அடடா.. இவ்ளோ நாள் இது இல்லாம தான கஷ்டப்பட்டோம்! வாட்ஸ்அப்பில் சூப்பர் அப்டேட்.
WhatsApp வாட்ஸ்அப் குரூப்பில் புதிதாக இணைபவர்களுக்கு முந்தைய உரையாடல்களைப் பகிரும் புதிய வசதியை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ளது. அதிகபட்சமாக 100 பழைய மெசேஜ்களைப் பகிரும் இந்த 'Group Chat History Sharing' வசதி பற்றிய முழு விவரங்களை இங்கே படியுங்கள்.

வாட்ஸ்அப் குரூப்களில் (WhatsApp Groups) நாம் அனைவரும் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சினை உண்டு. ஒரு குரூப்பில் நாம் புதிதாக இணையும் போது, அதற்கு முன்பு அந்த குரூப்பில் மற்றவர்கள் என்ன பேசிக்கொண்டிருந்தார்கள் என்பது நமக்குத் தெரியாது. நம் ஸ்கிரீனில் எந்த மெசேஜும் இருக்காது. பழைய உறுப்பினர்கள் பேசிக்கொள்ளும் விஷயங்கள் புதிதாக இணைந்தவர்களுக்குப் புரியாமல் குழப்பத்தை ஏற்படுத்தும்.
ஆபீஸ் குரூப், பள்ளி/கல்லூரி குரூப் அல்லது அபார்ட்மெண்ட் குரூப் என எதுவாக இருந்தாலும், புதிதாக வருபவர்களுக்கு விஷயத்தைப் புரியவைக்க பழைய மெசேஜ்களை தேடிப்பிடித்து ஃபார்வர்ட் (Forward) செய்ய வேண்டியிருக்கும். இந்தத் தலைவலிக்கு முற்றுப்புள்ளி வைக்க, வாட்ஸ்அப் நிறுவனம் தற்போது ஒரு அட்டகாசமான புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
புதிய 'குரூப் சாட் ஹிஸ்டரி ஷேரிங்' (Group Chat History Sharing)
இந்த புதிய அப்டேட்டின் மூலம், ஒரு குரூப்பில் புதிதாக ஒருவர் இணையும்போது, அந்த குரூப்பின் அட்மின் (Admin) அல்லது மற்ற உறுப்பினர்கள், இதற்கு முந்தைய பழைய மெசேஜ்களை அந்த புதிய நபருடன் பகிர்ந்துகொள்ள முடியும். இதன் மூலம், குரூப்பில் என்ன விவாதம் நடந்துகொண்டிருக்கிறது என்பதை புதிதாக வந்தவரும் எளிதாகப் புரிந்துகொள்ள முடியும்.
இது எப்படி வேலை செய்கிறது?
• குரூப்பில் புதிய நபர் இணைந்தவுடன், பழைய மெசேஜ்களைப் பகிர்வதற்கான ஒரு 'ப்ராம்ப்ட்' (Prompt) திரையில் தோன்றும்.
• இதன் மூலம் சமீபத்திய 25 முதல் அதிகபட்சமாக 100 பழைய மெசேஜ்கள் வரை புதிதாக இணைந்த நபருடன் பகிர்ந்துகொள்ளலாம். எவ்வளவு மெசேஜ்களைப் பகிர வேண்டும் என்பதை நாமே தேர்வு செய்துகொள்ளலாம்.
• கட்டாயம் இல்லை: பழைய மெசேஜ்கள் தானாகவே (Automatically) புதிய நபருக்குச் சென்றுவிடாது. அட்மின் அல்லது உறுப்பினர்கள் அனுமதி கொடுத்தால் மட்டுமே பகிரப்படும். ஒருவேளை பழைய மெசேஜ்களைப் பகிர வேண்டாம் என அட்மின் நினைத்தால், இந்த வசதியை ஆஃப் (Off) செய்துகொள்ளலாம்.
பாதுகாப்பு மற்றும் பிரைவசி (Privacy)
பழைய மெசேஜ்களைப் பகிர்வதால் பாதுகாப்புக் குறைபாடு ஏற்படுமா என்ற கவலை வேண்டாம். வாட்ஸ்அப் நிறுவனம் இதற்கும் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் (End-to-End Encryption) பாதுகாப்பை வழங்குகிறது. அதாவது, குரூப்பில் உள்ளவர்கள் மட்டுமே அந்த மெசேஜ்களைப் படிக்க முடியும்; வாட்ஸ்அப் நிறுவனத்தாலோ அல்லது வேறு மூன்றாம் நபர்களாலோ படிக்க முடியாது.
மேலும், பழைய மெசேஜ்கள் பகிரப்படும்போது குரூப்பில் உள்ள அனைவருக்கும் ஒரு நோட்டிபிகேஷன் (Notification) காட்டப்படும். பகிரப்பட்ட பழைய மெசேஜ்கள் பார்ப்பதற்கு சற்று வித்தியாசமாக, நேரத்துடன் (Timestamp) மற்றும் யார் அனுப்பியது என்ற விவரத்துடன் தெளிவாகக் காட்டப்படும்.
யாருக்கெல்லாம் இந்த வசதி கிடைக்கும்?
இந்த அருமையான வசதி ஆண்ட்ராய்டு (Android) மற்றும் ஐஓஎஸ் (iOS) பயனர்கள் என இருதரப்பினருக்கும் தற்போது உலகளவில் வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் படிப்படியாக இந்த அப்டேட் பயன்பாட்டிற்கு வந்து கொண்டிருக்கிறது.
வேலை செய்யும் இடங்களிலும், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மத்தியிலும் நேரத்தை மிச்சப்படுத்தும் இந்த வசதியை நீங்களும் பெற, உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள ப்ளே ஸ்டோர் (Play Store) அல்லது ஆப் ஸ்டோரில் (App Store) வாட்ஸ்அப் செயலியை சமீபத்திய வெர்ஷனுக்கு அப்டேட் (Update) செய்துகொள்ளுங்கள்!
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

