MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Indian Rupees: மீண்டுமொரு பண மதிப்பிழப்பு? அடியோடு மாறப்போகும் ரூபாய் நோட்டுகள்? புதிய கரன்சிக்கு மாறும் இந்தியா.!

Indian Rupees: மீண்டுமொரு பண மதிப்பிழப்பு? அடியோடு மாறப்போகும் ரூபாய் நோட்டுகள்? புதிய கரன்சிக்கு மாறும் இந்தியா.!

New Plastic Currency in India: இந்தியாவில் விரைவில் மீண்டும் ஒரு பண மதிப்பிழப்பு ஏற்படலாம் என்று தகவல்கள் கசிந்துள்ளது. அதற்கான காரணங்கள் மற்றும் பின்னணி குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

3 Min read
Author : Ramprasath S
Published : Jun 04 2026, 01:20 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
New Plastic Currency in India
Image Credit : Asianet News

New Plastic Currency in India

இந்தியாவில் தற்போது புழக்கத்தில் இருக்கும் ரூபாய் நோட்டுக்களை மாற்ற ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் ரூபாய் நோட்டுகள் பரிவர்த்தனைகளுக்கான கருவியாக மட்டுமல்லாமல், பொருளாதாரத்தின் அடையாளமாக விளங்கி வருகின்றன. 

ஆன்லைன் மற்றும் UPI பரிவர்த்தனைகள் அதிகரித்த போதிலும் காகிதப் புழக்கங்களுக்கான தேவை குறையவில்லை. இந்த நிலையில் ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதற்கான செலவு உயர்ந்து வரும் நிலையில், பாலிமர் நோட்டுக்களை அறிமுகப்படுத்த ரிசர்வ் வங்கி முயற்சிகளை எடுத்து வருகிறது.

இதையும் படியுங்கள்:EB Bill: கரண்ட் பில் ஏறிட்டே போகுதா? மத்திய அரசின் சூப்பர் சோலார் திட்டம் இதோ.! எப்படி விண்ணப்பிப்பது? விரிவான தகவல்கள்.!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
பாலிமர் நோட்டுகள்
Image Credit : Getty

பாலிமர் நோட்டுகள்

தற்போது புழக்கத்தில் இருக்கும் காகித நோட்டுகள் சீக்கிரம் கிழிந்து போவது, அழுக்காகி விடுவது போன்ற பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. மேலும் பணத்திற்கான தேவை அதிகரிப்பு, கள்ள நோட்டுக்களை தடுப்பது போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக பிளாஸ்டிக் நோட்டுக்களை அச்சிட ரிசர்வ் வங்கி முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

பருத்தியிலான காகிதத்திற்குப் பதிலாக மெல்லிய மற்றும் நெகிழ்வான பிளாஸ்டிக் கொண்டு அச்சிடப்படும் நோட்டுக்கள் பாலிமர் நோட்டுகள் என அழைப்படுகின்றன. இவை ஏடிஎம் அட்டைகளைப் போல கடினமாக இல்லாமல் காகித நோட்டுகளைப் போல எளிதாக மடிக்கக்கூடியதாகவும், தினசரி பயன்பாட்டிற்கு ஏற்ற வகையிலும் இருக்கும்.

இதையும் படியுங்கள்: LPG New Rules 2026: இனி இவர்களுக்கு சிலிண்டர் கிடையாது.! மத்திய அரசு எடுத்த அதிர்ச்சி முடிவு.! LPG சிலிண்டர் விநியோகத்தில் புதிய கட்டுப்பாடு.!

Related Articles

Related image1
EB Bill: கரண்ட் பில் ஏறிட்டே போகுதா? மத்திய அரசின் சூப்பர் சோலார் திட்டம் இதோ.! எப்படி விண்ணப்பிப்பது? விரிவான தகவல்கள்.!
Related image2
IRCTC: ஒரே டிக்கெட்டில் தமிழ்நாட்டின் 7 புண்ணிய தலங்களுக்கு செல்லலாம்.! IRCTC வழங்கும் பம்பர் ஆஃபர்.!
37
நோட்டுக்களை அச்சிடுவதற்கான செலவு அதிகரிப்பு
Image Credit : Asianet News

நோட்டுக்களை அச்சிடுவதற்கான செலவு அதிகரிப்பு

பெரும்பாலான மக்கள் Google pay, Phonepe உள்ளிட்ட டிஜிட்டல் பரிவர்த்தனைகளை தொடர்ந்து பயன்படுத்தி வரும்போதும், காகித பயன்பாடு இன்னமும் குறையவில்லை. 2016 ஆம் ஆண்டு நிதியாண்டின் படி ரூ.16.6 லட்சம் கோடி ரொக்கம் புழக்கத்தில் இருந்தது. 2025 ஆம் ஆண்டில் இது இரண்டு மடங்கிற்கும் மேலாக அதிகரித்து, ரூ.37.2 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. 

பண மதிப்பிழப்பு நடவடிக்கை, டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரிப்பு ஆகியவை இருந்தாலும் இன்னமும் காகித பணமே ராஜாவாக இருந்து வருகிறது. 2024-2025 ஆம் நிதி ஆண்டில் புதிய கரன்சி நோட்டுக்களை அச்சிடுவதற்கான செலவு ரூ.6,373 கோடியை எட்டியுள்ளது.

இதையும் படியுங்கள்: PNG: சிலிண்டர் வேண்டாம்.! இனி 24 மணி நேரமும் பைப் மூலம் கேஸ் வரும்.! PNG இணைப்பு வாங்குவது எப்படி?

47
பாலிமர் நோட்டுகள் சிறந்த மாற்று
Image Credit : Equitypandit

பாலிமர் நோட்டுகள் சிறந்த மாற்று

கடந்த நிதியாண்டில் மட்டும் ரூ.2,380 கோடி எண்ணிக்கையிலான சேதமடைந்த காகிதத்தாள்கள் புழக்கத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 12.3 சதவீதம் அதிகமாகும். குறிப்பாக மக்கள் அதிகம் பயன்படுத்தும் 500 ரூபாய் நோட்டுகள் மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் பெருமளவில் சேதமடைந்து திரும்பப் பெறப்பட்டுள்ளன. 

இந்தியாவில் தினமும் ரூபாய் நோட்டுகள் கோடிக்கணக்கான மக்களால் கைமாற்றப்படுகின்றன. ஒரு நோட்டு பலரால் பயன்படுத்தப்படுவதால் இன் காகித நோட்டுகள் சீக்கிரமே அழுக்கு ஆகி, கிழிந்து விடுகின்றன. இந்த கிழிந்த நோட்டுகளை மீண்டும் மீண்டும் அச்சிடுவது அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் பெரும் பொருட்செலவை ஏற்படுத்துகிறது. இதற்கு பாலிமர் நோட்டுகள் சிறந்த மாற்றாக கருதப்படுகிறது.

இதையும் படியுங்கள்:KVP Scheme: ரூ.5 லட்சம் போட்டா ரூ.10 லட்சம் கிடைக்கும்.! மத்திய அரசின் சூப்பர் முதலீடு திட்டம்.!

57
தொடக்க உற்பத்தி செலவு சற்று அதிகம்
Image Credit : Asianet News

தொடக்க உற்பத்தி செலவு சற்று அதிகம்

இந்தியாவில் கடந்த 2012 ஆம் ஆண்டில் மைசூர், கொச்சி, ஜெய்ப்பூர் உள்ளிட்ட ஐந்து நகரங்களில் பத்து ரூபாய் பாலிமர் நோட்டுகள் சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால் தற்போது புழக்கத்தில் இருக்கும் ஏடிஎம் மிஷின்கள் பாலிமர் நோட்டுக்களை கையாளும் அளவிற்கு தொழில்நுட்பம் வாய்ந்ததாக இல்லை. மேலும் வங்கியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகள் மற்றும் ஏடிஎம் பிரச்சனைகளால் அந்த முயற்சி நிறுத்தப்பட்டது. 

காகித நோட்டுகளை விட பாலிமர் நோட்டுகளை அச்சிடுவதற்கான தொடக்க உற்பத்தி செலவு சற்று அதிகம் என்பதும் இந்த திட்டம் கைவிடப்பட்டதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். இருப்பினும் தொடக்க கால உற்பத்தி செலவு அதிகமாக இருந்தாலும் இதனால் காலம் காகித நோட்டுகளை விட மூன்று முதல் நான்கு மடங்கு அதிகம்.

இதையும் படியுங்கள்: IRCTC: ஒரே டிக்கெட்டில் தமிழ்நாட்டின் 7 புண்ணிய தலங்களுக்கு செல்லலாம்.! IRCTC வழங்கும் பம்பர் ஆஃபர்.!

67
காகித நோட்டுகளை விட நீண்ட நாள் உழைக்கும்
Image Credit : Asianet News

காகித நோட்டுகளை விட நீண்ட நாள் உழைக்கும்

கிழிந்த நோட்டுகளுக்கு பதிலாக அடிக்கடி புதிய நோட்டுக்களை அச்சிடும் மாற்றுச் செலவுக்கு பதிலாக ஒருமுறை அதிகம் செலவு செய்து பாலிமர் நோட்டுகளை அச்சடித்து விட்டால் நீண்ட கால அடிப்படையில் செலவு பெரும் அளவு குறையும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் இதில் இடம்பெறும் டிரான்ஸ்பரென்ட் விண்டோஸ் மற்றும் மைக்ரோ ஆப்டிக் ஹாலோகிராம் போன்ற அதிநவீன பாதுகாப்பு அம்சங்கள் காரணமாக கள்ள நோட்டுகளை அச்சிடுவதும் பெருமளவு குறையும். 

தற்போது ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, வியட்நாம், ருமேனியா, புருனே, பப்புவா நியூகினியா உள்ளிட்ட 60 நாடுகள் பிளாஸ்டிக் நோட்டுகளை பயன்படுத்துகின்றன. ஆனால் அமெரிக்க டாலர் இன்னும் முழுமையாக பிளாஸ்டிக்கிற்கு மாறவில்லை. அமெரிக்க டாலர்கள் பருத்தி மற்றும் லினன் கலவையால் தயாரிக்கப்படுகின்றன.

இதையும் படியுங்கள்: Jobs: AI-யால் நெருங்க முடியாத துறைகள்.! அடுத்த 50 வருஷத்துக்கு 100% பாதுகாப்பான வேலைகள் பட்டியல்!

77
அதிநவீன ஏடிஎம் இயந்திரங்கள் தேவை
Image Credit : stockPhoto

அதிநவீன ஏடிஎம் இயந்திரங்கள் தேவை

விரைவில் இந்தியா மக்கள் அதிகம் பயன்படுத்தும் ரூ.10 மற்றும் ரூ.20 நோட்டுகளை பிளாஸ்டிக் நோட்டுகளாக அச்சடித்து சோதனை முறையில் தொடங்க திட்டமிட்டுள்ளது. தற்போது அதிநவீன ஏடிஎம் இயந்திரங்கள் புழக்கத்திற்கு வந்துள்ளதால் முந்தைய தொழில்நுட்ப சிக்கல்கள் எழாது என்று நம்பப்படுகிறது. 

அதேசமயம் பிளாஸ்டிக் நோட்டுகளை எளிதாக அறிமுகப்படுத்திவிட முடியாது. நாடு முழுவதும் உள்ள பழைய ஏடிஎம் இயந்திரங்களை புதிய கருவிகளைக் கொண்டு மேம்படுத்திய பின்னரே புதிய பிளாஸ்டிக் நோட்டுகளை பயன்படுத்த முடியும். இதற்காக ஏற்கனவே பிளாஸ்டிக் நோட்டுகளை பயன்படுத்தும் நாடுகளுடன் ஒப்பந்தம் செய்ய பேச்சு வார்த்தைகளும் நடைபெற்று வருகிறது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வணிகம்
இந்திய ரிசர்வ் வங்கி
Latest Videos
Recommended Stories
Recommended image1
Microgreens Training: மைக்ரோ கிரீன்ஸ் மூலம் மாதம் ரூ.50 ஆயிரம் சம்பாதிக்கலாம் ஈசியா.! பயிற்சி எங்க நடக்குது தெரியுமா?
Recommended image2
மாதம் 1 லட்சம் வரை ஈசியா சம்பாதிக்கலாம்.! கிராமங்களில் தொடங்கக்கூடிய 5 லாபகரமான தொழில்கள்! குறைந்த முதலீட்டில் அதிக வருமானம் பெறும் வழிகள்.!
Recommended image3
Real Estate: வீடு கட்டுவோருக்கு ஒரு குட்நியூஸ்! முதலமைச்சர் விஜய்யின் அதிரடி உத்தரவு!
Related Stories
Recommended image1
EB Bill: கரண்ட் பில் ஏறிட்டே போகுதா? மத்திய அரசின் சூப்பர் சோலார் திட்டம் இதோ.! எப்படி விண்ணப்பிப்பது? விரிவான தகவல்கள்.!
Recommended image2
IRCTC: ஒரே டிக்கெட்டில் தமிழ்நாட்டின் 7 புண்ணிய தலங்களுக்கு செல்லலாம்.! IRCTC வழங்கும் பம்பர் ஆஃபர்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved