MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • Xiaomi 18 Pro Max: வேற மாறி.. 200MP லைகா கேமரா உடன் அசத்தும் சியோமி 18 ப்ரோ.. முழு அம்சங்கள் இதோ

Xiaomi 18 Pro Max: வேற மாறி.. 200MP லைகா கேமரா உடன் அசத்தும் சியோமி 18 ப்ரோ.. முழு அம்சங்கள் இதோ

Xiaomi 18 Pro Max: சியோமி 18 ப்ரோ தொடர் செப்டம்பர் 23ல் அறிமுகமாகிறது. 8,500 எம்ஏஹெச் பேட்டரி, 200 எம்பி லைக்கா கேமரா என பல முக்கிய அம்சங்களுடன் வரும் இந்த போனின் விலை மட்டும் சஸ்பென்ஸாக உள்ளது.

3 Min read
Author : Raghupati R
Published : Sep 22 2026, 10:21 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
சியோமி 18 ப்ரோ
Image Credit : Twitter

சியோமி 18 ப்ரோ

சியோமி 18 ப்ரோ தொடரின் அறிமுக தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சியோமி 18 ப்ரோ மற்றும் சியோமி 18 ப்ரோ மேக்ஸ் ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களும் செப்டம்பர் 23, 2026 அன்று சீனாவில் அறிமுகமாகின்றன. சீன நேரப்படி இரவு 7 மணிக்கு அறிமுக நிகழ்ச்சி தொடங்குகிறது. இந்திய நேரப்படி பார்த்தால் மாலை 4.30 மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பமாகும். தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, இந்த நிகழ்ச்சியில் வழக்கமான சியோமி 18 மாடல் அறிமுகமாகாது. அந்த போன் 2026 இறுதியில் அல்லது 2027 தொடக்கத்தில் வெளியாகலாம் என்ற தகவல்கள் கூறுகின்றன. புதிய ப்ரோ தொடரின் சில முக்கிய அம்சங்கள் சியோமி ஏற்கனவே வெளியிட்டுள்ளது. இதில் பெரிய ஹைலைட்டே பேட்டரிதான். சியோமி 18 புரோவில் 7,000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட உள்ளது. அதைவிட பெரிய 8,500 எம்ஏஹெச் பேட்டரி சியோமி 18 ப்ரோ மேக்ஸில் இடம்பெற்றுள்ளது.

அதாவது ப்ரோ மாடலை விட ப்ரோ மேக்ஸில் 1,500 எம்எஹெச் கூடுதல் பேட்டரி திறன் கிடைக்கும். முந்தைய தலைமுறை சியோமி 17 ப்ரோ மேக்ஸுடன் ஒப்பிட்டாலும், புதிய மாடலில் 1,000 எம்ஏஹெச் கூடுதல் பேட்டரி திறன் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பேட்டரியின் அளவு மட்டும் இல்லை, அதற்குள் பயன்படுத்தப்பட்டுள்ள தொழில்நுட்பமும் கவனிக்க வைக்கிறது. சியோமி 18 ப்ரோ தொடரின் பேட்டரி செல்களில் 32 சதவீதம் சிலிக்கான் பயன்படுத்தப்பட்டுள்ளது. வழக்கமான கிராஃபைட் அடிப்படையிலான பேட்டரிகளுடன் ஒப்பிடும்போது, ​​சிலிக்கான் அடிப்படையிலான தொழில்நுட்பத்தில் அதிக மின்சாரத்தை சேமிக்க முடியும். இதனால் போனின் அளவை தேவையில்லாமல் பெரிதாக்காமல், அதிக திறன் கொண்ட பேட்டரியை கொடுக்க முடியும். ஆனால் 8,500 எம்ஏஹெச் பேட்டரி இருக்கிறது என்பதற்காக, 7,000 எம்ஏஹெச் மாடலை விட சரியாக 21 சதவீதம் கூடுதல் பேட்டரி பேக்கப் கிடைக்கும் என்று கணக்கு போட முடியாது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
சியோமி 18 ப்ரோ வசதிகள்
Image Credit : Twitter

சியோமி 18 ப்ரோ வசதிகள்

திரையின் வெளிச்சம், மொபைல் நெட்வொர்க் பயன்பாடு, கேமிங், கேமரா பயன்பாடு, ப்ராசஸரின் செயல்திறன் மற்றும் மென்பொருள் மேம்பாடு என பல உண்மையான பேட்டரி பேக்கப்பை தீர்மானிக்கிறது. புதிய டிஸ்ப்ளே தொழில்நுட்பத்துடன் மின்சார பயன்பாட்டை குறைக்கும் சில மேம்பாடுகளையும் சியோமி செய்துள்ளதாக கூறப்படுகிறது. முழுமையான சார்ஜிங் விவரங்கள் மற்றும் ஒரு முறை சார்ஜ் செய்தால் உண்மையில் எவ்வளவு நேரம் போன் தாக்குப்பிடிக்கும் என்பது அறிமுகத்துக்குப் பிறகே தெரியவரும்.

கேமராவிலும் சியோமி இந்த முறை பெரிய ஆட்டத்துக்கு தயாராகி வருகிறது. சியோமி 18 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் ஆகிய இரண்டு போன்களிலும் 200 எம்பி மெயின் கேமரா மற்றும் 200 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா இடம்பெறும் என்று சியோமி முன்கூட்டியே தெரிவித்துள்ளது. இரண்டு போன்களிலும் லைக்கா கேமரா அமைப்பும் வழங்கப்படுகிறது. இதனால் புதிய சியோமி 18 ப்ரோ தொடரின் மிகப்பெரிய ஹைலைட்டுகளில் ஒன்றாக கேமரா இருக்கும். அதேநேரம் இரண்டு கேமராக்களும் 200 எம்பி என்பதால் இரண்டிலும் ஒரே தரத்தில் படம் கிடைக்கும் என்று நினைத்துவிடக் கூடாது. சென்சார் அளவு, அபெர்ச்சர், லென்ஸ் அமைப்பு, படத்தை செயலாக்கும் முறை மற்றும் மென்பொருள் என பல விஷயங்கள் புகைப்படத்தின் தரத்தை தீர்மானிக்கிறது. குறிப்பாக இரவு நேர புகைப்படங்கள், போர்ட்ரெய்ட் படங்கள் மற்றும் ஜூம் செய்து எடுக்கப்படும் புகைப்படங்களில் லைக்கா கேமரா அமைப்பு என்பது மேஜிக் காட்டப்போகிறது என்பதுதான் பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது.

33
சியோமி 18 ப்ரோ சீரிஸ் அம்சங்கள்
Image Credit : Twitter

சியோமி 18 ப்ரோ சீரிஸ் அம்சங்கள்

சியோமி 18 ப்ரோ தொடரின் மற்றொரு செம அம்சம் பின்புறத்தில் கொடுக்கப்படும் இரண்டாவது டிஸ்ப்ளே. சியோமி 17 ப்ரோ தொடரில் வந்த இந்த பின்புறத் திரை, புதிய தலைமுறையில் இன்னும் பெரிதாக இருக்கும் என்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. கேமரா பகுதியுடன் ஒன்றாக இணைந்தது போன்ற தோற்றத்தையும் இது பெறலாம். ஹைப்பர்ஓஎஸ் 4 மூலம் இந்த பின்புறத்தில் செயற்கை நுண்ணறிவு உதவியுடன் பயனர்கள் தங்களுக்கு பிடித்த கார்டுகளை உருவாக்கும் வசதியும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய டிஸ்ப்ளேவிலும் அப்டேட் இருக்கிறது. புதிய எம்11 பேனல், 4,000 நிட்ஸ் அதிகபட்ச பிரைட்னஸ் மற்றும் வெறும் 0.99 மில்லிமீட்டர் பெசல்கள் போன்ற அம்சங்கள் கிடைக்கலாம். இதுதவிர தனியுரிமையை பாதுகாக்கும் வகையிலான புதிய டிஸ்ப்ளே தொழில்நுட்பமும் இடம்பெற்றுள்ளது. சியோமி 18 ப்ரோ தொடர் 2 நானோமீட்டர் பிளாட்ஃபார்மை பயன்படுத்தப்படுகிறது என்பதும் முக்கியமான தகவலாக உள்ளது. ஆனால் எந்த சிப்செட் பயன்படுத்தப்பட்டது என்பது இன்னும் முழுமையாக உறுதிப்படுத்தப்படவில்லை. குவால்காம் ஸ்னாப்டிராகன் தொடர்பான முக்கிய நிகழ்ச்சியும் செப்டம்பர் 22 முதல் 24 வரை நடைபெறுவதால், ப்ராசசர் பற்றிய முழு விவரங்கள் சியோமி அறிமுக நிகழ்ச்சியில் தெரியவரலாம்.

விலைதான் இப்போது பெரிய சஸ்பென்ஸ். சியோமி இதுவரை புதிய போன்களின் அதிகாரப்பூர்வ விலையை அறிவிக்கவில்லை. முந்தைய தலைமுறை சியோமி 17 ப்ரோ 4,999 சீன யுவான் தொடக்க விலையிலும், சியோமி 17 ப்ரோ மேக்ஸ் 5,999 சீன யுவான் தொடக்க விலையிலும் அறிமுகமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த முறை பெரிய பேட்டரி, இரட்டை 200 எம்பி கேமரா மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் என பல அப்டேட்கள் இருப்பதால் விலை எந்த அளவுக்கு செல்லும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சியோமி தலைவர் லூ வெய்பிங் முன்பு தெரிவித்த தகவலின்படி, 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட போனுக்கான மெமரி பாகங்களின் செலவு 2025 தொடக்கத்துடன் ஒப்பிடும்போது சுமார் 1,500 சீன யுவான் அதிகரித்துள்ளது. ஆனால் இந்த செலவு உயர்வு சியோமி 18 ப்ரோ தொடரின் விலையில் எந்த அளவுக்கு எதிரொலிக்கும் என்பது இன்னும் தெரியவில்லை. மேலும் இந்திய அறிமுக தேதி மற்றும் இந்திய விலை குறித்த அதிகாரப்பூர்வ தகவலும் இன்று வெளியாகவில்லை. தற்போதைக்கு 7,000 எம்ஏஹெச் மற்றும் 8,500 எம்ஏஹெச் பேட்டரிகள், இரட்டை 200 எம்பி லைக்கா கேமராக்கள், பின்புற டிஸ்ப்ளே, ஹைப்பர்ஓஎஸ் 4 மற்றும் 2 நானோமீட்டர் பிளாட்ஃபார்ம் ஆகியவை முக்கிய ஹைலைட்டுகளாக உள்ளன.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
நகர்பேசி
தொழில்நுட்பம்
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
பூமியை தாக்கப்போகும் சூரிய புயல்கள்: சூரியனின் 3D ரகசியத்தை உடைத்த ஆதித்யா-எல்1!
Recommended image2
200MP கேமரா, கிளாஸ் பாடி டிசைன்: லீக்கான ஒன்பிளஸ் டர்போ 7-ன் அசுரத்தனமான அம்சங்கள்!
Recommended image3
விண்ணில் இருந்து விழும் 1.5 டன் நாசா விண்கலம்: சென்னை, பெங்களூரு ஆபத்தா? எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!
Related Stories
Recommended image1
Hero Bike Offers: தீபாவளி ஆஃபர் ஆரம்பம்! Hero பைக், ஸ்கூட்டர்களுக்கு ரூ.10,000 வரை கேஷ்பேக்
Recommended image2
Tata Aeris: டிசையர், ஹூண்டாய் ஆராவுக்கு தண்ணி காட்டப்போகும் டாடா ஏரிஸ்.. இந்திய மக்கள் வெயிட்டிங்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved