார்த்தனர்.

நடிப்பு மற்றும் சமூக வலைதள செயல்பாடுகள் மூலம் பிரபலமான குமரன், பிராண்டுகளுக்கான influencer/advertising பிரசாரங்களிலும் இடம்பெற்றுள்ளார்.

55
பிக்பாஸ் வீட்டில் குமரன் தங்கராஜன்
Image Credit : Kumaran Thangarajan - x page

பிக்பாஸ் வீட்டில் குமரன் தங்கராஜன்

இந்நிலையில், பிக்பாஸ் தமிழ் சீசன் 10 வீட்டிற்குள் குமரன் தங்கராஜன் நுழைவது அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை திரையில் நடித்த கதாபாத்திரங்கள் மூலம் அறிந்த குமரனைத் தாண்டி, போட்டிகள், கருத்து வேறுபாடுகள், நட்பு, டாஸ்க் மற்றும் அழுத்தமான சூழ்நிலைகளில் அவர் எப்படி செயல்படுவார்? என்பதுதான் இனி சுவாரஸ்யமான கேள்வியாக இருக்கிறது.

குறிப்பாக, சீரியலில் அமைதியாகவும், பொறுப்பாகவும் பார்க்கப்பட்ட குமரனின் உண்மையான குணம் பிக்பாஸ் வீட்டில் எப்படி இருக்கும் என்பதே ரசிகர்களின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.

About the Author

V
Vishnupriya
பிக் பாஸ் (தமிழ்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss 2026 : பிக்பாஸ் வரலாற்றிலேயே இப்படி ஒன்று நடந்தது இல்லையாம்!
Recommended image2
Bigg Boss 10 Tamil: லட்சுமி பிரியா முதல் பிளாக் பாண்டி வரை... பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தவர்கள் முழு பட்டியல்
Recommended image3
Lakshmi Priya in BB house: ‘மகாநதி’ காவேரி இனி பிக்பாஸ் வீட்டில் - லட்சுமி பிரியாவின் புதிய பயணம் ஆரம்பம்!
Related Stories
Recommended image1
Lakshmi Priya in BB house: ‘மகாநதி’ காவேரி இனி பிக்பாஸ் வீட்டில் - லட்சுமி பிரியாவின் புதிய பயணம் ஆரம்பம்!
Recommended image2
Bigg Boss season 10: இன்று தான் அந்த நாள்! பிக்பாஸ் வீட்டுக்குள் யார் யார் செல்கிறார்கள்? வைரலாகும் லிஸ்ட்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved