ஏன் பணக்காரர்கள் போன் கவரை பயன்படுத்துவது இல்லை? அட.! இதான் காரணமா!
எலான் மஸ்க், மார்க் சக்கர்பெர்க், ஜெஃப் பெசோஸ் போன்ற பில்லியனர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களுக்கு கவர் (Phone Covers) பயன்படுத்துவதில்லை. அவர்கள் ஏன் அதனைப் பயன்படுத்துவதில்லை என்று பலருக்கும் தெரியாத கேள்வியாக உள்ளது.

பணக்காரர்கள் போன் பழக்கங்கள்
பொதுவாக, நாம் புதிய ஸ்மார்ட்போன் வாங்கும் போது முதலில் கவர் வாங்கி கொள்வோம். ஆனால், பல பில்லியனர்கள் தங்கள் போனில் கவர் பயன்படுத்துவதில்லை. கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, டெஸ்லா மற்றும் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க், மெட்டா சிஇஓ மார்க் சக்கர்பெர்க், அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் போன்ற பில்லியனர்கள் தங்கள் போனில் மொபைல் கேஸ் எனப்படும் மொபைல் கவர்களை பயன்படுத்துவதில்லை.
சுந்தர் பிச்சை போன்
இதற்கான காரணம் என்னவென்று பலருக்கும் தெரிவதில்லை. அதனைப் பற்றி பார்க்கலாம். கவர் இல்லாமல் போனைக் பயன்படுத்துவதால் ஹீட்டிங் குறைகிறது மற்றும் நெட்வொர்க் செயல்திறன் மேம்படுத்துகிறது. பேக் கவர் இல்லாததால் போன் மென்மையாக செயல்படுகிறது. ஹீட் கட்டுப்பாடு காரணமாக போன் வேகமாக இயங்குகிறது மற்றும் செயலிகள் சிறந்த முறையில் இயங்குகிறது செயல்படுகின்றன.
எலான் மஸ்க் போன்
இதனால் பிரபல தொழிலதிபர்கள் தங்கள் போன்களை கவர் இல்லாமல் வைப்பது பொதுவானது. மேலும், போனில் கவர் வைப்பது அதன் அழகான வடிவமைப்பை மறைக்கிறது. கவர் இல்லாமல் போன் மெலிந்ததும் பிரீமியம் தோற்றத்தையும் கொடுக்கும். அந்த மொபைல் நிறுவனத்தின் இயல்பான நிறம் மற்றும் வடிவமைப்புகள் தெளிவாக வெளிப்படும்.
மார்க் சக்கர்பெர்க் போன்
கவரை பயன்படுத்துவது நெட்ஒர்க், ஆண்டனா சிக்னல்களை தடுக்கலாம், குறிப்பாக 5G நெட்வொர்க்கில். கவர் இல்லாமல் போன்கள் சிறந்த நெட்வொர்க் சிக்னல்கள் பெறுகின்றன. அதனால், பில்லியனர்கள் தங்கள் போன்களில் கவர் இல்லாமல் வைத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.