இந்த செட்டிங்கை ஆன் பண்ணலையா? வாட்ஸ்அப் கணக்கு ஆபத்தில் இருக்கு.. உஷார் மக்களே
வாட்ஸ்அப், பயனர்களின் கணக்குகளைப் பாதுகாக்க 'கடுமையான கணக்கு அமைப்புகள்' என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அம்சம், ஹேக்கிங் மற்றும் சைபர் மோசடிகளில் இருந்து கூடுதல் பாதுகாப்பை வழங்குகிறது.

வாட்ஸ்அப் பாதுகாப்பு செட்டிங்
யாரும் இனிமேல் உங்களை எளிதில் ஏமாற்ற முடியாத அளவுக்கு, வாட்ஸ்அப் தனது பாதுகாப்பு அமைப்பை இன்னும் ஒரு படி உயர்த்தியுள்ளது. ஹேக்கர்கள், சைபர் மோசடிக்காரர்கள் அதிகரித்து வரும் சூழலில், பயனர்களின் கணக்குகளைப் பாதுகாக்கும் நோக்கில் “கடுமையான கணக்கு அமைப்புகள்” என்ற புதிய பாதுகாப்பு வசதியை வாட்ஸ்அப் அறிமுகம் செய்துள்ளது. இந்த அம்சம், சாதாரண பயனர்களுக்கும் கூடுதல் பாதுகாப்பை வழங்கும் வகையில் உள்ளது.
வாட்ஸ்அப் புதிய அம்சம்
இந்த புதிய கடுமையான கணக்கு அமைப்புகள் அம்சத்தின் முக்கிய நோக்கம், தெரியாத நபர்களிடமிருந்து வரும் ஆபத்தான தொடர்புகளை கட்டுப்படுத்துவதுதான். இதை இயக்கினால், உங்கள் கான்டாக்ட் பட்டியலில் இல்லாத எண்களில் இருந்து வரும் மீடியா கோப்புகள், இணைப்புகள், அழைப்புகள் ஆகியவற்றை நீங்கள் கைமுறையாகக் கட்டுப்படுத்த முடியும். குறிப்பாக, அறிமுகமில்லாத நபர்கள் அனுப்பும் மொழிகளின் முன்னோட்டம் கூட தானாகவே தோன்றாது. பெரும்பாலான ஹேக்கிங் முயற்சிகள் தவறான மொழிகள் மற்றும் கோப்புகள் மூலமாக நடைபெறுவதால், இந்த அம்சம் அந்த அபாயத்தை குறைக்கும் என வாட்ஸ்அப் நம்புகிறது.
வாட்ஸ்அப் செயலி
இந்த பாதுகாப்பு வசதியை இயக்குவது மிகவும் எளிது. வாட்ஸ்அப் செயலியில் அமைப்புகள்-க்கு சென்று, அதில் தனியுரிமை என்ற பகுதியைத் தேர்வு செய்ய வேண்டும். அங்கு மேம்பட்ட என்ற விருப்பத்தின் கீழ் கடுமையான கணக்கு அமைப்புகள் எந்த ஆப்ஷன் தோன்றும். அதைத் திறந்து, “ஆன்” என்பதை ஒருமுறை தட்டினால் போதும். உடனடியாக இந்த பாதுகாப்பு அம்சம் செயல்படத் தொடங்கும்.
வாட்ஸ்அப் ஹேக்கிங் தடுப்பு
வாட்ஸ்அப் கூறுவதப்படி, கடுமையான கணக்கு அமைப்புகள் என்பது ஒரு “lockdown” போன்று செயல்படும் பாதுகாப்பு அமைப்பு. குறிப்பாக பத்திரிகையாளர்கள், சமூகத்தில் பரவலாக அறியப்பட்ட நபர்கள், அல்லது சைபர் தாக்குதல்களுக்கு அதிக வாய்ப்புள்ளவர்களுக்கு இந்த அம்சத்தைப் பயன்படுத்தினால், கூடுதல் பாதுகாப்பு கிடைக்கும். இது மிகவும் நுட்பமான சைபர் தாக்குதல்களையும் தடுக்க உதவும் என மெட்டா தெரிவித்துள்ளது.
மோசடி தடுப்பு முறை
இதுவரை வாட்ஸ்அப் தனது end-to-end encryption மூலம் பயனர்களின் உரையாடல்களை பாதுகாத்து வந்தது. தற்போது, APK கோப்புகள், மோசடி லிங்குகள் மூலம் மால்வேர் பரப்பும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதால், அதற்கு எதிரான கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கையாக கடுமையான கணக்கு அமைப்புகள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஒரு சிறிய அமைப்பு மாற்றம் தான், ஆனால் அது உங்கள் கணக்கையும், பணத்தையும், தனிப்பட்ட தகவல்களையும் பாதுகாக்கும் பெரிய கவசமாக மாறும்.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

