- Home
- டெக்னாலஜி
- இனி இதையெல்லாம் ட்ரை பண்ணி பாருங்க! வாட்ஸ் அப்பில் அதிரடியான 6 அம்சங்கள் அறிமுகம்: பயன்படுத்துவது எப்படி?
இனி இதையெல்லாம் ட்ரை பண்ணி பாருங்க! வாட்ஸ் அப்பில் அதிரடியான 6 அம்சங்கள் அறிமுகம்: பயன்படுத்துவது எப்படி?
WhatsApp மெட்டாவின் இன்ஸ்டன்ட் மெசேஜிங் செயலியான வாட்ஸ்அப், ஆண்ட்ராய்டு மற்றும் iOS-ல் ஆறு புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஷேர் லைவ் மற்றும் மோஷன் பிக்சர்ஸ் முதல் புதிய ஸ்டிக்கர் பேக் வரை அவற்றை விரிவாகப் பார்க்கலாம்.

1. ஷேர் லைவ் மற்றும் மோஷன் பிக்சர்ஸ்
வாட்ஸ்அப் இப்போது ஆண்ட்ராய்டு, iOS பயனர்களை லைவ் மற்றும் மோஷன் புகைப்படங்களைப் பகிர அனுமதிக்கிறது. இவற்றை வீடியோவாக சமூக வலைதளங்களில் பகிரலாம்.
2. மெட்டா AI-ஆதரவு சாட் தீம்கள்
மெட்டா AI உதவியுடன் புதிய சாட் தீம்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் வாடிக்கையாளர்களை கவர வாட்ஸ்அப் முயற்சிக்கிறது.
3. மெட்டா AI உடன் வீடியோ கால் பேக்கிரவுண்ட்
வீடியோ கால்களின் போது மெட்டா AI உதவியுடன் கவர்ச்சிகரமான பின்னணிகளை உருவாக்கும் அம்சம் இதுவாகும்.
4. ஆண்ட்ராய்டில் டாக்குமெண்ட் ஸ்கேனிங்
வாட்ஸ்அப் வழியாக நேரடியாக டாக்குமெண்ட்களை ஸ்கேன் செய்து, எடிட் செய்து அனுப்ப உதவும் அம்சம் இது. இதன் மூலம் மூன்றாம் தரப்பு செயலிகளை சார்ந்திருப்பது தவிர்க்கப்படும்.
5. எளிதான குரூப் தேடல்
வாட்ஸ்அப்பில் உள்ள குரூப் பெயர்களை எளிதாகத் தேடுவதே இதன் நோக்கம். குரூப்பில் உள்ள ஒருவரின் பெயரைத் தேடினால், நீங்கள் இருவரும் உறுப்பினராக உள்ள அனைத்து குரூப்களையும் அறியலாம்.
6. புதிய ஸ்டிக்கர் பேக்
வாட்ஸ்அப்பில் கவர்ச்சிகரமான ஸ்டிக்கர் பேக்குகள் வருவது இந்த புதிய அம்சத்தின் சிறப்பம்சமாகும்.