- Home
- டெக்னாலஜி
- WhatsApp: வாட்ஸ்அப்பை இனி ஃப்ரீயாக பயன்படுத்த முடியாதா? மாதக் கட்டணம் செலுத்த வேண்டுமா?
WhatsApp: வாட்ஸ்அப்பை இனி ஃப்ரீயாக பயன்படுத்த முடியாதா? மாதக் கட்டணம் செலுத்த வேண்டுமா?
WhatsApp Plus Subscription: வாட்ஸ்அப் பயன்படுத்த இனி மாதந்தோறும் கட்டணம் செலுத்த வேண்டும் என்கிற செய்தி இணையத்தில் பரவி வருகிறது. இது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

WhatsApp Plus
இந்த உலகில் வாழும் கோடிக்கணக்கான மக்கள் காலை எழுந்தது முதல் இரவு படுக்கச் செல்லும் வரை வாட்ஸ்அப்பை பயன்படுத்துகின்றனர். காலை வணக்கம் முதல் அலுவலக கோப்பு பகிர்தல், புகைப்படங்கள், வீடியோக்கள் பகிர்தல், ஸ்டேட்டஸ் வைத்தல் என்று பலவற்றிற்கும் வாட்ஸ்அப் பயன்படுகிறது. பல ஆண்டுகளாக ஒரு ரூபாய் கூட கட்டணம் செலுத்தாமல் வாட்ஸ் அப்பை இலவசமாக பயன்படுத்தி வருகிறோம். இந்த நிலையில் வாட்ஸ்அப் பயன்படுத்த, இனி மாதந்தோறும் கட்டணம் செலுத்த வேண்டும் என்கிற செய்தி இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது.
சந்தா கட்டி வாட்ஸ்அப் பயன்படுத்தும் புதிய திட்டம்
வாட்ஸ்அப் நிறுவனமான மெட்டா தனது பயனாளர்களுக்கு புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இனி வாட்ஸ்அப்பில் மாதந்தோறும் சந்தா கட்டி பயன்படுத்தப்படும் வகையில் Whatsapp Plus என்கிற புதிய செயலி அறிமுகமாக உள்ளது. இது அனைவருக்கும் கட்டாயம் இல்லை. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போல வாட்ஸ்அப்புக்கும் மெட்டா வெரிஃபைடு திட்டம் வந்திருக்கிறது. இந்த கட்டண்ச் சேவை பிசினஸ் அக்கௌன்ட் வைத்திருப்பவர்களுக்கு அதிக வணிக ரீச், ப்ளூ டிக், ஆள் மாறாட்டத்தில் இருந்து பாதுகாப்பு போன்றவற்றை விரும்புபவர்களுக்காக கொண்டுவரப்பட்டுள்ளது.
மாதம் ரூ.79 செலுத்தினால் Whatsapp Plus பெறலாம்?
இந்த சந்தா சேவையானது கூடுதல் தனிப்பட்ட அம்சங்களை விரும்புவர்களுக்காக பிரத்யேகமாக கொண்டுவரப்பட்டுள்ளது. பணம் கட்டி பயன்படுத்துபவர்களுக்கு சில பிரீமியம் அம்சங்களை தரும் துணை சேவையாகும். இது ஆண்ட்ராய்டு, ios என்கிற இரண்டிலும் கிடைக்கும். மெனுவில் இதை நேரடியாக செயல்படுத்தலாம். இந்தியாவில் Whatsapp Plus மாதக் கட்டணம் ரூ.79 ஆகும். முதல்முறையாக சந்தா எடுப்பவர்களுக்கு ஒரு மாதம் இலவச சோதனை கிடைக்கும். அந்த காலம் முடிந்த பிறகு சந்தாவை ரத்து செய்யாமல் விட்டால் ஒவ்வொரு மாதமும் வங்கி கணக்கில் இருந்து ரூ.79 ரூபாய் பிடிக்கப்படும். எப்போது வேண்டுமானாலும் சந்தாவில் இருந்து விலகலாம். மீண்டும் எப்போது வேண்டுமானாலும் செயல்படுத்தலாம்.
Whatsapp Plus சிறப்பம்சங்கள் என்ன?
Whatsapp Plus சந்தா எடுத்தவர்களுக்கு கீழ்காணும் முக்கிய அம்சங்கள் கிடைக்கும். Whatsapp ஐகானில் நிறம் மற்றும் தீம்களை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற மாற்றலாம். ஒவ்வொரு உரையாடலுக்கும் தனித்தனியே ரிங்டோன்கள் செட் செய்து கொள்ளலாம். வழக்கமான Whatsapp-ல் மூன்று உரையாடல்களை மட்டுமே பின் செய்ய முடியும். ஆனால் வாட்ஸ்அப் பிளஸ் சந்தா எடுத்தவர்களுக்கு 20 உரையாடல்கள் வரை பின் செய்ய முடியும். செயற்கை நுண்ணறிவு (AI) கொண்டு உருவாக்கப்பட்ட ஸ்டிக்கர்கள் இமேஜ்கள், அரட்டைப் பட்டியல், வடிவமைப்பு போன்றவை கிடைக்கும். இதனால் உங்களின் வாட்ஸ்அப் அரட்டை அனுபவம் இன்னும் சிறப்பானதாக மாறும்.
Whatsapp Plus சந்தாவை எப்படி பெறுவது?
- Whatsapp Plus சந்தாவைப் பெறுவதற்கு முதலில் Whatsapp செயலியை திறந்து வலது மூலையில் உள்ள மூன்று புள்ளிகளை அழுத்தி செட்டிங்ஸ்க்கு செல்லவும்.
- அங்கே சப்ஸ்கிரைப் செய்து அல்லது Whatsapp Plus என்கிற விருப்பத்தைத் தேர்வு செய்து விலை மற்றும் அம்சங்களை முழுவதுமாக படித்த பிறகு ஒரு மாத இலவச சோதனையை தொடங்கும் பட்டனை அழுத்தவும்.
- உங்கள் பணம் செலுத்தும் முறையை சேர்த்ததும் சேவை செயலுக்கு வந்துவிடும்.
- உங்களுக்கு Whatsapp Plus சந்தா பிடிக்கவில்லை என்றால், அதே மெனுவில் இருந்து எந்த நேரத்திலும் நீங்கள் சந்தாவை ரத்து செய்து கொள்ள முடியும்.
- இந்த முயற்சி தற்போது இந்தியாவில் சில பயனாளர்களுக்கு மட்டுமே கிடைத்து வருகிறது. விரைவில் அனைவருக்கும் கிடைக்கும் வண்ணம் அப்டேட்டுகள் வெளியாகும்.
WhatsApp Plus தேவைப்பட்டால் எடுத்துக் கொள்ளலாம்
Whatsapp Plus என்பது முற்றிலும் தனிப்பட்ட விருப்பத் தேர்வு. பணம் செலுத்துபவர்களுக்கு மட்டுமே கூடுதல் அம்சங்கள் கிடைக்கும். இந்த சந்தாவை எடுக்காதவர்களுக்கு வழக்கமான செய்தி அனுப்புதல், அழைப்புகள், ஸ்டேட்டஸ், குழுக்கள் உள்ளிட்ட அனைத்து வழக்கமான சேவைகளும் பழையபடி இலவசமாகவே தொடரும்.
சுருக்கமாக சொன்னால் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போல மெட்டா நிறுவனம் Whatsapp பயனர்களுக்கும் கூடுதல் பிரீயம் சேவைகளை வழங்க முயற்சிகிறது. ரூ.79 கொடுத்து புதிய தீம்கள், ரிங்டோன்கள், எமோஜிகள், ப்ளூ டிக் போன்றவற்றை விரும்புவர்களுக்கு நல்ல தேர்வாக இருக்கும். இலவச பயனர்களுக்கு எந்த கட்டாயமும் இல்லை. நீங்கள் பழையபடி இலவச வாட்ஸ்அப்பை தொடரலாம்.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

