இனி அந்த தொல்லை இருக்காது..! நிம்மதியா இருக்கலாம்.! வாட்ஸ்அப் கொடுத்த புதிய அப்டேட்
வாட்ஸ்அப் குரூப் சாட்களில் பயனர்களுக்கு அதிக கட்டுப்பாடு வழங்கும் வகையில் ஒரு புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இது வாட்ஸ்அப் வாடிக்கையாளர்களுக்கு நிம்மதியை வழங்கும் என்று எதிர்பார்க்கலாம்.

வாட்ஸ்அப் சாட் கட்டுப்பாடு
உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் இன்ஸ்டான்ட் மெசேஜிங் செயலிகளில் வாட்ஸ்அப் செயலி முன்னணி இடத்தில் உள்ளது. மெசேஜிங், காலிங், ஈஐ தொழில்நுட்பம் உள்ளிட்ட பல வசதிகளுடன், வாட்ஸ்அப் பயனர்களுக்கு எளிதான மற்றும் விரைவான அனுபவத்தை வழங்குகிறது. நிறுவனம் தொடர்ந்து புதிய அம்சங்களைச் சோதித்து, பயனர்களின் சாட் அனுபவத்தை மேம்படுத்துகிறது. இந்த முறையும், வாட்ஸ்அப் குரூப் சாட்களில் ஒரு முக்கியமான புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் புதிய அம்சம்
இந்த புதிய அம்சத்தின் மூலம், குரூப் சாட்களில் '@everyone' மென்ஷன்களை பயனர்கள் மியூட் செய்ய முடியும். இது, பெரும் மற்றும் பரபரப்பான குரூப்களில், அனைத்து உறுப்பினர்களையும் அடிக்கடி டேக் செய்வதால் ஏற்படும் இடையூறுகளை குறைக்கிறது. வாபீட்டா இன்ஃபோ (WABetaInfo) தகவலின் படி, ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்பு 2.25.27.1-ல் இந்த வசதி தற்போது சோதனைக்குள் உள்ளது.
குரூப் மென்ஷன்கள் மியூட்
தற்போது '@everyone' மென்ஷனை எந்த குரூப் உறுப்பினரும் பயன்படுத்த முடியும். இது சில சமயங்களில் பயனுள்ளதாக இருந்தாலும், மீண்டும் மீண்டும் பயன்படுத்தும்போது பயனர்களுக்குத் தொந்தரவாகும். இதனால், வாட்ஸ்அப் பயனர்களுக்கு அதிக கட்டுப்பாடு வழங்கப்பட்டுள்ளது, இந்த மியூட் ஆப்ஷன் உருவாக்கப்பட்டுள்ளது. பயனர்கள் விரும்பினால், '@everyone' அறிவிப்புகளைப் பெறுவதற்கான ஆப்ஷனும் தொடரும்.
புதிய வாட்ஸ்அப் அம்சங்கள்
இந்த புதிய வசதி தற்போது உருவாக்கப்பட்டுள்ளது, ஆனால் எதிர்கால வாட்ஸ்அப் செயலி பதிப்புகளில் பொதுமக்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பயனர்கள் குரூப் அனுபவத்தில் முழுமையான கட்டுப்பாடு பெறும் வகையில், இந்த வசதி சிறந்த உதவியாக இருக்கும். இது சிறிய, பரபரப்பான குரூப் அறிவிப்புகளை சாந்தமாக அனுபவிக்க உதவும்.