- Home
- Cinema
- தொலைக்காட்சி
- ஆதி குணசேகரன் இனி ஓடவும் முடியாது... ஒளியவும் முடியாது; ஜனனி வைத்த செக்மேட் - எதிர்நீச்சலில் செம ட்விஸ்ட்
ஆதி குணசேகரன் இனி ஓடவும் முடியாது... ஒளியவும் முடியாது; ஜனனி வைத்த செக்மேட் - எதிர்நீச்சலில் செம ட்விஸ்ட்
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகரனை கைது செய்வதற்கான வேலைகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளன. இதனால் இனி வரும் எபிசோடுகள் என்னென்ன ட்விஸ்ட் நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்.

Most Awaited Twist in Ethirneechal Thodargiradhu Serial
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்த சம்பவம் அரங்கேறப்போகிறது. பண பலத்தாலும், செல்வாக்கினாலும் ஓவராக ஆட்டம் போட்டு வந்த ஆதி குணசேகரன், இனி சட்டத்தின் ஓட்டைகள் வழியாக தப்பிக்காதபடி அவருக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதற்கு முக்கிய காரணம் ஜனனி தான். அவர் எடுத்த ஒரு முடிவு அவருக்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. அப்படி ஜனனி என்ன செய்தார்? ஆதி குணசேகரன் கைதாகப்போவது எப்படி? என்பதைப்பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
ஜனனியின் சாமர்த்தியம்
ஜனனி சக்தியின் உயிரைக் காப்பாற்ற ஆம்புலன்ஸில் சென்றுகொண்டிருக்க, அப்போது அவரை வழிமறிக்கு ஆதி குணசேகரன் ஆதரவு போலீஸ் அதிகாரி ஒருவர், ஜனனி மீது சந்தேகம் இருப்பதாக கூறி, ஆம்புலன்ஸை அவரையே ஓட்ட வைக்கிறார். அந்த போலீஸ் செய்தது முட்டாள்தனமான வேலை என நிரூபித்து இருக்கிறார் ஜனனி. தான் ஆம்புலன்ஸ் ஓட்டிச் செல்லும் போது அந்த வழியாக ஒரு ஜட்ஜின் கார் எதிரே வருவதை பார்த்ததும், அவர் வீட்டு வாசலில் ஆம்புலன்ஸை கொண்டு வந்து நிறுத்தி, போலீசார் செய்யும் அராஜக வேலைகளை பற்றி பதற்றத்துடன் கூறுகிறார்.
ஆதி குணசேகரன் பற்றி ஜட்ஜ் சொன்னதென்ன?
இதையடுத்து சக்தியை மருத்துவமனையில் அனுமதிக்க அந்த ஜட்ஜ் உத்தரவிட்டதை அடுத்து, அவரை ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்துவிட்டு மீண்டும் ஜ்ட்ஜ் வீட்டுக்கு வருகிறார் ஜனனி. அப்போது தான் அந்த ஆதி குணசேகரனின் கேஸ் ஹிஸ்டிரியை படித்ததாகவும், அவர்மீது ஏகப்பட்ட வழக்குகள் இருப்பதையும் சுட்டிக்காட்டி பேசுகிறார். மேலும் அவர் தற்போது ஜாமினில் வெளியே இருக்கும் விஷயத்தையும் சொல்கிறார். பைல்களில் இருப்பது ஒருபுறம் இருக்கட்டும், நீங்கள் அவரைப்பற்றி என்ன சொல்ல நினைக்கிறீர்களோ அதை போல்டாக சொல்லும்படி கூறுகிறார்.
குணசேகரன் ஒரு மிருகம்
குணசேகரன் ஒரு மிருகம் என்றும் அவர் ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே கிரிமினல் தான் என்று கூறும் ஜனனி, குணசேகரன் தன் சொந்த மகள் தர்ஷினியையே கடத்தியது, ஜீவானந்தத்தின் மனைவியை கொலை செய்தது, அப்பத்தாவுக்கு விஷம் கொடுத்தது, பார்கவியின் தந்தையை அடித்து கொன்றது, தன் சொந்த மனைவி ஈஸ்வரியையே அடித்து கோமா ஸ்டேஜுக்கு கொண்டு சென்றது என அனைத்தையும் புட்டு புட்டு வைக்கிறார் ஜனனி. இதைக்கேட்ட அந்த ஜட்ஜ், இவ்வளவு நடந்தும் நீங்க ஏன் அவரை வெளியே நடமாட விடுறீங்க. நீங்க புகார் கொடுத்திருந்தா அந்த ஆளு இந்நேரம் உள்ள இருந்திருப்பான் என சொல்கிறார்.
விரைவில் கைதாகிறார் குணசேகரன்
அதற்கு ஜனனி, நாங்கள் எல்லாம் பண்ணிகிட்டு தான் மேடம் இருக்கோம். ஆனால் செல்வாக்கு, பணம் இதையெல்லாம் பயன்படுத்தி அவர் வெளியே வந்துவிடுகிறார் என கூறுகிறார். இதையடுத்து அதிரடி முடிவெடுக்கும் ஜட்ஜ், நானே இந்த வழக்கை சூமோட்டோ வழக்காக எடுத்து விசாரிப்பதாக கூறுகிறார். இதற்காக நானே எஸ்பி அய்யாதுரை பாண்டியன் தலைமையிலான சிறப்பு விசாரணை குழுவை நியமிப்பதாகவும், அவர்கள் இந்த வழக்கை விசாரிப்பார்கள் என்றும் கூறி இருக்கிறார். இதனால் விரைவில் ஆதி குணசேகரன் கைதாகப்போகிறார் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.

