MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • பாஸ் நீங்க நடந்தா மட்டும் போதும்; பணம் கொட்டும்; இத மட்டும் செய்யுங்க!!

பாஸ் நீங்க நடந்தா மட்டும் போதும்; பணம் கொட்டும்; இத மட்டும் செய்யுங்க!!

Money Earning Walking Apps : நடைபயிற்சி மேற்கொள்வது உடல் ஆரோக்கியத்தையும், மனநலனையும் பராமரிக்க உதவுவதோடு உங்களுக்கு வருமானமும் ஈட்டி தரும். இது குறித்த விவரங்களை இங்கு காணலாம். 

3 Min read
Author : Kalai Selvi
| Updated : Oct 10 2024, 12:58 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Walking Apps To Earn Money In Tamil

Walking Apps To Earn Money In Tamil

நாம் நடப்பது என்பது நம்முடைய நலனுக்காக தான். அது முழுக்க முழுக்க நம்முடைய தனிப்பட்ட தேவைகள் சார்ந்தது. ஆனால் நடைபயிற்சிக்கு உண்மையான பரிசுகளை வழங்கும் சில செயலிகள் (apps) உள்ளன. நாம் நடப்பதற்கு ஏற்றார் போல அதிலிருந்து பரிசுகளை பெற்றுக் கொள்ளலாம். இந்த பரிசுகளில் பணமும் அடங்கும். இந்தியாவில் நடப்பதன் மூலம் பணம் சம்பாதிக்கும் மக்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. 

ஒருவர் தினமும் நடைபயிற்சி மேற்கொள்வது அவருடைய உடல் நலத்திலும், மனநலத்திலும் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும்.  சாதாரணமாக ஒரு நபர் தினமும் நடைபயிற்சி செய்பவராக இருந்தால் அவருடைய இதய ஆரோக்கியம் மேம்படும். உடல் எடை கட்டுக்குள் இருக்கும். கால்கள் வலிமையாக மாறும், மன நலமும் மகிழ்ச்சியாக ஆகிவிடும்.

அதனால் தான் மருத்துவர்கள் எந்த நோயாக இருந்தாலும் அவர்களை உடற்பயிற்சியில் ஈடுபட சொல்லி வலியுறுத்துவார்கள்.  கடினமான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள முடியாதவர்கள் தினமும் நடந்தாலே போதுமானது. அப்படி இருக்கும்போது நடக்கும்போது சம்பாதிக்கவும் முடியும் என்பது நல்ல ஐடியா தானே. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Walking Apps To Earn Money In Tamil

Walking Apps To Earn Money In Tamil

இந்த செயலிகள் உங்களுடைய காலடிகளை (steps) கண்காணித்து, கிரிப்டோகரன்சி, மதிப்பீடு செய்யக் கூடிய சலுகைகள்  (redeem) அல்லது தயாரிப்புகளை உங்களுக்கு வழங்கும். சில செயலிகள் உங்களுக்கு பணத்தை வழங்கும். நீங்கள் அன்றாடம் வேலைக்குச் செல்லும் வழியில் நடப்பதம் மூலமோ அல்லது பூங்காவில் மாலை வேளையில் நிதானமாக உலா வருவதன் மூலமோ கூடுதலாக பணம் ஈட்டுவதை நினைத்து பாருங்கள். கற்பனை செய்வதே நன்றாக உள்ளதல்லவா? இந்தப் பதிவில் இந்தாண்டில் நடைபயிற்சிக்கு பணம் தரும் சில செயலிகளை குறித்து காணலாம். இந்த செயலிகளில் நீங்கள் பணம் அல்லது பரிசுகளை பெற Paytm போன்ற பண பரிமாற்ற செயலிகளையும் பயன்படுத்துவது அவசியம். 

இதையும் படிங்க:  ஹைபாக்ஸ் ஆப் மூலம் ரூ.500 கோடி மோசடி! முக்கிய நபர் சென்னையில் கைது! விளம்பரம் செய்தவர்களுக்கும் ஆப்பு!

35
Walking Apps To Earn Money In Tamil

Walking Apps To Earn Money In Tamil

StepSetGo: 

இந்தியாவில் பிரபலமாக உள்ள செயலிகளில் StepSetGo என்ற செயலி  ஒன்றாகும். உங்களுடைய ஒவ்வொரு காலடிக்கும் நாணயங்களை வழங்கி ஊக்குவிக்கிறது. இந்த செயலியின், பார்ட்னர்  பிராண்டுகள் வழங்கும் தயாரிப்புகள், சேவைகளுக்கு இந்த நாணயங்களை பயன்படுத்தலாம். இதன் மூலம் தேவையான பொருள்களை வாங்க முடியும். இந்த செயலி உங்களுக்கு சில சவால்களை வழங்கும். நீங்கள் அதனை நிறைவு செய்ய வேண்டும்.   

Sweatcoin: 

ஸ்வெட்காயின் என்பது  Sweatcoins மூலம் உங்களுக்கு  நடைபயிற்சி அல்லது ரன்னிங் மூலம் பணம் ஈட்டி தரும்.   இந்த செயலியில் பல்வேறு தயாரிப்புகள், சேவைகளை பெறலாம்.  இதில்  ஸ்வெட்காயின்களைப் பயன்படுத்தி ஷாப்பிங் செய்யலாம். 

