108 - 200 எம்பி கேமரா இருந்தும்.. ஐபோனை மிஞ்ச முடியாத ஆண்ட்ராய்டு போன்கள்.. ஏன் தெரியுமா?
ஸ்மார்ட்போன் கேமராக்களில் மெகாபிக்சல்கள் மட்டுமே முக்கியமல்ல என்பதை இந்த கட்டுரை விளக்குகிறது. லென்ஸின் தரம், சென்சார் அளவு மற்றும் பட செயலாக்கம் போன்ற காரணிகள் சிறந்த புகைப்படங்களுக்கு பங்களிக்கின்றன, இது ஐபோனின் வெற்றிக்கு காரணமாக அமைகிறது.
iPhone vs Android
இன்றைய காலக்கட்டத்தில் யாரேனும் போனை வாங்கினால், அதை வாங்கும் முன் முதலில் பார்ப்பது அதன் கேமராவைத்தான். கேமராவில் அதிக மெகாபிக்சல்கள் இருந்தால், ஸ்மார்ட்போனை எளிதாக வாங்குகிறார்கள். ஆனால் இங்கே புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், போனில் அதிக மெகாபிக்சல்கள் கொண்ட கேமரா இருப்பது அவசியமா?
iPhone
மெகாபிக்சல்களை அதிகரிப்பது நல்ல படங்களுக்கு உத்தரவாதம் அளிக்குமா? எப்படியிருந்தாலும், இது உண்மையாக இருந்தால், இப்போது ஆண்ட்ராய்டு தொலைபேசிகள் ஐபோனை தோற்கடித்திருக்குமமே என்ற கேள்வி எழுவது இயல்பு ஆகும். ஆனால் ஐபோனின் 48 மெகாபிக்சல்கள் ஆண்ட்ராய்டின் 200 மெகாபிக்சல்களுடன் போட்டியிட முடியாது.
Android
ஆண்ட்ராய்டின் 200 மெகாபிக்சல்கள் இல்லாத ஐபோனின் 48 மெகாபிக்சல்களில் என்ன தரம் உள்ளது என்பதை பற்றி தெரிந்து கொள்வது அவசியம் ஆகும். ஒரு ஃபோனின் கேமராவில் மெகாபிக்சல்களும் முக்கியமானவை, ஆனால் ஒரு போனில் அதிக மெகாபிக்சல்கள் இருப்பது வித்தியாசத்தை ஏற்படுத்தாது.
Camera
மெகாபிக்சல்களுடன், பல அம்சங்களும் சிறந்த தரத்திற்கு முக்கியமானவை. சென்சார் அளவு, லென்ஸ் தரம், துளை அளவு மற்றும் பட செயலாக்கம் ஆகியவை இதில் அடங்கும். ஒரு ஸ்மார்ட்போனின் கேமராவில் இவை அனைத்தும் இருந்தால், அந்த போனின் புகைப்படம் எந்த மெகாபிக்சல்கள் கொண்ட கேமராவை விடவும் சிறப்பாக இருக்கும்.
5G iphone
போனை வாங்கும் போது, நீங்கள் வாங்கும் போனில் எந்த லென்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. லென்ஸின் தரம் என்ன, அதில் சென்சார் அளவு, இமேஜ் ப்ராசசிங் உள்ளதா இல்லையா என்பதை சரிபார்ப்பது மிகவும் அவசியம். ஒரு நல்ல புகைப்படத்திற்கு லென்ஸ் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
Apple iPhone 13
ஆண்ட்ராய்டு போன்களில் காணப்படும் 200 மெகாபிக்சல் கேமரா, ஐபோனின் 48 மெகாபிக்சல் கேமராவால் எடுக்கக்கூடிய புகைப்படங்களை கிளிக் செய்ய முடியாது. பல ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தங்கள் புதிய போன்களை அப்டேட் செய்யும் ஒவ்வொரு முறையும் கேமராவின் மெகாபிக்சல்களை அதிகரிக்க நினைக்கின்றன.
iPhone 15 Pro Max
ஆனால் அவர்கள் அதன் படத் தரம், மென்மையான வீடியோ மாற்றம் தரம் மற்றும் பெரிதாக்கும் தரம் ஆகியவற்றை மேம்படுத்தவில்லை, இவை அனைத்தும் ஐபோனில் எளிதாகக் காணப்படுகின்றன. சமூக ஊடகங்களின்படி, பெரும்பாலான புகைப்பட-வீடியோ படைப்பாளர்கள் ஐபோனையே வைத்துள்ளனர்.
3% அதிகரிப்பு எப்போ தெரியுமா? பறந்து வந்த 7வது சம்பள கமிஷன் அப்டேட்.. செக் பண்ணுங்க