- Home
- டெக்னாலஜி
- WhatsApp-ல் இனி எந்த மொழியிலும் பேசலாம்! மெசேஜ் மொழிபெயர்ப்பு அம்சத்தை பயன்படுத்துவது எப்படி?
WhatsApp-ல் இனி எந்த மொழியிலும் பேசலாம்! மெசேஜ் மொழிபெயர்ப்பு அம்சத்தை பயன்படுத்துவது எப்படி?
மெட்டாவின் வாட்ஸ்அப், பயனர்கள் மொழித் தடைகளைத் தாண்டி எளிதாக உரையாட, புதிய மெசேஜ் மொழிபெயர்ப்பு அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் iOS பயனர்களுக்கு இந்த அம்சம் கிடைக்கும்.

வாட்ஸ்அப் மெசேஜ் மொழிபெயர்ப்பு
மெட்டாவின் வாட்ஸ்அப், மெசேஜ் மொழிபெயர்ப்பு அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. குரல் செய்திகளை டெக்ஸ்டாக மாற்றும் வசதிக்கு பிறகு, இப்போது விரும்பிய மொழியில் மெசேஜ்களை படிக்கும் வாய்ப்பை வழங்குகிறது. மொழித் தடைகளை நீக்கவே இந்த அம்சம் என வாட்ஸ்அப் கூறியுள்ளது. தனிப்பட்ட சாட்கள், குரூப் மற்றும் சேனல் மெசேஜ்களுக்கும் இந்த அம்சம் பொருந்தும்.
வாட்ஸ்அப்
ஆண்ட்ராய்டு, iOS பயனர்களுக்கு சோதனை அடிப்படையில் இது கிடைக்கிறது. ஆண்ட்ராய்டில் ஆங்கிலம், இந்தி, ஸ்பானிஷ், ரஷ்யன் உட்பட சில மொழிகளுக்கும், iOS-ல் 19 மொழிகளுக்கும் ஆதரவு உள்ளது. மெசேஜை லாங் பிரஸ் செய்து, 'Translate' ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.
மொழிபெயர்ப்பு சேவை
விரும்பிய மொழியைத் தேர்வு செய்தால், மெசேஜ் உடனடியாக மொழிபெயர்க்கப்படும். ஆண்ட்ராய்டில் 'Auto-Translation' வசதியும் உள்ளது. இது மெசேஜ்களை தானாக மொழிபெயர்க்கும். இந்த மொழிபெயர்ப்பு செயல்முறை உங்கள் போனிலேயே நடக்கும். உங்கள் மெசேஜ்கள் சர்வர்களுக்கு அனுப்பப்படாது. வாட்ஸ்அப் AI மூலம் இந்த அம்சம் உருவாக்கப்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் கூடுதல் மொழிகளுக்கு ஆதரவளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாட்ஸ்அப் அப்டேட்
இந்த அம்சம் மூலம் மொழித் தடைகளை குறைக்க வாட்ஸ்அப் முயல்கிறது. வெவ்வேறு மொழி மெசேஜ்களை உடனடியாகப் புரிந்துகொள்வதால், சாட் அனுபவம் எளிதாகும். AI அம்சங்கள் மூலம், எதிர்காலத்தில் இது உலகளாவிய பயனர்களுக்கு விரிவுபடுத்தப்படலாம்.