Achievement: 
 
இந்த செயலி உடல்நலம் பேண உதவும். இதில் நடைபயிற்சி மட்டுமின்றி உடற்பயிற்சி, தியானம் ஆகியவையும் உண்டு. இந்த செயலி PayPal அல்லது நேரடி வைப்பு மூலம் பணமாக மாற்றக்கூடிய புள்ளிகளை தரும். இதில் பணத்தை பெற அதிகமாக நடக்க வேண்டி வரலாம். ஏனென்றால் கூடுதல் புள்ளிகளுக்கு பொறுமை அவசியம். 

45
Walking Apps To Earn Money In Tamil

Walking Apps To Earn Money In Tamil

Runtopia:  

நீங்கள் நடைபயிற்சி செய்வதன் மூலம் ரொக்கம், பரிசு அட்டைகள் உட்பட பல வெகுமதிகளைப் பெறலாம். இது நடப்பது மட்டுமின்றி ஓடுதல் சவால்களையும் வழங்கும். இந்த செயலியில் கிடைக்கும் புள்ளிகளை கொண்டு பல்வேறு தயாரிப்புகள், சேவைகளுக்கு சலுகைகளை பெறலாம்.  இது உங்களுடைய உடற்பயிற்சி நோக்கங்களை அடைய  தனிப்பட்ட பயிற்சி திட்டங்களையும் வழங்கும்.  சில பிரீமியம் அம்சங்களை பயன்படுத்த சந்தா கட்ட வேண்டியிருக்கும்.

CashWalk: 

உங்களுக்கு நடைபயிற்சி, ஓடுதல், சைக்கிள் ஓட்டுதல், கேம் விளையாடுதல் போன்றவற்றில் ஆர்வம் இருந்தால் இந்த செயலி ஏற்றது. இதன் மூலம் பணம் மற்றும் பரிசு அட்டைகள் போன்றவற்றை பெறலாம். 

Befitter: 

நடைபயிற்சி, ஓட்டம் உள்ளிட்ட உடற்பயிற்சி தொடர்பான நடவடிக்கைகள் மூலம் இந்த செயலியில் பணம் ஈட்ட முடியும். 

இதையும் படிங்க:  இனி Gpayயில் ரூ.50 லட்சம் வரை தங்கக் கடன் பெறலாம்! அப்ப பெர்சனல் லோன்?

55
Walking Apps To Earn Money In Tamil

Walking Apps To Earn Money In Tamil

ஸ்டெப்பெட் 

Stepbet நடைபயிற்சிக்கு பண வெகுமதிகளை அள்ளி தரும் தனித்துவமான செயலி. இதில் உடற்தகுதி இலக்குகளை முடிக்க நீங்களே இலக்கை நிர்ணயித்து பந்தயம் கட்டி கொள்ளலாம். இந்த செயலி தனிநபருடைய முந்தைய செயல்பாட்டின் அடிப்படையில் சிறப்பான இலக்குகள், சவால்களை வடிவமைத்து தரும். ஒரு சின்ன குறை என்னவெனில் நீங்கள் முன்பணம் செலுத்தி இலக்குகளை அடைவதன் மூலம் கூடுதல் பணத்தை ஈட்டலாம். இது உங்களை இலக்குகளை அடைய கூட்டி செல்லும். பணம் கட்டுவது சிலருக்கு ஏற்றதாக இருக்காது.

Lifecoin; 

இந்த செயலி உடற்பயிற்சி சவால்களை முடித்தவுடன் உங்களுக்கு Lifecoins வழங்கும். இதன் மூலம் நீங்கள் பல்வேறு தயாரிப்புகள், சேவைகளுக்காக சலுகைகளை பெற முடியும். பணம் என்பது நேரடியான பணமாக இல்லாம உங்கள் தேவையை பூர்த்தி செய்யும் சலுகைகளாக இருக்கும். 

Winwalk: 

இந்த செயலி உங்களுடைய ஒவ்வொரி காலடிக்கும்  நாணயங்களை வெகுமதியாக கொடுக்கிறது. இதன் மூலம் இந்த செயலியின் பார்ட்னர் பிராண்டுகளின் தயாரிப்புகளை வாங்கலாம்.  

கரும்புத் தின்ன கூலியா? இன்னும் ஏன் தாமத்திக்குறீங்க.. உடனே போய் நடக்க ஆரம்பிங்க!!  பணம் சம்பாதீங்க மக்களே!

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
 
4th T20 • NZ vs IND 2026
Live
NZNZ
(20.0 ov)259/7
INDIND
(0.3 ov)4/1
IND need 256 runs in 117 balls
Schedule ›
3rd TEST • SA vs AUS
Live
SASA
(57.4 ov) 329 & 158/4
AUSAUS
429
Day 4 - Session 1
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
தூங்கும் முன் மொபைல் பார்ப்பதை நிப்பாட்டுங்க... 4 அற்புத மாற்றங்களை நீங்களே பார்ப்பீங்க!
Recommended image2
9,000mAh பேட்டரி, 200MP கேமரா, 16GB ரேம், 1TB மெமரி: ஒன்பிளஸின் புத்தம் புதிய பிளாக்‌ஷிப் கில்லர் போன்கள்!
Recommended image3
தினமும் 42 நிமிடங்களுக்கு குறைவான சூரிய வெளிச்சம்: ஞாபக மறதியை அதிகரிக்கும் என புதிய ஆய்வில் தகவல்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved